Thursday, November 30, 2023

GENERAL TALKS - இனிமேல் வாங்க வேண்டிய பொருட்களை கூட இப்போதே பிளான் போட வேண்டும் !

 பொதுவாக ஒரு சில பேர் சொல்லக்கூடிய விஷயம் என்னவென்றால் கடந்த காலம் நன்றாக இல்லை. இந்த ஒரு விஷயத்தை வைத்துக்கொண்டே வாழ்க்கையின் மிகப்பெரிய சாதனைகளை பண்ணாமல் விட்டுவிடுவார்கள், இந்த உலகத்திலேயே அக்சப்ட் பண்ணிக்கொள்ள ரொம்ப ரொம்ப கஷ்டமான விஷயம் என்ன தெரியுமா ? கடந்த காலத்தை நம்மால் மாற்றவே முடியாது என்பதுதான். ஒரு நாள் ஒரு நடுத்தர வயது குடும்பத்தலைவர் அவருடைய சம்பளம் வந்ததும் ATM ல இருந்து பணத்தை எடுத்து பாக்கெட்ல போட்டுக்கொண்டு பைக்கில் செல்லும்போது ஒரு 500 ரூபாய் நோட்டு தவறுதலாக ரோட்டில் விழுந்துவிடுகிறது. இப்போது அவருடைய பட்ஜெட்டில் 500 ரூபாய் நஷ்டம் ஆவது என்னவோ உண்மைதான் ஆனால் அதையே நினைத்து ஏங்கிக்கொண்டு இருப்பதானாலோ அல்லது பணத்தை காப்பாற்ற முடியவில்லை என்று அவமானப்பட்டாலோ அதனால் என்னதான் பிரயோஜனம் சொல்லுங்கள் ? அந்த குடும்பத்தலைவர் இப்போது நடப்பு நிகழ்காலத்தையும் பின்வரும் எதிர்காலத்தையும் மட்டுமே யோசித்தால்தான் குடும்பத்தையும் குழந்தைகளையும் காப்பாற்ற முடியும். இப்போது இன்னொரு விஷயத்துக்கு வருவோம். ஒரு விஷயம் நம்மை விட்டு சென்றுவிடும் என்று காலத்தில் விதிக்கப்பட்டு இருந்தால் கண்டிப்பாக நம்மை விட்டு சென்றுவிடும். இதனை கடவுளே நினைத்தாலுமே தடுக்க முடியாது. மனிதனுடைய வாழ்க்கையில் மனிதன் எப்போது பொருளாதார நிறைவை அடைகிறானோ அப்போதுதான் மன நிறைவை அடைய முடியும். இன்னைக்கு தேதிக்கு சம்பளம் வாங்கும் ஆட்கள் , தொழில் பண்ணுபவர்கள் , விவசாயம் பண்ணுபவர்கள் எல்லோருக்குமே கார்ப்பரேட் நிறுவனங்கள் எதிரிகள்தான். இங்கே உங்க வாழ்க்கையில் எதிரிகளே இல்லாமல் இருந்தால் "காசு பணத்தை சேர்த்து வைப்பதில் என்ன சார் இருக்கு ?" என்று கேள்வி கேட்கலாம் , ஆனால் எதிரிகள் எல்லோருக்குமே இருக்கிரார்கள், உங்களுடைய பணத்தையும் , பொருட்களையும் , உடல்நலத்தையும் சேதப்படுத்த எல்லோருமே பின்னணியில் இருந்துகொண்டு வேலைப்பார்த்துக்கொண்டு இருக்கும் இந்த மாதிரியான கால கட்டங்களில் நாம் கவனமாக இருப்பதுதான் நமக்கு நல்லது. கடந்த காலத்தை யோசிக்கவே வேண்டாம் என்று சொல்லும் அதே நேரம் எதிர்காலத்துக்கான பிளான்களை போடுங்கள் , உன்னுடைய திட்டம் என்ன என்று கேட்டால் நான் சொல்வது என்னவென்றால் "சிறப்பான வீடு , சூரிய ஒளி மின்சாரம் , வீட்டையே ஆபீஸ் போல மாற்ற கொஞ்சம் கம்ப்யூட்டர்கள், நிறைய டிஜிட்டல் சொத்துக்கள் , கொஞ்சம் கணக்கு