படங்களில் ஜீவா என்னைக்குமே ரொம்ப கியூட்டான ரொமான்டிக் ஹீரோவாக இருப்பதால் அவருடைய ஸ்டைல்லில் ஒரு ரொமான்டிக் காமெடி படம், இருந்தாலும் இங்கே படத்தில் ரொமான்ஸ் எல்லாம் ரொம்ப ரொம்ப அதிகமாக இருப்பதாலும் காமெடி வேற லெவல்லில் இருப்பதாலும் 'யூ - சேர்ட்டிஃப்பிக்கேட்டை' நம்பி ஃபேமிலியோடு படம் பார்க்க சென்றவர்களுக்கு ரொமான்ஸ்ஸால் மட்டுமே நிறைந்த ஃப்ளர்ட்டிங் காட்சிகளும் , வயதுக்கு மீறிய நகைச்சுவை கலகலப்புகளும் சுந்தர் C அவர்களின் படங்களுக்கு வந்தது போல நினைக்க வைத்துவிடும். லொகேஷன்ஸ் , ஸாங்க்ஸ் , கதையை நகர்த்தி இருக்கும் விதம் , கொஞ்சம் ஃபேமிலி வேல்யூஸ் மற்றும் நிறைய நிறைய அதிகமான நகைச்சுவை காட்சிகள் என்று நம்ம டிஜிட்டல் உலகத்தின் தொடக்கத்தில் எப்படி ஒரு ரசிக்கும்படியான ரொமான்டிக் காமெடி படம் இருக்குமோ அப்படி ஒரு படம் இந்த படம். பாடல்கள் படத்துக்கு நல்ல டோன் கொடுத்துள்ளது. பையா படத்தில் இடம்பெற்ற பாடல்களை போல அனைத்து பாடல்களும் ஹிட் என்ற இடத்தை அடையவேண்டும் என்பதால் இன்னும் கவனம் எடுத்து பாடல்கள் கொடுத்து இருக்கலாம். ஃபேமினிஸ்ட்டாக இருப்பவர்கள் இந்த படத்தை கண்டிப்பாக தவிர்த்துவிடவும் காரணம் என்னவென்றால் காதலை காமெடிக்காக ரொம்பவுமே தியாகம் பண்ணி இருப்பார்கள். ஜீவா , வி.டி.வி கணேஷ் , கே. எஸ். ரவிக்குமார் , காஷ்மிரா ,ப்ரக்யா , என்று ஒரு நட்சத்திர பட்டளமே சேர்ந்து நடித்து உள்ள படம் என்பதால் இதுக்கு முன்னதாக வெளிவந்த கவலை வேண்டாம் படத்துக்கு இந்த படம் விஷுவல்லாக ரொம்பவுமே பெட்டர்ராக எடிட்டிங் பண்ணப்பட்டு இருக்கிறது. நான் எப்பவுமே கமெர்ஷியல் படங்கள் எல்லாம் காலத்தை கடந்த காவியங்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதே இல்லை. ஒரு கமேர்ஷியல் படத்தின் முக்கியமான நோக்கம் எண்டர்டெயின்மெண்ட் வேல்யூதான் அந்த வகையில் ரொம்ப அதிகமாக வேல்யூ மற்றும் ரேட்டிங் இந்த படத்துக்கு தேவை. ஃபேமிலியோடு இல்லாமல் ஃபிரண்ட்ஸ்ஸாக பார்த்தால் இந்த படம் உங்களுக்கு ஒரு கலகலப்பான அட்வென்சர்ராக இருக்கும். மற்றபடி லாஜீக் எல்லாமே பார்த்து காமெடியை குறை சொன்னால் உங்களுக்கு இந்த படம் ஸெட்டாகாது. இந்த படம் பைசா வசூல் என்டர்டைன்மெண்ட் படம் , இந்த விஷயத்தில் மாற்றுக்கருத்து இருந்தால் நீங்கள் விஜய் சேதுபதி அவர்களின் 96 போன்ற ரியல் லைப் வேல்யூக்கள் நிறைந்த காதல் கதைகளை பார்ப்பதுதான் நல்லது.
No comments:
Post a Comment