Monday, November 6, 2023

CINEMA TALKS - என்னை நோக்கி பாயும் தோட்டா - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!

நீங்கள் என்னை அறிந்தால் என்ற திரைப்படம் பார்த்து இருந்தால் உங்களுக்கு கண்டிப்பாக ஒரு விஷயம் ரொம்பவுமே பிடித்து இருக்கும். அந்த படத்தில் இருக்கும் போலீஸ் ஆபீஸர் சத்யதேவ் மற்றும் வில்லன் விக்டர் இந்த இருவரும் அவருடைய வாழ்க்கையில் நடந்த விஷயங்களுக்காக வாய்ஸ் ஓவர்ரில் ஸ்டோரியை சொல்லிக்கொண்டே இருப்பார்கள். இந்த படம் ஒரு போலீஸ் ஆபீஸர் அவருடைய பேர்ஸ்ப்பெக்டிவ்ல இருந்து நடந்த விஷயங்களை சொல்லுவதாக அமையும். இதுவே ஒரு சாதாரண கல்லூரி இளைஞர் அவர் காதலித்த பெண்ணை காப்பாற்ற உயிரை பணயம் வைத்து ஒரு சினிமா ப்ரொடக்ஷன்னின் பின்னணியில் இயங்கும் ஆயுத டீல்லிங் மாஃப்பியாவையே எதிர்த்து சண்டைபோட வேண்டிய கட்டாயத்தில் இருந்தால் என்னென்ன பிரச்சனைகளை அவர் சந்திக்க வேண்டியது இருக்குமோ அத்தனையும் ரொம்பவுமே விறுவிறுப்பான க்ரைம் திரில்லர்ராக இந்த படத்தில் கௌதம் கொடுத்து இருப்பார். படத்தில் ரொமான்ஸ் காட்சிகள் அதிகம் மற்றும் க்ரைம் காட்சிகள் ரொம்ப ரொம்ப அதிகம்.  இந்த படம் ப்ரொடக்ஷன் மற்றும் வெளியீட்டில் இருந்த டிலே இந்த படத்துடைய ஆடியன்ஸ் ரிசப்ஷன்னை குறைத்துவிட்டது மற்றபடி க்ரைம் படங்களின் ரசனைக்கு கொஞ்சமுமே குறை வைக்காமல் ஒரு நாவல் ஸ்கிரீன் ப்ரெசெண்ட்ஸ் இந்த படத்தில் இருக்கிறது. இந்த படம் ஒரு தனியான க்ரைம் யுனிவெர்ஸ். இந்த படத்தை இந்த மாதிரி ஜெனர்ரில் வெளிவந்த ஹாலிவுட் படங்களின் ரசனை இருந்தால் மட்டும்தான் பார்க்க முடியுமே தவிர்த்து பொதுவான ஆடியன்ஸ்க்கு இந்த படம் அண்டர்ஸ்டான்ட் பண்ண முடியாத படமாகத்தான் இருக்கும். தனுஷ் மற்றும் மேகா ஆகாஷ் அவங்களுடைய கேரக்டர்களில் ரொம்ப ரொம்ப பிரமாதமான அளவுக்கு நடித்து கொடுத்து இருப்பார்கள். இந்த படத்துடைய சப்போர்டிங் ஆக்டர்ராக வரும் சசிக்குமாருக்கு டிஸப்பாயிண்ட்மெண்ட்டான முடிவை கொடுக்காமல் படம் மொத்தமும் அவருக்கு காட்சிகள் கொடுத்து இருக்கலாம். செந்தில் வீராசாமி அவருக்கு கொடுத்த குபேரன் கேரக்டர்ரில் வேற லெவல்லில் பண்ணிக்கொடுத்து இருப்பார். படம் முடியும் வரைக்கும் ஒரு பயங்கரமான அரக்கத்தனமான வில்லனாக ரகுவும் லேகாவும் பண்ணும் அனைத்து விஷயங்களுக்கும் மரண அடி கொடுத்துக்கொண்டே இருப்பார். இந்த படம் வெளிவந்த நாட்களில் ரொம்பவுமே அப்ரிஷியேஷன் மற்றும் வரவேற்பு கிடைத்து இருக்க வேண்டிய படம். கண்டிப்பாக வெற்றி அடையவேண்டிய ஒரு கான்செப்ட் இருக்கும் பிலிம். இருந்தாலும் எதனாலோ டிஸப்பாய்ண்ட்மெண்ட்டான மீடியம் லெவல் பாக்ஸ் ஆபீஸ்தான் இந்த படத்துக்கு கிடைத்தது.

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...