வெள்ளி, 24 அக்டோபர், 2025

GENERAL TALKS - வணிக வெற்றியில் நண்பர்களின் அவசியம் !



வணிக சிந்தனை மற்றும் முடிவெடுக்கும் திறன்கள் இந்த காலகட்டத்தில் அனைத்து மக்களுக்கும் அடிப்படையில் தேவை. வணிகத்தில் சரியான நிலையில் உள்ள நண்பர்கள் மட்டுமே நம் வாழ்வில் இருக்க வேண்டும். நண்பர்கள் நமக்காக இணைந்து பணியாற்றக்கூடியவர்களாகவும், நமது முன்னேற்றத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாகவும் இருக்கக்கூடியவர்களாகவும் இருக்க வேண்டும். இல்லையெனில், நமது செலவுகளை அதிகரிப்பவர்கள் நண்பர்களாக இருக்க மாட்டார்கள். நம் வாழ்க்கை, கற்றுக்கொள்வதும், ஒன்றாக வேலை செய்வதும் பற்றியதாக மாறி வருகிறது. நமக்குத் தெரிந்ததை நம் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வது போல இருக்க வேண்டும். அப்படி இருக்கக்கூடிய நட்புகள் மட்டுமே நமது வளர்ச்சிக்கு மட்டுமல்ல, நமது குடும்பத்திற்கும், நமது சமூக வளர்ச்சிக்கும் உதவும். அவை பயனுள்ள நட்பு வட்டங்களாக இருக்கும். சமூகத்திலிருந்து தனிமைப்பட்ட அல்லது எல்லோரையும் வெறுக்கக்கூடிய ஒரு தனித்த மனநிலையோடு மட்டுமே வாழக்கூடிய ஒரு மனிதர் என்றைக்குமே நல்ல நண்பராக இருக்க இயலாது.ஒரு வாழ்க்கை என்பது சமூகமாக இணைந்து வாழ்பவர்கள் உடைய.கருவியாகவே இருந்திருக்கிறது. தவிர்த்து தனித்து வாழ்பவர்கள் தங்களுடைய சுய நலத்துக்காக தங்களை சுற்றியுள்ள உலகம் மாற வேண்டும் என்று நினைப்பவர்கள் கடைசி வரையில் நிறைவேறாத ஆசைகளோடு தான் இருக்கப் போகிறார்கள். ஒரு வேலையைச் செய்து பணம் சம்பாதிப்பது என்பது எப்போதும் தனிப்பட்ட போராட்டத்தின் மூலம் அடையக்கூடிய ஒன்றல்ல. நமது உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கும்போதுதான் நாம் நன்றாகப் பணம் சம்பாதிக்க முடியும். எனவே, நல்ல ஆரோக்கியத்தை மேம்படுத்த நம்மைச் சுற்றி நல்ல மனிதர்கள் இருப்பது அவசியம். மற்ற துறைகளில் வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் நீங்கள் வணிகம் போன்ற ஒரு துறையைத் தேர்வுசெய்தால், உங்களைச் சுற்றி மக்கள் இருப்பது அவசியம். ஒரு தனி நபர் வணிக வெற்றியை அடைவது கடினம்.

கருத்துகள் இல்லை:

GENERAL TALKS - 001

நம்பிக்கை என்பது வாழ்க்கையில் மிக முக்கியமான ஒரு கருத்து. நம்பிக்கை இல்லையென்றால், நம்மைச் சுற்றியுள்ள மக்கள் மீதோ, நாம் எடுக்கக்கூடிய செயல்...