புதன், 22 அக்டோபர், 2025

இது உங்கள் வாழ்க்கையின் குரல் ! #2


தினமும் நன்றி கூறும் பழக்கம் என்பதை உருவாக்கிக்கொள்ளுங்கள். நன்றியுணர்வை மையமாகக் கொண்ட சிந்தனைகள் நேர்மறை நரம்பியல் பாதைகளை வலுப்படுத்தும். 

உங்களுடைய வருங்கால வெற்றியை மனதில் இப்போதே கற்பனை செய்யுங்கள். மனதளவில் பயிற்சி செய்வது உண்மையான செயல்பாடுகளைப் போலவே மூளை பகுதிகளைச் செயல்படுத்தும்.
 
எதிர்மறை எண்ணங்களை சவாலாக எடுத்துக்கொள்ளுங்கள். இந்த காலத்தில் உங்களை கட்டுப்படுத்தும் நம்பிக்கைகளை மாற்றி, உங்களுடைய பழைய சுய பிம்பத்தை அழித்து புதிய சுயபிம்பத்தை உருவாக்குங்கள். 

யோசித்து தெளிவான சாத்தியப்பாடு கொண்ட இலக்குகளை அமைக்குங்கள் – குறிப்பிட்ட இலக்குகள் உங்கள் மூளைக்கு திசையும் ஊக்கமும் தரும்.
உறுதியான உறுதிமொழிகளை பயன்படுத்துங்கள் நேர்மறை மனதை உருவாக்கும் வாக்குறுதிகளை மீண்டும் மீண்டும் கூறுவது புதிய நம்பிக்கைகளை உறுதிப்படுத்தும்.

 
சோம்பல் மற்றும் தனிமைப்பட்ட வாழ்க்கையின் அனுகூலத்தைவிட்டு வெளியே செல்ல தயங்காதீர்கள். வளர்ச்சி என்பது சவால்களை எதிர்கொள்வதில்தான். வளர்ச்சி மனநிலையை வளர்த்தெடுக்குங்கள் உங்களுடைய திறமைகள் முயற்சி மற்றும் கற்றலால் மேம்படக்கூடியவை என்ற நம்பிக்கையை வளர்த்தெடுக்குங்கள். சந்தோஷம் மற்றும் துக்கத்துக்கு பெரிதாக யோசனைகள் பண்ணாமல் நேரடியாக இறங்கி வாழ்க்கையின் முன்னேற்றத்துக்கு வேலையை பாருங்கள்.

 
மன அமைதியைப் பயிற்சி செய்யுங்கள். இப்படி கடந்த கால எதிர்கால யோசனைகளை துறந்து தற்போதைய தருணத்தில் இருப்பது உங்களுடைய மன அழுத்தத்தை குறைத்து கவனத்தை மேம்படுத்தும். பழைய பஞ்சாங்கம் பார்க்காமல் தினமும் புதியதை கற்றுக்கொள்ளுங்கள். இந்த புதுமை உங்களுடைய மூளையின் நெகிழ்வுத்தன்மையை தூண்டுகிறது.
 
நேர்மறை சூழலை உருவாக்குங்கள். இது கொஞ்சம் கஷ்டமான விஷயம்தான் உங்கள் சுற்றுப்புறம் உங்கள் பழக்கங்களைப் பாதிக்கிறது. மேலும் பல பணிகளை ஒரே நேரத்தில் செய்ய வேண்டாம். ஒரே பணியில் கவனம் செலுத்துவது மூளையின் கட்டுப்பாட்டுத் திறனை மேம்படுத்தும்.
 
கடினமான உடற்பயிற்சி நினைவாற்றல், மனநிலை மற்றும் மூளை செயல்பாட்டை மேம்படுத்தும். உங்களுடைய உடலின் தேவைக்காக நன்றாக உறங்குங்கள். உங்களுடைய தரமான தூக்கம்தான் நினைவுகளை உறுதிப்படுத்தவும் உணர்வுகளை சமநிலைப்படுத்தவும் உதவும்.
 
நம்முடைய மூளை வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்துக்கு தேவையான உணவுகள் சாப்பிடுவது நிறைய பேர் மிஸ் பண்ணும் பாயிண்ட்! நல்ல ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவு மூளையின் ஆரோக்கியத்தையும் ஆற்றலையும் மேம்படுத்தும்.
 
எப்போதுமே உங்களுடையாய சிறிய வெற்றிகளை கூட கொண்டாடுங்கள் சிறிய முன்னேற்றங்களை கவனித்து உங்களை நீங்களே பாராட்டுவது உங்களுக்கான ஊக்கத்தையும் நம்பிக்கையையும் வளர்க்கும்.
 
உங்களுடைய வாழ்நாளின் பெரிய தோல்வியை உங்களுக்கான ஒரு பாடமாக எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் செய்யும் தவறுகள் உங்கள் அணுகுமுறையை மேம்படுத்த உதவும். உங்களுடைய மனதை சீரமைப்பு செய்யுங்கள். எப்போதும் தினசரி எழுதுதல் அல்லது தியானம் மன குழப்பத்தை அகற்றும்.

 
உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் கோடீஸ்வரராக மாறவேண்டும் என்றால் உங்களை அன்புடன் அணுகுவது உங்களுடைய வாழ்நாளின் பணத்தை சம்பாதிக்கும் ரிஸ்க்குகளை எடுப்பதில் பதட்டத்தை குறைத்து மன உறுதியை வளர்க்கும். 

புதிய விஷயங்களை தெரிந்துகொள்ள ஆர்வத்துடன் இருங்கள், கேள்விகள் கேட்பதும் புதிய யோசனைகளை ஆராய்வதும் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்கும். எத்தனை முறை தோற்றாலும் பரவாயில்லை மீண்டும் மீண்டும் பயிற்சி செய்யுங்கள். உங்களுடைய தொடர்ச்சியான பழக்கம் மூளையில் புதிய நரம்பியல் இணைப்புகளை வலுப்படுத்தும்.

 

கருத்துகள் இல்லை:

GENERAL TALKS - நல்ல மக்கள் நல்ல வாழ்க்கை பெறுவார்களா ?

நல்ல மனதோடு இருக்க வேண்டும் என்று நினைக்கும் மனிதர்கள் - இவர்கள் செய்யும் பெரிய மிஸ்டேக் இதுதான் ! இவர்கள் மற்றவர்களின் பிரச்சினைகளை சரிசெய்...