சமீப காலமாக, வெவ்வேறு இடங்களிலும், வெவ்வேறு கஷ்டங்களிலும் தங்களைக் காட்ட செயற்கை நுண்ணறிவால் மேம்படுத்தப்பட்ட பதிவுகளை சமூக ஊடகங்களில் பகிர்வதன் மூலம் குடும்பங்கள் மகிழ்ச்சியைத் தேடுவதை நாம் உணர முடிகிறது.
இது ஒரு நல்ல விஷயம்தான். இருப்பினும், செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு நமது தேவைகளை மீறுகிறதா என்ற கேள்வி எழுகிறது.
உதாரணமாக ஒரு காதலர் தன்னுடைய காதலியை இம்ப்ரஸ் செய்வதற்காக கவிதைகளை எழுதுவதில் இருந்து ஆச்சர்யப்படுத்த முறையாக சர்பரைஸ் செய்வது முறை என்னென்ன? காதலியின் மனம் கவர செயல்களை எப்படி எப்படி செய்யலாம் என்பதை ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் மூலம் கேட்டு தெரிந்து கொண்டு காதலுக்கான ஐடியாவை கேட்கும் ஐடியா மணியைப் போல ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ்ஸயை பயன்படுத்திக் கொண்டு இருப்பது காமெடியாக இருக்கிறது.
இருந்தாலுமே இந்த காதல் திருமணம் என்ற விஷயங்களில் ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் கொடுக்கும் பதில்கள் போதுமான அளவுக்கு நடைமுறையில் நடக்கக்கூடிய குடும்ப பிரச்சனைகளை சரிசெய்யக்கூடிய விஷயங்களாகத்தான் இருக்கிறது.
இதனை நிறைய ஊடகங்களும் சில நேரங்களில் காமெடி செய்து வைத்திருந்தாலும் உண்மையான சம்பவங்கள் நடக்கும் விதத்தில் பார்க்கும்பொழுது இண்டெலிஜன்ஸ் நிறைய புத்தகங்களை படித்து வைத்திருக்கிறது என்பதால் ஒரு வாழ்க்கையில் ரிலேஷன்ஷிப் அட்வைஸை என்பதை எப்படி கொடுக்க வேண்டும் என்பது மிகவும் சரியானதாக படித்து வைத்துள்ள புரிதல் இருப்பதால் நிறைய பாராட்டுகளை அள்ளிக் கொட்டுகிறது.
இருந்தாலும் வருங்காலத்தில் ஒரு காதலி ஒரு காதலனைப் பார்த்து சொந்தமாக யோசித்து உங்களால் என்னை இம்ப்ரஸ் செய்ய முடியாதா ? என்று ஒரு கேள்வியை கேட்டுவிட்டால் வரக்கூடிய தர்மசங்கடம் என்னவாகுமோ என்று நினைக்கும்போது கவலைக்கிடமாகத்தான் இருக்கிறது !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக