இந்த படத்துக்கு கதையில் திரைக்கதையில் நல்ல புத்திசாலித்தனம் இருக்கிறது குறிப்பாக கடினமான காவல் அதிகாரியாக ஒரு குறிப்பிட்ட சிட்டுவேஷனை வந்துவிட்டால் அந்த சிட்டுவேஷனை எப்படி சமாளிப்பது என்பதற்காக ஒரு அனுபவம் மிக்க ஒரு அதிகாரியாக இருந்து அந்த இடத்தை கட்டுப்பாட்டில் கொண்டு வருவதும் சாமர்த்தியமாக திட்டங்களை நகர்த்துவதும் மிகவும் குறைவான சேதத்தில் மக்களாக இருப்பவர்களை அனைவரையும் காப்பாற்றுவதற்காகவும் இருக்க கூடிய நேரங்களில் மிரட்டல் நிறைந்த ஆக்ஷன் காட்சிகள் என்று முடிச்சுகள் நன்றாக இருக்கிறது.
ஆனால் இந்த படத்தில் இருக்கக்கூடிய பிரச்சனை என்னவென்றால் இந்த படம் முழுவதுமே ஒரே குறிப்பிட்ட கதைக்குள்ளே கடினமாக அடைந்து கிடக்கக்கூடிய திரைக்கதையாக இருப்பதால் இந்த படத்தை ஆரம்பத்தில் அவ்வளவாக புதிய விஷயமாக கருத முடியவில்லை. கதை போகபோகத்தான் இன்வெஸ்டிகேஷன் தகவல்களை அலசி ஆராய்ந்து பார்க்கவே மங்காத்தா படம் போல காவல் துறையே குற்றங்களை அதிக்கப்படுத்த துணைபோன சதிகள் வெளியே வந்து ஒரு ஆக்ஷன் படத்துக்கான அர்த்தத்தை இந்த படம் கொடுத்து இருக்கிறது என்றே சொல்லலாம்.
சண்டைகள் , மோதல்கள், பரபரப்பு என்று ஒரு க்ரைம் இன்வெஸ்டிகேஷன் படத்தை வேற லெவல் ஆக்ஷன் பின்னணிக்குள்ளே எடுத்து இருப்பதால் உங்களுக்கு ஆக்ஷன் படங்கள் பிடிக்கும் என்றால் இந்த படத்தை கண்டிப்பாக உங்களுடைய பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம். மறைந்த முன்னாள் நடிகர் சாட்விக் போஸ்மென் தரமான நடிப்பு திறனை வெளிப்படுத்தி ஒரு நல்ல படைப்பை கொடுத்து இருக்கிறார் என்றே சொல்லலாம் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக