வியாழன், 30 அக்டோபர், 2025

GENERAL TALKS - வாழ்க்கை முன்னேற்ற கருத்துக்கள் #1




நம் வாழ்வில் எத்தனை சிரமங்களை எதிர்கொண்டாலும், நம் வாழ்க்கையை நாம் சிறந்த முறையில் நகர்த்திக் கொண்டிருக்கிறோம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 

எனவே, நம் வாழ்க்கை நன்றாகப் போகிறதா என்று யாராவது கேட்டால் பதிலாக நம் வாழ்க்கை நன்றாகப் போகிறது என்று சொல்ல வேண்டும். இப்படி நம் வாழ்க்கை நன்றாக சிறப்பானதாக நிறைய நல்ல விஷயங்களோடு போகிறது என்று சொல்வது வாழ்க்கையின் பாசிட்டிவிட்டியை அதிகரிக்கும் !

உண்மையாக நம் வாழ்க்கையில் நாம் சிரமங்களை எதிர்கொள்கிறோம் என்றாலும் நல்ல விஷயங்களை மட்டும்தான் அவர்களிடம் சொல்ல வேண்டும். 

எப்போதுமே நாம் யோசித்து ஒரு முடிவை எடுக்க வேண்டும். போதுமான யோசனைகள் இல்லாமல் முடிவுகளை எடுப்பது நமக்கு சிரமத்தை தான் கொடுக்கும். இப்படி அவசர அவசரமாக முடிவுகளை எடுத்ததால் வாழ்க்கையை கேள்விக்குறியாக இருக்கக்கூடிய மனிதர்களையும் நாம் பார்க்கத்தான் செய்கிறோம்

யாரை நம்புவது என்பது நம் வாழ்க்கையின் மிகவும் கடினமான கேள்வி. இருந்தாலும் ஆரம்பத்தில் தட்டு தடுமாறும் மனது ஒரு கட்டத்தில் சிறப்பான கம்யூனிகேஷன் உருவாக்கிக்கொண்ட பின்னால் வெற்றி மேல் வெற்றிகளாக அடைகிறது . இந்த மன மாயாஜாலத்தை பற்றி நீங்கள் இதைப் பற்றி யோசித்துப் பார்த்தால், இந்த மாயாஜாலம் நம் கடின உழைப்பு இல்லாமல் நடந்திருக்காது.

நாம் தினமும் எண்ணற்ற மக்களுடன் நம் வாழ்க்கையைச் செலவிடுகிறோம். நேரத்தை செலவழிக்க இந்த காரணம் மட்டும் இல்லாமல், நம் வாழ்க்கையில் பொழுதுபோக்கு விஷயமும் இருக்கிறது. இவை அனைத்தும் எப்போதும் உணர்ச்சிபூர்வமான முடிவுகளை எடுக்கவும், யாரையும் குருட்டுத்தனமாக நம்பவும் நம்மைத் தூண்டுகின்றன. 

ஆனால் நாம் எப்போதும் நம் புத்திசாலித்தனத்தின் அடிப்படையில் நமது முடிவுகளை எடுக்க வேண்டும். யாரையும் நம்புவதையோ அல்லது யாரையும் அதிகமாகச் சார்ந்திருப்பதையோ தவிர்க்க வேண்டும். 

தன்னம்பிக்கை என்பது வாழ்க்கையின் மிக அடிப்படையான தரம். ஒரு நபர் ஒரு தனிநபராக தனது பிரச்சினைகளைத் தானே தீர்க்கவில்லை என்றால், அவர் தனது பிற்கால வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகளைச் சந்திப்பார். மட்டுமல்ல. இதனுடன் சேர்ந்த தன்னிறைவும் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான கருத்தாகும்

இந்த வேகமான உலகில், சமூக  கலந்தாலோசனைகள் அல்லது சமூகத்திலிருந்து கிடைத்த அனுபவங்கள் பொறுத்து முடிவுகளை எடுப்பது மிகவும் அடிப்படையான விஷயம். 

நாம் எல்லா முடிவுகளையும் தனிப்பட்ட முறையில் மட்டுமே எடுத்தால், சமூகத்தில் இருக்கக்கூடிய மக்களிடமிருந்து போதுமான கற்றல் மற்றும் அனுபவங்கள் கிடைக்காமல் இருப்பதால் நமது அறிவுத்திறன் குறைந்துவிடும் அபாயம் உள்ளது.

இந்த கருத்தையும் நம்ம சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் இண்டெலிஜன்ஸ் இருந்தால் நமக்கு எல்லாமே கிடைக்கும் இண்டெலிஜன்ஸ் இல்லை என்றால் நம்மிடம் இருப்பவைகளும் பறிபோய்விடும். சந்தோஷத்தை வாழ்க்கையில் தேடுபவர்களை விட சாமர்த்தியமான வாழ்க்கையை வாழ்ந்து நிறைவை வாழ்க்கையில் தேடுபவர்கள் மிகவும் சிறப்பான நிலையை அடைவார்கள்.

கருத்துகள் இல்லை:

GENERAL TALKS - பணம் சார்ந்த விஷயங்களில் முடிவெடுக்கும்போது கவனம் !

நிறைய நேரங்களில் பணம் சார்ந்த விஷயங்களில் கவனமாக முடிவெடுப்பதை மறந்து விடுகிறோம். பணம் நம்மிடம் அதிகமாக இருக்கும் பொழுது நம்முடைய யோசனைகள் ம...