Friday, November 24, 2023

CINEMA TALKS - ONE PIECE - SEASON ONE - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

 



கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்னால் NARUTO மற்றும் NARUTO SHIPPUDEN பார்த்தேன். இந்த ஒரு நெடுந்தொடர் எனக்கு பெர்சனல்லாக ஜப்பான்னிஸ் அனிமேஷன் தொடர்களின் மேல் ஒரு தனி மரியாதையையே கொண்டுவந்துவிட்டது என்று சொல்லுவேன். அந்த வகையில் ONE PIECE அனிமேஷன் தொடர் பார்க்கலாம் என்று ஸ்டார்ட் பண்னினேன் ஆனால் 1000+ எபிசோட்களுக்கு மேலே இருந்ததால் பார்க்க முடியவில்லை. எனக்கு இன்னுமே அதிகமான நேரம் கிடைத்தால் பார்க்கலாம் என்று விட்டுவிட்டேன். நெட்ஃப்லிக்ஸ்ஸின் ONE PIECE லைவ் ஆக்ஷன். ஒரு கடல் பரப்பு அதிகமாக நிறைந்து உள்ள ஃபிக்ஷன்னல் உலகத்தில் கோல்ட் ரோஜர் என்ற கடற் கொள்ளை தலைவருக்கு கேபிட்டல் பனிஷ்மேன்ட் அதாவது மரண தண்டனை கொடுக்கும்போது ONE PIECE என்ற அதிக மதிப்புள்ள புதையலை எடுக்க கடலுக்கு செல்லுங்கள் என்று சொல்லிவிட்டு உயிரை விட்டுவிடுகிறார். பல வருடங்களுக்கு பின்னால் DEVIL FRUIT என்ற மாய சக்திகளை கொடுக்கும் பழத்தை சின்ன பையனாக இருக்கும்போது தெரியாமல் சாப்பிட்டதால் இப்போது ரப்பர் போல உடலை மாற்றிக்கொள்ளும் சூப்பர் சக்திகளுடன் அதிகமாக நம்பிக்கையில் ONE PIECE புதையலுக்காக கடலுக்குள் இறங்குகிறார் நமது MONKEY D LUFFY .அவருடைய வாழ்க்கையில் நடக்கும் அட்வென்சர்கள் என்ன ? கொலைகார கடற் கொள்ளையர்களின் கூட்டத்தில் புத்திசாலியாக களம் இறங்கும் இவரும் இவருடைய குழுவில் இருப்பவர்களும் எப்படி பிரச்சனைகளை கடந்து சாதனைகளை செய்கிறார்கள் என்று ரொம்ப நேர்த்தியான ஒரு கதைதான் இந்த ONE PIECE . ஒரு விமர்சனமாக சொல்லவேண்டும் என்றால் MONKEY D LUFFY மற்றும் அவருடைய நண்பர்கள் எல்லோரையும் பார்க்கும்போது என் கண்ணே பட்டுவிடும் போல இருக்கிறது அவ்வளவு அருமையான ஃபிரண்ட்ஸ்ஸாக இருக்கிறார்கள். என்ன கஷ்டம் வந்தாலும் ஒருவரை விட்டு இன்னொருவர் போவதே இல்லை. அப்படி ஒரு நல்ல குழுவாக இருக்கிறார்கள். இந்த உலகத்திலேயே கடலை கொள்ளை அடிக்க கப்பல் வேண்டும் என்பதற்காக ஒரு பணக்கார பெண்ணுக்கு உதவி பண்ணி அவளுடைய உயிரை காப்பாற்றி அவளிடம் இருந்து பரிசாக ஒரு கடல் கொள்ளை கப்பல்லை வாங்கிய கேப்டன் நம்ம LUFFY யாக மட்டும்தான் இருக்க முடியும் . இவர்கள் மனதுக்குள்ளே கொஞ்சம் கூட கெட்ட எண்ணங்கள் இல்லாமல் புதையல் வேண்டும் என்ற ஒரே காரணத்தால் மட்டும்தான் கடலில் இறங்கி இருக்கிறார்கள். அதனால்தான் இவர்கள் ஸ்பெஷல். இங்கே THE WITCHER போல அடுத்த சீசன்னில் கன்டினியூ பண்ணிக்கொள்ளலாம் என்று முடிக்காமல் இந்த சீசன்னில் ஒரு மொத்தமாக நிறைவு பண்ணப்பட்ட ஸ்டோரி ஆர்க்கை கொடுத்து இருக்கிறார்கள். ஒரு மன நிறைவான கதை. ரொம்ப கிரியேட்டிவ் ஆன கதை. சோர்ஸ் அனிமேஷன் தொடருக்கு கௌரவம் கொடுக்கும் அளவுக்கு ஒரு பக்காவான அடாப்ஷனை நெட்ஃப்லிக்ஸ் கொடுத்து இருக்கிறது. ரொம்ப பாராட்டப்பட வேண்டிய விஷயம். 

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...