இந்த காலத்து இணையதளம் மக்களுக்கு சம்பந்தமில்லாத விஷயங்களை தொடர்ந்து தாறுமாறாக காட்டிக்கொண்டு இருப்பதை தவிர்த்து மக்கள் எதனை தேடுகிறார்கள்? அல்லது மக்கள் எந்தவிதமான காணொளிகளை மிகவும் அதிகமாக பார்க்கிறார்கள் / அது சம்பந்தப்பட்ட காணொளிகளையே மறுபடியும் மறுபடியும் காட்டுவதன் மூலமாக இணையதளத்தில் அவர்களுடைய நேரம் அதிகமாகும் தங்களின் இணையதள சேவைகளை மக்கள் இன்னும் விரிவாக பயன்படுத்த முடியும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் செயல்படுகின்றன.
இதுவும் வியாபாரம் போன்றது தான். அதிகமான விற்பனை என்பது அதிகமான சந்தோஷம். ஆனால் வியாபாரிக்கு பெறக்கூடிய வாடிக்கையாளரான நமக்கு என்ன இருக்கிறது? ஆகவே வாடிக்கையாளரான நாம் தான் மிகவும் சரியான அளவில் எந்தெந்த பொருட்களை நாம் வாங்க வேண்டுமென்பதில் ஒரு முடிவை எடுக்கவேண்டும்.
நம்முடைய நேரத்தை நம் இணையதளத்துக்கான செலவு செய்கிறோம். அப்படி என்றால் நம்முடைய நேரத்துக்கு.மதிப்பு கொடுக்கக்கூடிய ஒரு பொருள் தான் நமக்கு கிடைக்க வேண்டும். நேரத்தை பொழுதுபோக்காக செலவழித்து அதன் மூலம் மதிப்பற்ற பொருட்களை வாங்குவதன் மூலமாக நம்முடைய மதிப்பும் மரியாதையும் எப்படி உயர்ந்துவிட முடியும்?
பணம் சார்ந்த விஷயத்திலும் நாம் இப்படித்தான் முடிவெடுக்க வேண்டும். பணத்தை நமக்கு மரியாதையை அதிகப்படுத்தாத எந்த பொருட்கள் நம் முதலீடு செய்தாலும்.அவைகள் அனைத்துமே நம்மை ஒரு பின்னடைவுக்குத்தான் கொண்டு செல்லும் அல்லவா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக