Tuesday, November 21, 2023

CINEMA TALKS - THE HEIST OF THE CENTURY - TAMIL REVIEW - திரை விமர்சனம் !


சாரதரணமான ஒரு நகர்ப்புற பகுதியில் ஒரு சராசரியான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு இருக்கும் ஒரு மனிதர் ஒரு தனியார் வங்கியை பார்க்கும்போது கொள்ளையடிக்க வேண்டும் என்று ஒரு ஐடியா கிடைக்கிறது. ஒரு ஐடியாதான் உலகத்தையே மாற்றிவிடும் என்று சொல்கிறார்களே , நம்ம வாழ்க்கையை மாற்றாதா ? என்று மாட்டிக்கொண்டாலும் பரவாயில்லை என்ற நம்பிக்கையில் ஒரு சிறிய குழுவை அமைத்து மாதக்கணக்கில் வேலையை பார்த்து கொஞ்சம் கொஞ்சமாக நிறைய தகவல்களை கலெக்ஷன் பண்ணிவிட்டு கடைசியாக ஒரு நாள் வங்கியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விடுகிறார்கள். ஒரு சின்ன குழு எப்படி ஒரு நகர்ப்புற காவல் துறையை ஏமாற்றி வங்கியின் முக்கியமான பாதுகாப்பு பெட்டகத்தில்லேயே கைவைத்து விடுகிறார்கள் என்பது படமாக பார்க்கும்போது நன்றாக இருந்தாலும் இந்த படத்தின் சம்பவங்கள் நிஜவாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் என்றால் உங்களால் நம்ப முடியுமா ? சராசரிக்கும் மேலே யோசித்து ஒரு விஷயத்தை பண்ணவேண்டும் என்பது ரொம்பவுமே அவசியமான ஒரு விஷயம். பொதுவான கொள்ளையடிக்கும் சம்பவங்களின் பேராசை மிக்க வில்லன்களாக நம்ம கதாநாயகர்களை காட்டாமல் இன்னைக்கு தேதிக்கு நான் வாழ்க்கையில் தோற்றுப்போனாலும் நாளைய தேதிக்கு நான் வாழ்க்கையில் ஜெயித்தே ஆக வேண்டும் என்பதுதான் இவர்களுடைய மனதுக்குள்ளே இருப்பதாக படத்தில் காட்டப்பட்டு இருப்பது ரொம்ப நல்ல விஷயம். ஒரு இன்ஜீனியஸ் பிளான் எப்படி ரொம்ப பக்காவான எக்ஸிக்யூஷனால் காப்பாற்றப்பட்டு இருக்கிறது என்று படத்தை பார்க்கும்போது உங்களுக்கே புரியும். யாரையுமே காயப்படுத்துவது இவர்களுடைய நோக்கம் இல்லை அதே சமயத்தில் இவர்கள் அந்த வங்கியின் பணத்தையும் கொள்ளையடித்தே ஆக வேண்டும் என்று இவர்கள் போட்டு வைத்த திட்டங்கள் எல்லாமே எப்படி வெற்றி அடைகிறது என்பகை முதல் முறை படமாக பார்க்கும்போது நன்றாகவே ஸ்வாரஸ்யமாக இருக்கும்.  ஒரு இன்டர்நேஷனல் தரத்தில் எடுக்கப்பட்ட நல்ல படைப்பு இந்த படம். தேர்ந்தெடுக்கப்பட்ட HEIST என்ற ஜேனர்ரில் ஒரு வெற்றிகரமான பதிப்பு இந்த படம் என்றால் அதுவுமே மிகையாகாது. 

No comments:

Post a Comment

CINEMA TALKS - MISSION IMPOSSIBLE GHOST PROTOCOL - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

சொந்த நாட்டின் பாதுகாப்புக்காக வெளிநாட்டில் தங்களுடைய உயிரை பணயம் வைத்து மிஷன்னை முடிக்க வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள் கதாநாயகன் ஈதன் மற...