சனி, 25 அக்டோபர், 2025

GENERAL TALKS - மனதே மாயத்தில் மயங்கிவிடாதே !



வயதான எல்லோரையும் கேட்டுப் பாருங்கள். பணம் பொருள் என்பதை விடவும் மன அமைதியைத்தான் அவர்கள் அதிகமாக விரும்புகிறார்கள் அமைதி இல்லாத வாழ்க்கை என்பது ஒரு மனிதனால் தேர்ந்தெடுக்கபடும் ஒரு விஷயம்தான். ஒரு மனிதன் அமைதியான வாழ்க்கையை விரும்பினாலும், எந்த நிலையிலும் தனது இயலாமையையும் அறியாமையையும் தங்களின் வாழ்க்கையில் வளர அனுமதிக்கக்கூடாது.

தன்னால் முடிந்தவரை எல்லாவற்றையும் செய்ய எப்போதும் தயாராக இருக்க வேண்டும். அதே நேரத்தில், அவனது அறிவு மிகவும் விரிவானதாகவும் அனுபவம் நிறைந்ததாகவும் மாற்றப்பட வேண்டும். 

இந்த அடிப்படை விஷயங்களைப் பற்றிக் கூட சிந்திக்கத் தவறியதால், பலர் வாழ்க்கையில் கஷ்டத்திலும் கண்ணீரிலும் மூழ்கிக் கிடக்கிறார்கள்.

நம் எதிர்காலத்திற்கான திட்டங்களையும், கனவுகளையும் யாருக்காகவும் விட்டுக்கொடுக்கக் கூடாது. அது யாருக்காகவும், குறிப்பாக நமக்காகவும் கூட விட்டுக்கொடுக்க கூடாது. நம் சொந்த விருப்பத்தின் பேரிலும் கூட கனவுகளை விட்டுக்கொடுப்பது ஏற்புடையது அல்ல. 

நமது எதிர்காலத் திட்டங்களும் கனவுகளும் நம் உடலின் பாதுகாப்பை மையமாகக் கொண்டவை. வருங்காலம் என்ற ஒரு விஷயத்தில் நமது மனம் என்ன சாதிக்கப்போகிறது? 

மனம் ஆசைப்பட்ட எல்லா விஷயத்தையும் அடைய முயற்சிக்கிறது. இந்த விஷயத்துக்கு நாம் எப்போதுமே உடன்பாடு கொடுக்க கூடாது இந்த விஷயங்களுக்கு நாம் உடன்படவில்லை என்றாலும், எதிர்காலத்தில் நம் உடல் பாதுகாப்பாக இருக்கும். அப்போதுதான் நமக்கு சரியான அளவு வெற்றியும் பலமும் வரும். 

பலர் பணம் சம்பாதித்து தங்கள் உடல்நலத்தை இழக்கிறார்கள், இதனால் அவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடமிருந்து விமர்சனங்களைப் பெறுகிறார்கள். எனவே கவனமாக இருங்கள். நமது உடலின் ஆரோக்கியத்தை மிக முக்கியமான மற்றும் முன்னுரிமையான விஷயமாகக் கருதுங்கள். அது நமது வாழ்க்கையை மேம்படுத்தும்.

கருத்துகள் இல்லை:

GENERAL TALKS - ஆதாரமற்ற நம்பிக்கைகள் எதுக்கு ?

மூடநம்பிக்கைகளைப் பற்றி நாம் பேச வேண்டும். மூடநம்பிக்கைகள் நம் வாழ்வின் ஒரு பகுதியாகும். இந்த மூடநம்பிக்கைகளால் மக்களுக்கு பல நல்ல வாய்ப்புக...