Sunday, November 5, 2023

CINEMA TALKS - VAIKUNDHAPURAM - TAMIL REVIEW - திரை விமர்சனம்

ஃபெஸ்டிவல் நாட்களில் ஃபேமிலியோடு வந்து தியேட்டர்ல பார்த்துட்டு போகவேண்டும் என்றால் கண்டிப்பாக ஒரு கமர்ஷியல் படமாக இருக்க வேண்டும் என்று நம்ம ஊரு சினிமாவில் ஒரு எழுதப்படாத சட்டம் இருக்கிறது. இந்த விஷயம் எங்கே இருந்து ஆரம்பமானது ? நீங்கள் இப்போது டக்கென்று உங்கள் போனை எடுத்து ஒரு மியூசிக் வீடியோ போட்டு பாருங்களேன். அந்த மியூசிக் வீடியோ எவ்வளவு பெரிய பட்ஜெட்டாக இருந்தாலும் ஒரு கலகலப்பு , கோபம் , ஃபேமிலி வேல்யூஸ் , ஆக்ஷன் , ரொமான்ஸ் என்று எதுவுமே இருக்காது. சும்மா கொடுத்த காசுக்கு ஒரு பெரிய ஆர்ட்வொர்க் பேக்ரவுண்ட் செட் போட்டு கடினமான ஸ்டெப்ஸ்ல டான்ஸ் ஆடுவதும் பாட்டு போட்டு வாயசைவில் அசைப்பதுமாக மட்டும்தான் இருக்கும். ஆனால் கமர்ஷியல் படங்கள் இப்படியான விஷயங்கள் இல்லை. தொடர்ந்து 2 மணி நேரம் உங்களை கன்டினியூவாக ஒரு நாடகக் கதைக்குள் மக்களை உட்கார வைக்க வேண்டும். பொறுமையாக கதையை கவனிக்க வேண்டும். ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒருவர் பொறாமையின் காரணமாக பணக்கார குடும்பத்தில் பிறந்த குழந்தைக்கு பதிலாக தன்னுடைய குழந்தையை மாற்றி வைத்துவிடுகிறார். இப்போது அந்த வேலை பார்ப்பவரின் குடும்பத்தில் மிடில் கிளாஸ் இளைஞராக வளரும் பையன்தான் அல்லு அர்ஜூன். ஒரு கட்டத்தில் இந்த உண்மை தெரியும்போது அவருடைய சொந்த குடும்பமான பணக்கார குடும்பத்துக்கு பிரச்சனைகள் இருப்பதால் பாதுகாக்க களம் இறங்கும் அர்ஜூன்னுக்கு என்ன நடக்கிறது என்பதுதான் இந்த படத்தின் கதைக்களம். ஜெயராம் , அர்ஜுன் , பூஜா , தபு , சமுத்திரக்கனி என்று நிறைய ஸ்டார்கள் நடித்துள்ள இந்த படம் மொத்தமாக எண்டர்டெயின்மெண்ட் ஃபோகஸ் படமாக இருக்கிறது. இந்த படம் கண்டிப்பாக ஆடியன்ஸ் பாயிண்ட் ஆஃப் வியூல இருந்து ஒரு பெரிய சக்ஸஸ் ஆகணும் என்று எடுக்கப்பட்ட ரிஸ்க்தான். இந்த மாதிரி கமர்ஷியல் ஆக்ஷன் டைப் படங்கள் வெற்றி அடைவது ரொம்ப ரிஸ்க் ஆனது. வாரிசு இந்த படத்தை போலத்தான் எடுக்க முயற்சி பண்ணி சோதப்பு சோதப்பு என்று சோதப்பியிருந்தது.  (பத்து எண்ணறதுக்குள்ள , உத்தம புத்திரன் , வெள்ளைக்கார துரை படங்களை கூட எடுத்துக்கொள்ளலாமே ! கதை ஃபோகஸ் இல்லை , என்டர்டைன்மெண்ட் மட்டும்தான் ஃபோகஸ்). மொத்ததில் இவ்வளவு பெரிய பட்ஜெட் , இவ்வளவு ஸ்டார் வேல்யூ படத்துக்கு இருப்பதால் தீபாவளி மற்றும் பொங்கல் போன்ற விசேஷமான நாட்களில் வீட்டில் இருக்கும்போது ஈவினிங் ஷோவாக இந்த படத்தை பார்க்கலாம். ஒரு சில படங்கள் ஃபேமிலி ஆடியன்ஸ்ஸை எதிர்பார்த்து எடுக்கப்பட்டாலும் தியேட்டர்ரில் சோதப்பி இருக்கும் (சிவகார்த்திக்கேயனின் மிஸ்டர் லோக்கல் படம் எடுத்துக்கொள்ளுங்கள் , வருத்தப்படாத வாலிபர் சங்கம் அல்லது ரஜினி முருகன் அளவுக்கு எதுவுமே சிறப்பான முறையில் அந்த படத்தில் இருந்ததா ?) ஆனால் இந்த படம் அந்த தவறை பண்ணவில்லை. உண்மையிலேயே ரொம்ப நன்றாக ப்ரெசெண்ட் பண்ணி இருக்கிறார்கள். நிறைய ஃபேமிலி வேல்யூஸ் இருக்கும் ஒரு நல்ல கமர்ஷியல் படம். மிஸ் பண்ணாமல் பாருங்கள். 


No comments:

Post a Comment

CINEMA TALKS - MISSION IMPOSSIBLE GHOST PROTOCOL - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

சொந்த நாட்டின் பாதுகாப்புக்காக வெளிநாட்டில் தங்களுடைய உயிரை பணயம் வைத்து மிஷன்னை முடிக்க வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள் கதாநாயகன் ஈதன் மற...