நம்முடைய வாழ்க்கையில் முயற்சிகள் என்பது முக்கியமானது. ஒரு நாளுக்கு 1 சதவித முயற்சி அதிகரிப்பு என்பது 365 நாளுக்கு கிட்டத்தட்ட மூன்றரை மடங்கு நம்முடைய வேகத்தையும், சக்தியையும் அதிகப்படுத்தியிருக்கும்.
ஆகவே முயற்சிகளை தான் நீங்கள் வாழ்க்கையின் சரியான பாதையாக திட்டமிட வேண்டும்.முயற்சிகளை நீங்கள் கைவிட்டுவிட்டால் அல்லது வாழ்க்கையில் நீங்கள் உங்களுக்கான சரியான ஸ்டீல் போன்ற மனதை உருவாக்க தவறி விட்டால் நீங்கள் பின்னாட்களில் மிகவும் அதிகமாக கஷ்டப்படுவீர்கள்.
கடின உடற்பயிற்சி என்பது கட்டுமஸ்தான உடற்கட்டுக்காக மட்டுமே அல்ல நம்முடைய உடலை சரியான அளவில் வேலை கொடுத்து பயன்படுத்திக் கொண்டு மிக சரியான ஃபார்மில் வைத்திருப்பதை விட சொந்த வாழ்க்கையில் மனித இனத்துக்கு முக்கியமான விஷயம் என்பது வேறு என்ன இருக்கிறது?
இந்த விஷயத்துக்காக நாம் ஒரு நாள் ஆசைப்பட்டால் மட்டும் கிடைத்துவிடுமா? நாம் தான் இறங்கி உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஜெயித்து காட்டியவர்கள் வாழ்க்கையில் மிக அதிகமான தகவல்கள் இருக்கிறது. நீங்கள் இவற்றையெல்லாம் படித்து பார்த்திருக்கிறீர்களா ?
அதேபோலத்தான் மற்றவர்களின் விருப்பத்தின்படி மற்ற மனிதர்களை சூழ்நிலைகளை கட்டுப்படுத்துவதன் மூலமாக மட்டும் சாதிக்க கூடிய விஷயம் என்று எல்லா விஷயங்களிலும் வாழ்க்கை இருக்கப்போவது இல்லை. உங்களுடைய விருப்பத்தின் பெயரில் நீங்களாக இறங்கி செய்யக்கூடிய விஷயங்களும் நிறைய இருக்கின்றது.
ஒரு பிரபல யூடியூபர் தனது வெற்றியின் ரகசியம் என்ன என்று கருத்துப் பகுதியில் கேட்டபோது, அவர் ஒரு பதிலைச் சொல்கிறார். சாலையில் நடந்து செல்லும் போது ஒரு பெட்டி தென்பட்டதாக கூறுகிறார். திறந்து பார்க்கும்போது ஒரு பெட்டி நிறைய பணம் இருப்பதாகக் கூறினார். அந்தப் பணத்தை எடுத்துக்கொண்டு இவ்வளவு முன்னேற்றம் அடைந்ததாகக் கூறினார்.
கஷ்டப்படாமல் சொந்தமாக வேலை பார்க்காமல் வாழ்க்கையில் மாற்றங்கள் எதுவும் நடக்கப்போவதில்லை என்பதற்கான சுருக்கமான விளக்கமே இந்த நகைச்சுவைப் பகுதி. அப்படி ஏதாவது ஒன்றைப் பெற வேண்டுமென்றால், நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக