வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் இடம்பெற்றுள்ள சிவனாண்டி என்ற கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் மக்களிடம் வரவேற்பை பெற்றது. இந்த கதாபாத்திரத்தைப் பற்றி நடிகர் சத்யராஜ் அவர்களிடம் ஒரு கட்டத்தில் கேட்டபோது அவர் சொன்ன பதில் இதுதான்
சிவனாண்டி கதாபாத்திரம். சமீபத்தில் அவருக்கு மிகவும் பிடித்து நடித்த சகப் பாத்திரமாக இருக்கிறது. சத்யராஜ் ஒரு கதாபாத்திரத்தை எதிர்பார்த்து மனதுக்குள் வைத்திருந்தார். அதாவது வில்லனாகவும் இருக்கணும். ஆனால் வில்லனாக இருக்க கூடாது. நகைச்சுவை செய்வது போல இருக்க வேண்டும் ஆனால் நகைச்சுவை மட்டுமே செய்யவும் கூடாது.ஒரு அப்பாவாக கடினமான கதாப்பத்திரமாக நடிக்கணும் ஆனால் கெத்து குறைந்த அப்பாவாக நடிக்க கூடாது என்பது போன்ற ஒரு விருப்பத்தை அவர் எப்போதும் வைத்திருந்தார்.
அது போன்ற கதாபாத்திரங்கள் பெரும்பாலும் கிடைக்கவே இல்லை. ஆனால் இந்த கதாபாத்திரத்தில் நடிக்கும் பொழுது அவருடய தனிப்பட்ட எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு இந்த கதாபாத்திரத்தில் நிறைய விஷயங்கள் இருந்ததால் இந்த கதாபாத்திரம் அவருக்கு பிடித்தமான கதாபாத்திரமாக அமைந்திருந்தது என்று அந்த நேர்காணலில் சொல்லி இருப்பார்.
இந்த விஷயத்தில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது. திரைப்படங்களில் நடிப்பதைப் பொறுத்தவரையில் நமக்கு பிடித்ததாக ஒரு கதாபாத்திரம் நமக்கு கிடைக்கும் போது அதனை நடித்துக் கொடுக்கும் போது மக்களிடம் அந்த கதாபாத்திரத்துக்கு நல்ல விமர்சனங்களும் கிடைத்து விடும்.
என்னதான் நமக்கு புதுமையான விஷயங்களுக்கு.அதிகமான ஆர்வம் இல்லை என்றாலும், திரைப்படங்களைப் பொறுத்தவரையில் ஒரு கதாபாத்திரத்தை எடுத்துக்கொண்டால் அந்த கதாபாத்திரங்களை நன்றாக ரிசல்ட் செய்து அந்த கதாபாத்திரத்தை பிடித்து தான் நான் நடிக்க வேண்டும் என்ற ஒரு மனநிலையை ஏற்படுத்திக் கொள்வது ஒரு நடிகராக அனைவருக்கும் நல்லது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக