இந்த படத்தில் எக்ஸிக்யூஷன் ரொம்பவே பிரமாதமாக இருக்கிறது. கமர்ஷியல் படம்தான் ஆனால் காதல் கதையை காமெடிக்காக பயன்படுத்தாமல் ஒரு உண்மையான காதலாக ரொம்ப சீரியஸ்ஸாகவே சொல்லி இருக்கிறார்கள். காதல் மன்னன் கண்டிப்பாக வெளிவந்த நாட்களில் படம் பார்க்கும் ஆடியன்ஸ்க்கு மிகவும் புதுமையான எக்ஸ்பிரியன்ஸ்ஸாக இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமுமே இல்லை. இப்போ நீங்கள் இந்த படத்தின் கதையை ஒரு நோட்புக்கில் எழுதி பார்த்தால் கூட மற்ற கமர்ஷியல் படங்களின் கதையை விட ரொம்பவுமே தனித்து இருக்கும். ஒரு பக்கம் மிடில் கிளாஸ்ஸில் மேன்ஷன்னில் தங்கி மெக்கானிக்காக வேலை பார்க்கும் சிவா எப்போது நிச்சயதார்த்ததில் திலோத்தமாவை பார்த்தாரோ அப்போதே காதலிக்க ஆரம்பித்துவிட்டார். இந்த காதலை அழிக்க வேண்டும் என்பதே ஒரே வேலையாக பண்ணிக்கொண்டு இருக்கும் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாத வில்லனாக பெரிய இடத்து பையன் ரஞ்சித். கொஞ்சம் கொஞ்சமாக கதை நகரும்போது சின்ன சின்ன விஷயங்கள் கூட கதையில் பெரிய பெரிய மாற்றங்களை கொண்டுவந்து விடுவதை படத்தில் பார்க்கலாம். திரைக்கதையில் அவ்வளவு புதுமை , அவ்வளவு கிரியேடிவிட்டி, கமர்ஷியல் படங்களில் பாயிண்ட் ஆஃப் வியூவில் இருந்து பார்த்தாலுமே கிளைமாக்ஸ் வரைக்கும் வழக்கமான அனைத்து கதைகளின் ஸ்டைல்லையும் விட்டுவிட்டு புதுமையாக ஒரு ஸ்டைல் இந்த படத்தின் திரைக்கதைக்கு கொடுத்து இருப்பதால் கதை வேகமாக மற்றும் ஸ்வாரஸ்யமாக நகர்கிறது. கண்டிப்பாக ஒரு முறை பாருங்கள்.
No comments:
Post a Comment