சனி, 4 அக்டோபர், 2025

「 ✦ ​🇬​​🇪​​🇳​​🇪​​🇷​​🇦​​🇱​ ​🇹​​🇦​​🇱​​🇰​​🇸​ ✦ 」- #19

 


நிலைமைகள் நம்முடைய கட்டுப்பாடுகளை மீறி சென்றுவிட்டது. வாழ்க்கை நிறைய விஷயங்களை கற்றுக்கொடுக்கும் அந்த வகையில் ஒரு முக்கியமான விஷயம்தான் அதிர்ஷ்டம் நம்மோடு இருக்கவேண்டும் என்பதாகும், நாமும் எவ்வளவோ போராடலாம் ஆனால் அதிர்ஷ்டம் இல்லை என்றால் இந்த உலகத்தில் எதுவுமே நமக்கு கிடைக்காது. நம்முடைய போராட்டங்கள் கடலில் கலக்கும் நதியை போல பயனற்ற விஷயமாக மாறிவிடும், பெரும்பாலான நேரங்களில் அதிர்ஷ்டம் என்பது நல்ல வழியை அல்லது கெட்ட வழியை தேர்ந்தெடுப்பது குறித்த ஒரு செயல்பாடாக இருக்காது. உண்மையில் அதிர்ஷ்டம் என்பது யார் எந்த வழியை தேர்ந்தெடுத்தாலும் சப்கான்ஸியஸ மனதுக்குள்ளே நின்றுகொண்டு இருக்கும் ஒரு விஷயமாக மட்டுமே அமைகிறது. எப்படி சப்கான்ஸியஸான மனது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளில் இருக்கும் நேர்மை அல்லது நியாயத்தை கணக்கில் எடுக்காமல் நல்ல செயல்களாக இல்லாமல் கெட்ட செயல்களாக இல்லாமல் இரண்டுக்குமே இடைப்பட்ட விஷயமாக இருக்கிறதோ அதுபோலவே சப்கான்ஸியஸ மனது போல அதிர்ஷடமும் இந்த காலத்து கொடியொருக்கு சாதகமாக அமைகிறது. நல்லோரை நாசமாக மாற்றுவதுக்கு அதிர்ஷ்டம் முக்கியமான பங்கு வகிக்கிறது. எல்லாமே நம்முடைய கைகளை மீறி சென்றுவிடுகிறது. யாருமே நம்மை கண்டுகொள்வது இல்லை. இந்த விஷயங்களுக்கு பிரபஞ்ச சக்தியாளர்களே காரணமாக அமைக்கிறார்கள் என்பது வருத்தமான நடைமுறை உண்மை. வலியும் வேதனையும் நிறைந்த உலகத்தில் பிரபஞ்ச சக்தியாளர்கள் சந்தோஷத்தை எதிர்பார்த்தே எல்லா விஷயங்களையும் செய்கிறார்களா ? நடப்பவை அனைத்துமே தப்பான திசையில் சென்றுக்கொண்டு இருப்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. சக்திகள் குறைக்கப்பட்டு ஒரு மனிதன் இருக்கும்போது அவன் சந்திக்கும் போராட்டங்கள்தான் உண்மையில் பயங்கரமானது, ஒரு கட்டுமஸ்தான மனிதர் 15 கிலோ மூட்டைகளை நகர்த்துவதுக்கும் ஒரு மெலிந்த மனிதர் 10 கிலோவை நகர்த்தி செல்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது. வலிமை உடலிலும் உள்ளத்திலும் இருக்க வேண்டும். இப்போது உலகம் சந்திக்கும் விஷயங்கள் அனைத்துமே கடினமான நேரங்கள் என்றே சொல்லலாம். இந்த கடினமான நேரங்களில் சரியான செயல்களை செய்வது இன்னமும் கடினமானது. 

கருத்துகள் இல்லை:

generation not loving music