Friday, November 3, 2023

GENERAL TALKS - யோசிக்க வேண்டிய விஷயம் - என்ன யோசிக்கணும் எதுக்கு யோசிக்கணும் ! - நிஜவாழ்க்கை விமர்சனம் !

 





ஒரு நாள் யோசிக்கணும். நடந்த விஷயங்களுக்கு எல்லாமே காரணம் என்ன ? எங்கே ? எப்போ ? எப்படி எல்லா தவறுகளும் நடந்தது ? நம்ம வாழ்க்கையில் இன்னும் முன்னேற முடியாமல் இருக்க காரணம் என்ன ? என்று யோசிக்கணும். இப்படி யோசிக்க நேரம் இல்லாமல்தான் மக்கள் பொழுதுபோக்குகளில் கவனத்தை செலுத்திக்கொண்டு இருக்கிறார்கள். பொழுதுபோக்கு உங்களுக்கு கொடுக்கும் அறிவுத்திறனை விட அனுபவம் உங்களுக்கு கொடுக்கும் அறிவுத்திறன் ரொம்ப ரொம்ப அதிகம். இப்படி இருக்கும்போது பொழுதுபோக்கு உங்களுக்கு உடல் அளவிலும் மன அளவிலும் எந்த சோர்வும் உருவாக்குவது இல்லை என்ற காரணத்தால் பொழுதுபோக்கை நீங்கள் எடுத்துக்கொள்ள கூடாது. இங்கே என்னுடய வாழ்க்கையில் நான் ஆசைப்பட்ட விஷயங்கள் , கார் , பைக் , சொந்த வீடு , கம்ப்யூட்டர் , ஃபோன் , தொலைக்காட்சி , சோலார் பவர் என்று நிறைய விஷயங்கள் இருக்கிறது. இங்கே போன தலைமுறை சொத்துக்கள் இருப்பவர்கள் பிடித்த விஷயங்களை தாராளமாக வாங்கிவிடுவார்கள் ஆனால் சொத்துக்கள் என்று எதுவுமே இல்லாமல் ஆசைப்பட்ட விஷயத்தை வாங்கிவிடவே முடியாதா ? இப்போ இது எல்லாமே ஒரு மினிமம் பேசிக்காக எவ்வளவு செலவு ஆகிறது என்று பார்க்கலாமா ? 1. கார் . 6.75L 2.பைக் 1.35L 3.வீடு 38.00 L 4. கம்ப்யூட்டர் 0.90 L 5.தொலைக்காட்சி (மெம்பர்ஷிப் எல்லாமே சேர்த்து) 0.30 L சோலார் பவர் 2.25 L என்று டாப் 6 ஆசைகளை நிறைவேற்ற நமக்கு தேவைப்படும் பணம் மட்டுமே இவ்வளவு  அதிகமாக இருக்கிறது. நான் என்னுடைய வாழ்க்கையில் அடிப்படையாக நினைக்கும் விஷயங்களை வாங்கவே எனக்கு 40 லட்சமாவது தேவைப்படுகிறது. அப்படி இருக்கும்போது என்னை விட அதிகமாக சாதிக்க நினைக்கும் நிறைய பேர் அவங்க வாழ்க்கையில் அவங்க நினைத்த விஷயங்களை அடையனும்னா அவங்களுக்கு நிறையவே பணம் வேண்டும். இங்கதாங்க நம்ம பிரச்சனை இருக்கு. இந்த வாழ்க்கையில எல்லோருமே ஒரு பேசிக் மெம்பர்ஷிப்ல இருக்கோம். குறைஞ்சபட்சம் ஒரு சதவீதத்துக்கும் குறைவான ஆட்கள்தான் நல்ல பணம் வரவு செலவு பண்ணக்கூடிய பிரிமியம் மெம்பர்ஷிப்ல இருக்காங்க. இன்னும் ரொம்ப கவனமாக பார்த்தால் ஒரு 50000 பேர்தான் பிளாட்டினம் மெம்பர்ஷிப்ல இருக்காங்க. இன்னைக்கு அமெஷான் காடுகள் நெருப்பாக எரிந்தாலும் கவலையே இல்லைன்னு நாம மாற காரணம் என்ன ? பொதுவாக மக்களையே 3 வகையில் பிரிக்கலாம். 1. கவர்ன்மெண்ட் சேர்ந்தவர்கள் 2. பிரைவேட் சேர்ந்தவர்கள் 3. பப்ளிக் சேர்ந்தவர்கள். ஒரு எக்ஸாம்பில்க்கு கவர்ன்மெண்ட் சேர்ந்தவர்கள் பற்றி பேசினால் நம்ம கோடியில் ஒருவன் படத்தின் விஜய் ஆண்டனியுடைய கதாப்பாத்திரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். இங்கே இவர் பிரைவேட் கம்பெனியில் வேலை பார்க்கவில்லை. ஆனால் பப்ளிக்குக்கு அவருடைய அதிகாரத்துக்கு உட்பட்டு ஹெல்ப் பண்ணுவார். இன்னொரு பக்கம் பிரைவேட் சேர்ந்தவர்கள் என்று பார்த்தால் விஜய் நடித்து வெளிவந்த சர்கார் படத்தில் ஹீரோவாக இருக்கும்  நம்ம GL இன் CEO சுந்தர் ராமசாமியை எடுத்துக்கொள்ளலாம் அவருடைய தனியார் நிறுவனத்தின் மூலம் கிடைத்த வருமானத்தை வைத்து மக்களுக்கு ஹெல்ப் பண்ணுவார். கடைசியாக பப்ளிக் சேர்ந்தவர்கள் என்று பார்த்தால் நம்ம மாமன்னன் படத்தின் உதயநிதி அவர்கள் பண்ணிய கேரக்டர்ரை எடுத்துக்கொள்ளலாம் அதிவீரன் என்ற அவருடைய காதாப்பாத்திரத்தில் அரசாங்க வேலை மற்றும் தனியார் நிறுவனங்களை சாரந்து இருக்காமல் அவருடைய தற்காப்பு கலைகளை சொல்லிக்கொடுத்து அதன் மூலமாக பணம் சம்பாதிப்பார். இங்கே பணம் சம்பாதிக்கும் எந்த கதாப்பத்திரத்தை எடுத்தாலும் அவர்கள் இந்த உலகத்துக்கு ஏதாவது ஒரு விஷயத்தை கொடுத்து இருக்கிறார்கள். எக்கனாமிக்ஸ்ஸில் ஒரு கான்ட்ரிப்யூஷன் கொடுத்து இருக்கிறார்கள். ஆனால் இப்போது உலகம் முழுக்க தனியார் நிறுவனங்கள் அதிகாரத்தை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டதால் நாம் எல்லோருமே உண்மையான விஷயங்களுக்கு மதிப்பு கொடுப்பதை விட்டுவிட்டு கற்பனையான விஷயங்களுக்கு மதிப்பு கொடுக்கிறோம். ஃபிக்ஷன் வொர்க்ஸ் அதாவது படங்கள் , புத்தகங்கள் , மீடியாக்கள் இவைகளை சார்ந்து பணம் சம்பாதிப்பது கூட பிரயோஜனமானது. இந்த கிரிப்டோகரன்சி உருவாக்குவது எல்லாம் ஒரு செட்டப் மட்டும் 20000 யூனிட் கரண்ட் எடுக்கிறது. ஒரு தெருவே ஒரு வாரம் பயன்படுத்தும் கரண்ட்டை ஒரே நாளில் பயன்படுத்துகிறது. ஒரு லாரி அளவுக்கு நிலக்கரி ஒரு நாளில் எரிக்கப்பட்டு காற்று பல நூறு மீட்டர்களுக்கு மாசுபட்டு இருக்கிறது.  ஆனால் பதிலுக்கு கிரிப்டோ கரன்சி என்ன கொடுத்தது. ஒரு விவசாயி இரண்டு ஏக்கர் நிலத்தில் விவசாயம் பண்ணி மக்காச்சோளம் பயிர் போட்டால் 55000 ரூபாய் முதலீட்டுக்கு 1,40,000 பணத்தை மூன்று நாட்களில் சம்பாதித்து இந்த உலகத்தில் 1000 பேருக்கு மேல் சாப்பிட சாப்பாடு கொடுத்துள்ளார். ஆனால் கிரிப்ட்டோ கரன்சி யாருக்கு சாப்பாடு போடுகிறது ? இந்த மாதிரி மனிதர்கள் ஆறு போல ஓடும்  அறியாமையில் மூழ்கி இருந்தால் கடைசியில் உயிரோடு எழுந்துவரவே முடியாத அளவுக்கு நடுக்கடலுக்குள் மாட்டிக்கொண்டு இருப்பார்கள். இங்கே யாருக்குமே யாரை பற்றியும் கவலை இல்லை. உங்களுடைய பாங்க் பேலன்ஸ் மட்டும் ரூபாய் 50000 க்கு குறைவாக இருந்தால் அப்பா , அம்மா , அண்ணன் , அக்கா , தங்கை , தம்பி , மாமன் , மச்சான் , சித்தப்பா , பெரியப்பா . கஸின் , னேஃப்யூ , சித்தி , பெரியம்மா , தாத்தா ,பாட்டி என்று யாருமே மதிக்க மாட்டார்கள், உங்களிடம் அன்பு காட்ட நீங்கள் பணக்காரனாக இருக்க வேண்டும். இங்கே எக்ஸ்சேப்ஷன் யாரென்றால் நிஜமாகவே அன்கன்டிஷனல்லாக இருப்பவர்கள்தான். அப்படி இருப்பவர்கள் ரொம்ப ரொம்ப குறைவு. இந்த வகையில் நான்கு விதமான மனிதர்கள் இருக்கிறார்கள். நீங்கள் NARUTO மற்றும் NARUTO : SHIPPUDEN என்ற டெலிவிஷன் அனிமேஷன் சீரிஸ் பார்த்து இருக்கலாம் அங்கே ஹீரோ நருடோ ரொம்பவுமே அன்கன்டிஷனலாக இருப்பார் எல்லோருக்குமே ஹெல்ப் பண்ணுவார் ஆனால் அவருடைய நண்பர் சாசுகே மிகவும் கண்டிஷன்னலாக இருப்பார் அவர் எல்லோரையும் கணித்துதான் செயல்படுவார். இவர்களின் தோழி சாக்குரா எப்போதுமே பேலன்ஸ்ஸடான ரிலேஷன்ஷிப்பில் இருப்பார். இவர்களுக்கு ஆசிரியராக இருக்கும் ககாஷி ஒரு நல்ல தலைவராக இருப்பார். ரிலேஷியன்ஷிப் என்பதை விடவும் நேர்மையாக லீடர்ஷிப்புடன் மட்டும்தான் பழகுவார். இந்த நெடுந்தொடர் ரொம்ப அருமையாக இருக்கும். கிட்ஸ்க்கு இந்த தொடர் முடியும்போது ரொம்ப நல்ல மெச்சூரிட்டி கிடைக்கும். இப்போது பாயிண்ட்க்கு வருவோம். இந்த பணம் நிறைந்த எக்கானாமிக்ஸ்ஸின் உலகத்தில் நாம் உலகத்துக்கு எதுவுமே கொடுப்பது இல்லை (நான் டொனேஷன்களை பற்றி பேசவில்லை அது வேறு விஷயம்) ஆனால் இந்த உலகத்தினை அளவுக்கு அதிகமாக மாசுபடுத்திக்கொண்டு இருக்கின்றோம். இங்கே தொடர்ந்து மரங்கள் வெட்டப்படுவதும் பிளாஸ்டிக் கோட்டப்படுவதும் நடந்துகொண்டேதான் இருக்கிறது. இது எல்லாமே ஒரு நாள் இல்லைனாலும் ஒரு நாள் தடுத்தேதான் ஆகவேண்டும் ! ஆனால் என்னைக்கு ? அப்படிப்பட்ட நாள் வருமா ? நானும் ஒரு நாளில் பணக்காரன் ஆகி காட்டுவேன் என்று சினிமாவில் சொல்லுவார்கள் ஆனால் உண்மையான வாழ்க்கையில் அது நடக்குமா ? உங்களுக்கு 5 மாதமாவது தேவைப்படும். உங்களுடைய ஊருக்கு ஒரு குப்பைத்தொட்டி வாங்கி கொடுக்க மட்டும்தான் உங்களால் முடியும்.  உங்களால் எதுவுமே இல்லாமல் பணம் சேர்க்க ஆரம்பித்தால் நிகர பூச்சியத்தில் இருந்து உங்கள் வங்கிக்கணக்கு 50000 த்தை தொட முயற்சி பண்ணுவதே ரொம்ப கஷ்டம். குறைந்தபட்சம் ஒரு வருஷமாவது உங்களுடைய சொந்த முயற்சிக்கு தேவைப்படும். உங்களால் உங்களை காப்பாற்றிக்கொள்ளவே உங்களுக்கு இவ்வளவு நாட்கள் ஆகிறதே அப்படியென்றால் உலகம் இதுவரைக்கும் பட்ட சேதாரத்தை சரி பண்ண எவ்வளவு நாட்கள் ஆகும் என்று யோசித்து பாருங்கள். நான் இங்கே பிளாஸ்டிக் ஒரு கொடூரமான விஷயம் என்று சொல்லவில்லை. பிளாஸ்டிக் 100 சதவீதம் RECYCLE பண்ணப்பட வேண்டிய மெடீரியல் என்று சொல்கிறேன். ஒரு 16 ரூபாய் தண்ணீர் பாட்டில் தூக்கி போடப்படும்போது இயற்கையாக டிகம்போஸ் ஆனால் சின்ன சின்ன பிளாஸ்டிக் தூசுக்களாக மாறுகிறது. பின்னதாக நிறைய நாட்களுக்கு மட்கிப்போன பின்னால் சின்ன சின்ன பிளாஸ்டிக் தூசுக்களாக கடல் நீரில் கலந்து 100 மீன்களுக்கு மேலே கொல்கிறது. அடுத்தடுத்த வருடங்கலில் இன்னுமே அதிகமாகவே கொல்கிறது. ஒரு பிளாஸ்டிக் பாட்டில் மறு சுழற்சி பண்ணப்பட முடியவில்லை என்றால்லே நூற்றுக்கணக்கான சின்ன சின்ன உயிர்களுக்கு சங்குதான் ! இப்படிதான் உலகம் போக