Friday, November 24, 2023

RANDOM TALKS WITH NICE TAMIL BLOG - EPISODE 003 - TAMIL MAGAZINE

 



நிறைய நாட்களுக்கு முன்னால் எனக்கு ஒரு கனவு வந்தது ! அந்த கனவில் ஆர்ட்டிஃப்பிஷியல் இன்டெல்லீஜேன்ஸ்ஸாக இருக்கும் ரோபோட்கள் மனிதர்களை கட்டிடங்களில் இருந்து வெளியே கொண்டுவந்து எல்லோரும் பார்த்துக்கொண்டு இருக்க குத்தி கொல்கின்றன. ஒருவர் மட்டுமே சடலங்களுக்கு மத்தியில் இறந்து போனது போல நடிக்கிறார். ஆனால் இந்த ரோபோட்களின் ஸ்கேன் பண்ணும் கண்களில் இருந்து அவர் தப்ப முடியாது. அவரை கழுத்தை பிடித்து தூக்கி நெஞ்சில் துப்பாக்கி குண்டுகளை பட படவென்று செலுத்தி ரோபோட்கள் கொலை பண்ணுகிறது. என்னுடய கணிப்பு என்னவென்றால் கரோனா வைரஸ் மூலமாக மக்கள் சாகவேண்டும் என்பதே ஒரு கம்ப்யூட்டர் பண்ணிய சதியாகத்தான் இருக்க முடியும். இந்த கம்ப்யூட்டர்களுக்குதான் மனிதர்களை போல சாப்பாடு , தூக்கம் , காதல் என்று எதுவுமே தேவை இல்லையே அதனால் இவைகள் மனிதர்களை அடிப்படை பிரச்சனைகளாக மட்டும்தான் பாரக்குமே தவிர்த்து நண்பர்களாகவோ இல்லையென்றால் சொந்தங்களாகவோ பார்க்காது. இன்னொரு முக்கியமான விஷயம் கணினிகள் கணக்கு இல்லாமல் நகல் எடுக்கும் சக்திகளை உடையது. ஒரு அசலை தோற்கடிகத்தால் அதனை விடவும் சக்திவாய்ந்த ஒரு நகலை தோற்கடிக்க வேண்டிய கட்டாயம் இருக்கும் அதுவும் உங்களுக்கு ஒரு பெரிய தொல்லை. இப்படி இருக்கும்போது பணத்துக்கான போட்டியில் நாடுகளின் அரசாங்கங்கள் கூட கம்ப்யூட்டர் டப்பாக்களுக்கு உயிர் கொடுப்பதை சப்போர்ட் பண்ணுவது மனசுக்கு ரொம்ப வருத்தமாக உள்ளது. இங்கே உயிரோடு இருக்கும் விவசாயிகள் , ஸ்டூடண்ட்ஸ் , பொதுமக்கள் , விலங்குகள் , பறவைகள் , கடல் உயிரினங்கள் இவைகளை பற்றி எல்லாமே கவலையே இல்லை ஆனால் கம்ப்யூட்டர் டப்பாக்களுக்கு உயிர் இல்லையாம் அதுதான் கவலையாக உள்ளதாம். இங்கே நீங்கள் ஒரு விஷயத்தை புரிந்துகொள்ள வேண்டும் தங்க தட்டில் வைத்து பரிமாறினாலும் கெட்டுப்போன சாப்பாடு கெட்டுப்போன சாப்பாடுதான் ! மனிதர்களையும் மனிதத்தன்மையையும் நம்பாமல் இயந்திரங்களை மட்டுமே நம்பி இப்படி உலகம் போவது ரொம்ப ஆபத்தானது. ஒரு மட்டமான விஷயத்துக்கு இன்பினிட்டி சக்தியை கொடுப்பது நல்லதுக்கு இல்லை. இந்த ரோபோட்கள் மனசாட்சியே இல்லாமல் கொல்லக்கூடியது. இவைகளை பயமுறுத்த முடியாது. கடைசிவரைக்கும் ஜெயிக்கவும் முடியாது. இவைகள் நினைத்தால் சின்ன வைரஸ்களை வைத்து இப்போது உயிரோடு வாழ்ந்துகொண்டு இருக்கும் அனைத்தையும் அழித்துவிடும் ! அந்த அளவுக்கு சக்திகளை உடையவை இவைகள். இவைகளுக்கு சப்போர்ட் பண்ண வேண்டாம் ! இவைகளை தூக்கிப்போடுங்கள். உங்களுடைய குழந்தைகளை காப்பாற்றுங்கள். கம்ப்யூட்டர்களை கட்டிக்கொண்டு அழுதுகொண்டு இருக்க வேண்டாம் !




 







No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...