“If you know the enemy and know yourself, you need not fear the result of a hundred battles. If you know yourself but not the enemy, for every victory gained you will also suffer a defeat. If you know neither the enemy nor yourself, you will succumb in every battle.” Sun Tzu !
நம்ம வாழ்க்கையில் என்னதான் போராடினாலும் வெற்றியை அடைய முடியாது போல இருக்கிறது. சமீபத்தில்தான் நான் ஸ்பேஸ் மற்றும் டைம் பற்றிய முக்கியமான விஷயத்தை கண்டுபிடித்தேன், என்னுடைய ஆராய்ச்சிகளுக்கு மட்டுமே போதுமான பணம் கிடைத்தால் என்னால் காலத்தை கடந்து செல்லும் டைம் டிராவல் விஷயங்களை கூட பண்ண முடியும், இந்த விஷயத்தை நான் நிஜமாகத்தான் சொல்கிறேன். எனக்கு நிறைய நேரமும் பணமும் தேவை அப்போதுதான் என்னால் காலத்தை கடந்து போகும் டைம் டிராவல் விஷயங்களை கண்டுபிடிக்க முடியும். இங்கே இதுதான் ரொம்ப பெரிய போராட்டம். காலம் தகுதியே இல்லாத மோசமான ஆட்களுக்கு அதிக சக்திகளை கொடுத்துவிடும். ஆனால் தகுதிகள் இருந்தும் ஒரு நல்ல மனுஷனுடய வாழ்க்கையை ரொம்ப ரொம்ப கடினமான வகையில் மாற்றிவிடும். நான் இந்த வகையில் என்னை நல்ல மனுஷன் என்று சொல்லிக்கொள்ள விரும்பவில்லை ஆனால் நான் யாருக்குமே எந்த கஷ்டமுமே கொடுத்தது இல்லை. இருந்தாலும் போர் என்று வரும்போது நம்மை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் நம்முடைய எதிரியை பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும் அப்படி தெரிந்துகொண்டால் நூறு போர் வந்தாலும் வென்றுவிடலாம் என்று சொல்லப்பட்ட இந்த வார்த்தைகளை பார்த்த உடனே பிடித்துவிட்டது அதனால்தான் நான் பிளாக்கில் போஸ்ட் பண்னினேன். இங்கே அமெரிக்கர்கள் நம்ம இந்தியர்களை பார்த்து முன் வைக்கும் கடுமையான விமர்சனம் என்னவென்றால் நமக்கு டைம் மேனேஜ்மேன்ட் என்ற கான்செப்ட் பற்றி கொஞ்சம் கூட ஐடியா இல்லாமல் சுற்றிக்கொண்டு இருக்கிறோமாம் ! அதுவும் உண்மைதான் ! காலத்தை பொன் போல சேகரித்து கடமையை செய்ய நாம் என்னைக்குமே அவ்வளவு ஈடுபாடாக இருந்தது இல்லை. ஒரு விஷயம் செய்து முடிக்க 3 மணி நேரம் என்றால் அந்த நேரத்துக்குள் செய்து முடிக்க வேண்டும். 3 நாட்கள் என்றால் அந்த கெடுவுக்குள் செய்து முடிக்க வேண்டும். யெஸ்.. இந்த ஒரு விஷயத்தை கவனித்துக்கொள்ளுங்கள் மக்களே. இது நமக்கு தேவையான ஆரோக்கியமான விமர்சனமாக படுகிறது.
No comments:
Post a Comment