Thursday, November 30, 2023

CINEMA TALKS - MURAN 2011 - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

 


இயக்குனர் சேரன் அவர்களிடம் இருந்து ஒரு வித்தியாசமான மாறுபட்ட படைப்புதான் இந்த படம் , பிரசன்னா எப்போதுமே கியூட்டான காதல் ஹீரோவாக இருந்தாலும் இந்த படத்தில் கொஞ்சம் அவுட் ஆஃப் பாக்ஸ் சென்று ஒரு ஸ்மார்ட்டான வில்லனாக களம் இறங்குகிறார். முரண் ஒரு பக்காவான க்ரைம் டிராமா ! உங்களுக்கு இன்டர்நேஷனல் லெவல்லில் ஒரு சஸ்ப்பென்ஸ் நிறைந்த ஆச்சரியப்படுத்தும் க்ரைம் டிராமாவை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் இந்த படம் உங்களுக்கு ரொம்ப சிறப்பான ஆப்ஷன். இப்போது கதைக்கு வருவோம் ! நந்தா ஒரு கிட்டார் மியூசிக் எக்ஸ்ப்பர்ட்டாக திரைத்துறை வாழ்க்கையில் வெற்றி அடைய கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கிறார் , அவருடைய மனைவி அவருக்கு சப்போர்ட் பண்ணுவதே இல்லை , ஒரு ஒரு நாளும் நரக வேதனைக்குள் இருக்கும்போது ஆறுதலாக ஒரு காதல்கதை அவருடைய வாழ்க்கையில் சென்றுக்கொண்டு இருக்கிறது. இன்னொரு பக்கம் இவரை புதிதாக சந்திக்கும் அர்ஜூன் அவருடைய அப்பா எப்படி மிகவும் மோசமாக நடந்துகொண்டு அவருடைய காதலியின் இறப்புக்கு காரணமானார் என்று இன்னொரு கஷ்டமான கதையை சொல்லிவிட்டு பின்னால் விடைபெற்று பிரிந்துவிடுகிறார்கள். எப்போது அர்ஜூன் ஒரு விபத்து போல செட் பண்ணி நந்தாவின் மனைவியை தீர்த்துக்கட்டிவிடுகிறார் , நந்தாவை பயமுறுத்தி அர்ஜூன் அவருடைய வாழ்க்கையில் பிரச்சனையாக இருக்கும் அப்பாவை காலி பண்ண வேண்டும் என்று நந்தவை மிரட்டுகிறார். இப்படி ஒரு பரபரப்பான ஆபத்தில் மாட்டிக்கொண்ட நந்தா எப்படி வெளியே வருகிறார் என்பதை ரொம்ப ரொம்ப ஸ்வாரஸ்யம் நிறைந்த திரைக்கதையாக சொல்லி இருக்கும் இந்த படம் 2011 ல் வெளிவந்தது. 

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...