Monday, November 6, 2023

CINEMA TALKS - NEETHANE ENTHAN PONVASANTHAM - TAMIL REVIEW - திரை விமர்சனம்.



 இந்த மாதிரி கமர்ஷியல் சாயல் இல்லாத ஒரு ஃப்யுர்ரான ரொமான்ஸ் படம் கிடைப்பது ரொம்ப ரொம்ப கஷ்டம். கௌதம் வாசுதேவ் மேனன் இந்த படத்தை ரொம்பவுமே நன்றாகவே கொடுத்து இருப்பார். சமந்தா அவருடைய போர்ஷனை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பண்ணிக்கொடுக்க ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளில் எடுக்கப்பட்ட படம். இந்த படத்துடைய கதை என்னவென்றால் பள்ளிக்கூட நாட்களில் ஆரம்பிக்கும் வருண் மற்றும் நித்யாவின் காதல் சின்ன சின்ன மோதல்களாக பிரிந்துவிடவும் மறுபடியும் இன்னொரு முறை கல்லூரியில் சந்திக்கும்போது காதல் மறுமுறை புதிதாக தொடர்கிறது. இந்த முறை சின்ன சின்ன மோதல்கள் இல்லாமல் இருந்தாலும் வருண் அவருடைய குடும்பத்தை ஒரு பெரிய நிலைக்கு கொண்டு போக வேண்டும் என்ற காரணத்தால் பெரிய படிப்பு மற்றும் சம்பளம் கிடைப்பதற்காக ஃபோகஸ் செய்து முயற்சிகளை பண்ணுகிறார். இதனை புரிந்துகொள்ளாத நித்யா மறுபடியும் மிஸ்ஸண்டர்ஸ்டான்டிங்காக பிரிந்து சென்றுவிடுகிறார். இப்போது வருண் நிறைய மாதங்கள் கஷ்டப்பட்டு அவருடைய குடும்பத்தை மேலேகொண்டுவந்த பின்னால் நித்யாவை சந்தித்து பேசி சமாதானம் செய்ய வருண் பண்ணும் முயற்சிகள் வெற்றியை கொடுத்ததா ? இந்த இருவரின் காதல் கிளைமாக்ஸ்ஸில் என்ன ஆனது ? என்று ஒரு நல்ல ரொமான்டிக் கதைக்களத்தில் கதை நகர்கிறது. படத்தில் ஆங்காங்கே இருக்கும் இளையராஜாவின் பாடல்களும் பின்னணி இசையும் படத்துக்கு ரொம்ப பெரிய பிளஸ் பாயிண்ட். நான் முன்னதாக சொன்னது போல ரொமான்ஸ் தவிர்த்து படத்தின் வேறு எந்த விஷயங்களும் அளவுக்கு அதிகமாக சேர்க்கப்படவில்லை. விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படம் எப்படி ரொமான்டிக் ரெலேஷியன்ஷிப்பில் இருக்கும் சின்ன சின்ன மோதல்களும் ஊடல்களும் என்றே சென்றுக்கொண்டு இருக்குமோ அதே போலத்தான் இந்த படமும் காதலில் நடக்கும் விஷயங்களை மையப்படுத்தியே கதையாக நகர்ந்துகொண்டு இருக்கிறது. ஜீவா மற்றும் சமந்தாவின் ஸ்கிரீன் ப்ரெஸன்ஸ் ரொம்ப ஃபேன்டாஸ்டிக். 

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...