காட்டும் பொருள் சொத்துக்கள் , அதிக பாதுகாப்பு , எலெக்ட்ரிக்கல் ஸ்கூட்டர் , பெட்ரோல் பைக் , மாதம் மாதம் தாராளமான பணம், இயற்கையான உணவுகள் , கொஞ்சமாக நிலம் , சிறப்பான கம்யூனிக்கேஷன் " அப்படின்னு உங்களுடைய வாழ்க்கைக்காக ஒரு தரமான திட்டத்தை போட்டு வைத்து இந்த பொருட்கள் இருந்தால் மட்டும்தான் முன்னேற முடியும் என்ற அடிப்படையான முன்னேற்ற திட்டத்தை போட்டுக்கொள்ளுங்கள், கார் என்றால் ரேனால்ட் க்விட் 1.0 , பைக் என்றால் ஹீரோ ஸ்பெலென்ட்டர் , முடிந்தால் ஒரு டி.வி.எஸ், மேலும் ஒரு ஆம்பெர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் , லேப்டாப் என்றால் இன்டெல் அல்லது ஏ.எம்.டி உடன் தரமான ஹார்ட் வேர் என்று , ஒரே கூரை வீடு மேல் போர்ஷன் என்று இல்லை என்றாலும் பரவாயில்லை, இன்டர்நெட் கனெக்ஷன் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோரேஜ்க்கு கணக்கு இல்லாமல் ஆப்ஷன்ஸ் இருப்பதால் பொழுதுபோக்கு தவிர்த்து டிவி என்று தனியாக செலவு பண்ண அவசியம் இல்லை. இந்த மாதிரி நான் வாங்க வேண்டிய பொருட்களை நான் செலேக்ஷன் பணனித்தான் வைத்து இருக்கிறேன். இது எல்லாமே அடைவது என்னுடைய டெஸ்டினேஷன் , இது எதுவுமே என்னுடைய வாழ்க்கையில் நிஜத்தில் நடத்திவிட முடியுமா என்றால் வாய்ப்புகள் குறைவுதான் ஆனால் முயற்சிகளை பண்ணிக்கொண்டு இருக்கிறேன். இந்த வாழ்க்கை என்ற விளையாட்டை நோ-நான்ஸன்ஸ்ஸாக விளையாட வேண்டும். அப்போதுதான் வாழ்க்கை நன்றாக இருக்கும். உங்களுடைய பொருட்களை நீங்கள் இன்னுமே அதிகப்படுத்த வேண்டுமே தவிரத்து இருப்பதை இழந்து நிற்க கூடாது. கடைசியாக நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் இந்த உலகத்தில் காசு பணம் முக்கியம் இல்லை , பொருட்களை சேகரிப்பது முக்கியம் இல்லை என்று எல்லாம் கதை விடுவார்கள். நம்பாதீர்கள். இவைகள்தான் முக்கியம். கவனமான முறையில் செலவு பண்ணுவதும் ஒரு கலைதான் ஆனால் நிறைய பேருக்கு இந்த கலை கொடுத்து வைக்கவில்லை. இந்த தோல்வியடைந்த கூட்டத்தில் நீங்கள் சேர்ந்துவிடாதீர்கள். இணைப்பில் ஆன்ஸர் இன் பிராக்ரஸ் சேனல்லை இணைத்துள்ளேன். ரொம்ப பயனுள்ள யூட்யூப் சேனல். கண்டிப்பாக சப்ஸ்க்ரைப் பண்ணிவிடுங்கள் !

No comments:

Post a Comment

CINEMA TALKS - MISSION IMPOSSIBLE GHOST PROTOCOL - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

சொந்த நாட்டின் பாதுகாப்புக்காக வெளிநாட்டில் தங்களுடைய உயிரை பணயம் வைத்து மிஷன்னை முடிக்க வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள் கதாநாயகன் ஈதன் மற...