ஒரு சில படங்கள் மட்டுமேதான் காலத்தால் அழியாத ஒரு விஷயத்தை படைக்கும் அப்படிப்பட்ட படம்தான் இந்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் எனக்கு தெரிந்து தமிழ் சினிமாவில் ரொம்பவுமே இண்டரெஸ்ட்டிங்காக எடுக்கப்பட்ட ரொமான்டிக் காமெடி ஹேயஸ்ட் பிலிம் இந்த படம். துல்கர் சல்மான் , ரக்ஷன் , ரீத்து வர்மா மற்றும் நிரஞ்சனி அகத்தியன் இவங்க நான்கு பெயரின் கதாப்பத்திரங்கள் இந்த கதையை நகர்த்திக்கொண்டு இருக்கிறது இவர்களின் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்பம்தான் கௌதம் வாசுதெவ் மேனன் காதப்பாத்திரத்தின் அறிமுகம். இந்த படத்தை நான் யுட்யூப்ல முன்னோட்டம் மட்டுமே பார்த்துவிட்டு கொஞ்சம் இண்டரெஸ்ட்டிங்கான ரொமான்டிக் படம் என்று உட்கார்ந்தால் படம் இன்டர்வல் வரும்போது நுனி சீட்டில் உட்கார்ந்துகொண்டு அடுத்து என்ன நடக்கும் அடுத்து என்ன நடக்கும் என்று யோசிக்க வைத்துவிடும். அவ்வளவு இண்டரெஸ்ட்டிங்கான படம் ப்ரொடக்ஷன் வேல்யூவுக்கு ரொம்ப பெஸ்ட்டாக ரிசல்ட் கொடுத்து இருக்கும் படம். கதாநாயகர்கள் இருவரும் டெக்னாலஜியை பயன்படுத்தி கொள்ளையடித்து பணம் சேர்த்துக்கொண்டு இருப்பவர்கள் என்றால் இந்த கதாநாயகர்களிடம் இருந்தே அவர்களின் மொத்த பணத்தையும் மனதையும் கொள்ளையடித்து சென்றுவிடுகிறார்கள் கதாநாயகிகள். இங்கே கவனமான முறையில் ஒவ்வொரு ஸ்டெப்பாக எடுத்து நெருங்கிக்கொண்டு இருக்கிறார் கௌதம். கிளைமாக்ஸ்ல என்ன நடந்தது ? இந்த படத்தை பார்த்து நீங்களே தெரிந்துகொள்ளுங்களேன் ! இந்த படத்துடைய வேகத்தை ஸாங்க்ஸ் குறைக்கவில்லை மேலும் பேக்ரவுண்ட் மியூசிக் ரொம்ப பிரமாதமாக இருக்கிறது, இன்னொரு விஷயம் கிளைமாக்ஸ்ஸில் கௌதம் வாசுதேவ் மேனன்னின் ரொமான்டிக் போர்ஷன் ரொம்பவுமே கியூட்டாக இருந்தது. தேசிங் பெரியசாமி ஒரு புதுமையான எதிர்காலத்துக்கு ரொம்ப இண்டரெஸ்ட்டிங் ப்ரோமிஸ்ஸான தமிழ் சினிமாவை கொடுத்து இருக்கிறார். படம் ரொம்ப நன்றாகவே இருக்கிறது கண்டிப்பாக நிறைய முறை பார்க்கலாம். புது ஜெனெரடிவன் ஆடியன்ஸ்க்கு கண்டிப்பாக இந்த படம் பிடிக்கும்.
No comments:
Post a Comment