Monday, November 27, 2023

GENERAL TALKS - உணவும் உடல்நலமும் ! - BE CAREFUL ON EATING PROCESS

 நீங்கள் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து பணம் சம்பாதித்தாலும் சரி , இல்லையென்றால் வீடியோ கேம்கள் விளையாடி அவைகளை ஸ்ட்ரீம் பண்ணி பணம் சம்பாதித்தாலும் சரி , உங்கள் உடல் நலத்துக்கு அக்கறையோடு எப்போது சாப்பிட்டு இருக்கிறீர்கள். இங்கே எனக்கு தெரிந்து நிஜ வாழ்க்கையில் உடல் நலத்தை கெடுத்துக்கொண்டு வேலையில் கவனம் செலுத்துபவர்கள் இருக்கிறார்கள். அடிப்படையில் இது ஒரு தப்பான டேஸிஷன். சரியான முடிவு எடுப்பவர்கள் உடல் நலத்தில் அக்கறை வைத்து வேளாவேளைக்கு நன்றாக சாப்பிட்டுவிட்டு சிறப்பாக இருக்கிறார்கள்.  நன்றாக சாப்பிடுபவர்கள் மட்டும்தான் வெற்றியை அடைகிறார்கள். அதுவுமே தரமான உணவை சாப்பிட வேண்டும். உணவுடைய சத்துக்கள் மற்றும் இரசாயன கலப்பு இம்பாக்ட் என்பது தனியாக இன்னொரு பெரிய கான்செப்ட் அதை நான் இன்னொரு போஸ்ட்டில் சொல்கிறேன். தரமான உணவை சாப்பிட வேண்டும் தரமற்ற ஃபேன்ஸி உணவுகளை சாப்பிட கூடாது என்ற கான்செப்ட் ஒன்றும் இந்த காலத்து கான்செப்ட் இல்லையே. காலகாலமாக இருக்கும் கான்சேப்ட் தானே அதில் என்ன புதுமை என்றால் இந்த காலத்தில் பதப்படுத்தப்பட்ட நச்சு உணவுகள் இருக்கிறது. இவைகளை நாம் உடலுக்குள் சேர்த்துக்கொண்டால் ஃபேன் வோடவில்லை என்று காப்பர் காயில்லில் தேங்காய் எண்ணையை விட்ட கதைதான் நடக்கும். உடம்பு பழுது ஆகிவிடும். இந்த உலகத்தில் நம்ம உடம்பு மட்டும்தான் ஸ்பேர் பார்ட்ஸ் கிடைக்காத ஒரு அருமையான மெஷின் . அதனால் காசு இருக்கிறது என்பதற்காக கண்டதை வாங்கி சாப்பிட வேண்டாம். அப்படியே இயற்கை உணவு என்றாலும் அளவுக்கு அதிகமாக சாப்பிட வேண்டாம். இயற்கை உணவு என்ன பண்ணப்போகிறது என்று கேட்டால் ஒரு உதாரணத்துக்கு வேகவைத்த உருளைக்கிழங்குகளை உப்பு அதிகமாக போட்டு ஒரு கால் கிலோ சாப்பிட்டு பாருங்கள். உங்கள் பெருங்குடல் உப்பிப்போவதால் கார்பன் டை ஆக்ஸைட் வாயுக்களை உருளைக்கிழங்கு அதிகரிக்கும் அபாயம் உள்ளது. அதனால் இயற்கை உணவும் ஒரு அளவுக்குதான் சாப்பிட வேண்டும். கேரட்டை பச்சையாக சாப்பிட கூடாது. காரணம் என்னவென்றால் கேரட் ஒரு கிழங்கு வகை தாவரம். பச்சையாக சாப்பிடும்போது மண்ணுக்கடியில் புதைந்து இருந்த காரணத்தால் கேரட்டில் வேர் வகை பாக்டீரியாக்கள் இருப்பதால் இவைகள் உடல்நலத்துக்கு ஆபத்தானது. இன்னும் நிறைய டிப்ஸ் இருக்கிறது. RO குடிநீர் பயன்படுத்தாமல் சாதாரண குடிநீர் குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் கணிசமான கிடைக்கும் மேலும் ஜின்க் , கால்சியம், மெக்னிஷியம் போன்ற மினரல்ஸ் சத்துக்களும் நம்முடைய உடலுக்கு கிடைக்கும். உங்களுடைய உடலுக்கு தேவையான சத்துள்ள உணவுகளுக்கும் உடல் நலத்துக்கு தேவையான பொருட்கள் இருக்கும் உணவுகளுக்கும் மட்டுமே முக்கியம் கொடுக்க வேண்டும். உணவு என்பது என்னைக்குமே விளையாட்டான விஷயம் இல்லை மக்களே. அது உங்களுடைய உடலை பழுதுபார்த்துக்கொள்ள உள்ளுறுப்புகளுக்கு நீங்கள் கொடுக்கப்போகும் சக்தி. உங்களுடைய வயிற்றுக்குள் என்ன போகிறது என்பதில் நீங்கள்தான் கவனமாக இருக்க வேண்டும் !

No comments:

Post a Comment

CINEMA TALKS - MISSION IMPOSSIBLE GHOST PROTOCOL - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

சொந்த நாட்டின் பாதுகாப்புக்காக வெளிநாட்டில் தங்களுடைய உயிரை பணயம் வைத்து மிஷன்னை முடிக்க வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள் கதாநாயகன் ஈதன் மற...