வேண்டுமா ? ரொம்ப அடிப்படையான கேள்வியை நான் கேட்கிறேன். ஒரு பிறந்த குழந்தையை இந்த குடும்பத்தில் பிறந்ததால் மரியாதை கொடுக்கப்பட வேண்டிய குடும்பம் என்றும் இன்னொரு குடும்பத்தில் பிறந்தால் அடிப்படையில் இருந்தே மரியாதையே கொடுக்காமல் சாகும் வரைக்கும் வேலைக்கரனாகவே வாழவேண்டிய குடும்பம் என்றும் பிரிக்க முடிகிறது. இப்படி ஒரு மானசாட்சியற்ற குற்றங்களை பண்ணினாலும் தெரிந்து பண்ணுகிறார்கள். ஆனால் இந்த பிளாஸ்டிக் பாட்டில் விஷயத்தில் தெரியாமல் பெரிய தப்பு பண்ணுகிறோம். இந்த விஷயத்தை நான் ஆயிரம் முறை கத்தினாலும் யாருமே கண்டுகொள்வது இல்லை. இந்த மாதிரி விஷயங்கள் இந்த உலகத்தை கொஞ்சம் கொஞ்சமாக கொன்றுக்கொண்டு இருக்கும் கேன்சர் போன்றது. இதுதான் இந்த உலகத்துடைய விதியா என்று கேட்டால் கண்டிப்பாக கிடையாது. தர்மசங்கடமான விஷயம் என்னவென்றால் இங்கே நீங்கள் மோதும் யாராக இருந்தாலும் நல்லவர்கள் கிடையாது. அதனால்தான் நீங்கள் கவனமாக மொத்த வேண்டும். நீங்களுமே நல்லவராக இருக்கவும் முடியாது. நல்லவராக இருப்பது என்பது ஒரு ஃபிக்ஷன்னல் விஷயம். நடைமுறை வாழ்க்கையில் இது சாத்தியப்படாது. இதுக்குதான் நான் ஒரு விஷயம் சொல்கிறேன். ஒரு நாள் நீங்கள் ஒரு நாள் முழுவதையும் எடுத்துக்கொண்டு யோசிக்க வேண்டும். வாழ்க்கை என்பது மூன்று விஷயங்கள்தான் , கடந்தகாலம் , நிகழ்காலம் , எதிர்காலம். உங்களுடைய காலம்தான் உங்கள் வாழ்க்கையை தீர்மானிக்கும். ஒரு கார் ஆக்சிடென்ட்ல கால் போனாலோ இல்லைன்னா கேன்சர் வந்து காசு எல்லாம் கரைந்தாலோ யாருமே பொறுப்பு எடுத்துக்கொள்ள மாட்டார்கள். அந்த நேரத்தில் உங்கள் பர்ஸ்ல இருக்கும் பணம் மட்டும்தான் உங்களை காப்பாத்தும். ஆனால் பணத்தையும் கூட எடுத்துக்கொள்ளலாம் உங்களிடம் இருந்து எடுக்க முடியாதது உங்களுடைய அறிவு. இன்னைக்கு உங்களால் முடியும் என்றாலும் இன்றைக்கு யோசியுங்கள் ! கடந்த காலத்தில் என்ன நடந்தது என்று யோசியுங்கள் , நிகழ்காலத்தில் என்ன பண்ணிக்கொண்டு இருக்கிறோம் என்று யோசியுங்கள். இனிமேல் எதிர்காலத்தில் என்ன பண்ண வேண்டும் என்று முடிவெடுத்து செயல்படுங்கள். எல்லோருமே ஓடுகிறார்கள் என்றால் பந்தயமா நடக்கிறது ? பரிசு ஏதேனும் கிடைக்குமா ? எதுக்காக ஓட வேண்டும் என்ற கேள்வியை கேளுங்கள் ! எந்த கேள்வியும் கேட்காமல் இருந்தால் அது அடிமைத்தனம். அப்படி ஒரு வாழ்க்கையை வாழவே வேண்டாம். 

இணைப்பு : SONG : OH BABY GIRL - ALBUM : MAALAI POLUTHIN MAYAKKATHILE . 

No comments:

Post a Comment

CINEMA TALKS - MISSION IMPOSSIBLE GHOST PROTOCOL - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

சொந்த நாட்டின் பாதுகாப்புக்காக வெளிநாட்டில் தங்களுடைய உயிரை பணயம் வைத்து மிஷன்னை முடிக்க வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள் கதாநாயகன் ஈதன் மற...