Thursday, November 23, 2023

CINEMA TALKS - KATHI - TAMIL REVIEW - திரை விமர்சனம் !



முன்னதாக துப்பாக்கி படம் ரொம்ப பெரிய அப்டேட் நம்ம தமிழ் சினிமாவுக்கு கொடுத்து இருக்கிறது என்பதால் நிறைய எதிர்பார்க்கப்பட்டு நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த இந்த படம்தான் கத்தி என்ற இந்த படம். இந்த படம் நான்தான் எடுத்தேன் என்று ரொம்ப கௌரவமாக சொல்லிக்கொள்ளலாம். அவ்வளவு அருமையான படம். கதிரேசன் சென்னையில் தேடப்படும் ஒரு நுணுக்கமான கொள்ளைக்காரர். பணம் மேல் நிறைய ஆசை வைத்து இருப்பதால் ஒரு பக்கம் கிராமத்தில் விவசாயம் சார்ந்த வாழ்க்கையை நடத்தும் மக்களுக்காக போராடிய ஜீவானந்தம் அவர்களுடைய இடத்தை எடுத்துககொள்கிறார். ஆனால் ஒரு பல கோடி ரூபாய் பிசினஸ் பண்ணும் ஒரு கார்ப்பரேட் கம்பனி எப்படி பல வருஷங்களாக அந்த கிராமத்து மக்களை அவ்வளவு கஷ்டப்படுத்தி இருக்கிறது என்று புரிந்துகொள்ளும் கதிரேசன் கடைசி வரைக்குமே அந்த கிராமத்து மக்களுக்காக நின்று நேருக்கு நேராக அந்த கொலைகார படையை எதிர்த்து சண்டை போட்டு கடைசியில் ஜெயித்து காட்டுவதுதான் இந்த படத்தின் கதை. ஒரு சில படங்கள் மட்டும்தான் சமுதாயத்தில் நடக்கும் ரொம்ப பெரிய குற்றங்களையும் அந்த குற்றங்களை பண்ணுபவர்கள் தண்டனையே இல்லாமல் சந்தோஷமாக இருப்பதையும் பாதிக்கப்பட்டவர்களின் கண்ணீரையும் மக்களுக்கு சொல்லும் படங்களாக இருக்கும். இந்த படத்தில் கமர்ஷியல் காரணங்களுக்காக சேர்க்கப்பட்ட காதல் மற்றும் சண்டை காட்சிகளை தவிர மொத்தமாக இந்த படம் விவசாயத்தை பண்ணுபவர்களை ஒரு தனியார் நிறுவனம் எப்படி எல்லாம் கொடுமைப்படுத்துகிறது என்று சொல்லியுள்ளது. இந்த மாதிரி படம் எல்லாம் தமிழ் சினிமாவின் தங்கமான படங்கள். இன்னும் நிறைய வெற்றிப்படங்கள் மக்களுடைய அடிப்படை பிரச்சனைகளை கண்டிப்பாக சொல்லும் படங்களாக வருங்காலத்தில் வரவேண்டும் அப்போதுதான் பொழுது போக்கு மட்டுமே இல்லாமல் அடிப்படையான பிரச்சனைகளையும் சொல்லும் படங்கள் நிறைய பேரை சென்றடையும். கிளைமாக்ஸ் ரொம்பவே நன்றாக இருந்தது. இந்த படத்தை கண்டிப்பாக ஒரு முறை பாருங்கள். 

No comments:

Post a Comment

CINEMA TALKS - MISSION IMPOSSIBLE GHOST PROTOCOL - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

சொந்த நாட்டின் பாதுகாப்புக்காக வெளிநாட்டில் தங்களுடைய உயிரை பணயம் வைத்து மிஷன்னை முடிக்க வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள் கதாநாயகன் ஈதன் மற...