Sunday, November 5, 2023

GENERAL TALKS - உங்களுடைய தனிப்பட்ட முடிவுகள் உங்களுக்கு தோல்வியை கொடுக்க கூடாது !! - கவனம் தேவை !!

 இந்த உலகத்தில் உங்களுக்கு பிடிச்ச மனிதர் யாரு ? அப்பா , அம்மா , இல்லைன்னா சகோதரர்கள் , நண்பர்கள் என்று யாராவது ஒருவரை மட்டுமே சொல்லுங்கள் , யாராவது ஒருவர் மட்டுமே செலக்ட் பண்ணிக்கொள்ளுங்கள். அது ஒரு நடிகராக இருக்கலாம் , ஒரு போலிட்டிக்கல் கரியரில் இருப்பவராக இருக்கலாம் , ஒரு டாக்டர்ராக இருக்கலாம் , ஒரு ப்ரோஃபஸராகக்கூட இருக்கலாம். இந்த குறிப்பிட்ட ஒருவர் யாராக வேண்டுமென்றாலும் இருக்கலாம். ஆனால் ஒரு கட்டத்தில் நீங்கள் தேர்ந்தெடுத்த அந்த ஒருவர் V. நீங்கள் என்று ஒரு போட்டி வந்தால் நீங்கள் என்ன பண்ணுவீர்கள் ?

ஆப்ஷன் 1 :உங்களுக்கு பிடித்த அந்த நபருக்காக உங்களுடைய வெற்றியை விட்டுக்கொடுக்க வேண்டும் , இந்த வகையில் நீங்கள் தோல்வி அடைவீர்கள் , ஆனால் நீங்கள் சப்போர்ட் பண்ணும் அந்த நபர் வெற்றி அடைவார். 

ஆப்ஷன் 2 :உங்களுக்கு நீங்கள் சப்போர்ட் பண்ணி உங்களை வெற்றியாளராக மாற்ற வேண்டும். உங்களுக்கு பிடித்த அந்த நபரை நீங்களே தோற்கடிக்க வேண்டும். இந்த வகையில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். 

இப்போது உங்களுடைய பெயர் சதீஷ் என்று வைத்துக்கொள்ளலாம் , உங்களுக்கு இளைய தளபதி விஜய்யை ரொம்பவுமே பிடிக்கும் எனலாம். ஆனால் ஒரு கட்டத்தில் சதீஷ் V. விஜய் என்று வரும்போது சதீஷ் நேரடியாக போட்டி போட்டு விஜயை வெற்றி அடைவாரா ? இல்லையென்றால் விஜய்யை பிடிக்கும் என்பதற்காக செல்லமாக அவரிடம் தோற்றுப்போவாரா ? 

இதுதான் ENTHUSIASM நம்ம வாழ்க்கையில் கொடுக்கும் பிரச்சனை. ஒரு விஷயத்தின் மேலே அபாரமான அன்பு வைத்து ஆதரவு கொடுத்துக்கொண்டு இருந்தால் அந்த விஷயம் தோற்றுப்போக நாம் விடமாட்டோம். இந்த மாதிரி மனநிலை இருந்தால் சதீஷ் விஷயத்திலும் அப்படித்தான் நடக்கும். சதீஷ் அவரால் இளைய தளபதி விஜய்யை ஜெயிக்க முடியும் என்றாலும் அந்த அளவுக்கு அவருக்கு சக்திகள் இருந்தாலும் சதீஷ் விட்டுக்கொடுத்து விடுவார் !! காரணம் என்னவென்றால் தொழில் முறை போட்டிகளில் அன்பு காட்டக்கூடாது. யார் நம்மிடம் போட்டியாக இருந்தாலும் பரவாயில்லை. யோசிக்காமல் ஜெயித்துக்கொண்டே இருக்க வேண்டும். எதிலுமே தோல்வி கூடாது !! எவனையும் வெற்றி அடையவேண்டும் !! சாதனை பண்ண வேண்டும். யாருக்கு தெரியும் அந்த சதீஷ் நேரடியாக போட்டி போட்டால் அவரால் பெரிய வெற்றியை அடைய முடியும் என்றபோது எதுக்காக பின்னால் போக வேண்டும். உங்களுக்கு ஒருவரை பிடிக்கும் என்பதற்காக அவர்களை எதிர்த்து சண்டை போட வேண்டாம் என்று முடிவு எடுக்க கூடாது. சண்டை என்று வந்துவிட்டால் எதையுமே பார்க்க கூடாது. இந்த உலகத்தில் வெற்றி அடைய என்ன பண்ண வேண்டும் என்று என்னிடம் நிறைய பேர் கேட்கிறார்கள். உங்களுக்கு எதிராக இருப்பவர் தோற்க வேண்டும். இதுதான் வாழ்க்கையின் நியதி . உலகத்தில் கடந்த 20000 வருடங்களாக இந்த நியதிதான் உலகத்தில் இருக்கிறது. 

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...