Wednesday, November 8, 2023

CINEMA TALKS - DOCTOR - SIVAKARTHIKEYAN FILM - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!

 இந்த படத்தின் டிரெய்லர் பார்க்கும்போதே இந்த படம் ரொம்ப பயங்கரமான க்ரைம் பிலிம் என்ற உணர்வை கொடுத்துவிடும். சிவகார்த்திகேயன் அவருடைய CAREER-ல பெஸ்ட் பிலிம் என்று இந்த படத்தை சொல்லலாம். இயக்குனர் நெல்சன் அவருடைய CAREER-ல பெஸ்ட் என்று இந்த படத்தை சொல்லலாம். இந்த படத்தில் சினிமாட்டோகிராஃப்பி அவ்வளவு பெஸ்ட்டாக இருக்கும் சொல்லப்போனால் வேறு ஒரு ஸ்டான்ட்ர்ட்ல இருக்கும். விஜய் கார்த்திக் கண்ணன் ரொம்ப ரொம்ப பெஸ்ட்டான வொர்க் இந்த படத்தின் ஃபைனல் ப்ராடக்ட்ல கொடுத்து இருப்பார். ஒரு இன்டர்நேஷனல் பிலிம் ஃபெஸ்டிவல்ல இந்த படத்தை பெஸ்ட் டார்க் காமெடி என்று மென்ஷன் பண்ணி கொடுக்கலாம். இன்டர்நேஷனல் பிலிம்களுக்கு சற்றும் குறையாமல் எடுக்கப்பட்ட ஒரு டாரக்கான பிலிம். இந்த படத்துக்கே அவருடைய காமிரா வொர்க் ரொம்ப ஸ்பெஷல்லாக இருக்கும். இயக்குனர் நெல்சன் ரொம்ப கிரியேட்டிவ்வாக க்ராஃப்ட் பண்ணி எடுத்த படம் இந்த படம். இந்த படத்துடைய கதைக்களம் இந்தியன் டிஃபென்ஸ்ல டாக்டர்ராக இருக்கும் வருண் அவருடைய காதலிக்கும் பெண்ணின் வீட்டில் காணாமல் போன பெண் குழந்தையை கண்டுபிடிக்க அவரால் முடிந்த எல்லா முயற்சிகளையும் எடுக்கிறார், இங்கே அவர் தனியாக வேலை செய்வதால் அவருடைய எல்லா திட்டங்களுக்கும் காதலியின் குடும்பத்தையே நடிகர்களாக பயன்படுத்தி வில்லன்னின் நெட்வொர்க்கை அடைகிறார். டேர்ரி ரொம்ப மோசமான ஒரு மனித கடத்தல்  கும்பல் அமைப்பை நடத்துகிறார். அங்கே மாட்டிக்கொண்டு இருக்கும் குழந்தைகளை காப்பாற்ற உயிரை பணயம் வைத்து போராடும் டாக்டர் வருண் வாழ்க்கைதான் இந்த படத்தின் கதைக்களமாக இருக்கும். THE DEPARTED , THERE WILL BE BLOOD , DEADPOOL மாதிரியான ஆங்கில படங்களை பார்ப்பவர்களுக்கு இந்த படம் ரொம்ப பெஸ்ட்டான படமாக அவர்களுடைய பிடித்த படங்களின் பட்டியலில் சேர்ந்துவிடும், ஜெனரல் ஆடியன்ஸ்க்கும் இந்த படம் ரொம்பவுமே பிடிக்கும். ஒரு நல்ல பிரசன்டேஷன். இன்னும் சொல்லப்போனால் சவுத் இந்தியன் சினிமாவின் பெஸ்ட் ஆஃப் பெஸ்ட் இந்த படம். 

No comments:

Post a Comment

CINEMA TALKS - MISSION IMPOSSIBLE GHOST PROTOCOL - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

சொந்த நாட்டின் பாதுகாப்புக்காக வெளிநாட்டில் தங்களுடைய உயிரை பணயம் வைத்து மிஷன்னை முடிக்க வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள் கதாநாயகன் ஈதன் மற...