Monday, November 20, 2023

SIMPLE TALKS - ஃபோன்களின் கதை ! - LOCAL SHOPPING V. ONLINE SHOPPING - தமிழ் கட்டுரை !

 



ஒரு பொருளை ஆன்லைன்ல வாங்குவதற்கும் உள்ளூர் கடைகளில் வாங்குவதற்கும் இப்போ நான் போஸ்ட் போட்டு இருக்கும் இந்த காலத்தில் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது. முதல் விஷயம் ! உள்ளூரில் உற்பத்தி பண்ணிய தரமற்ற பிராண்ட்கள் , இந்த பிராண்ட் எப்படிப்பட்டது என்றால் ஃபோன் வாங்கிய 3 வாரத்தில் டிஸ்ப்ளே. காமிரா , ஸ்பீக்கர் என்று எதாவது ஒரு காலியாகிவிடும். இந்த போனுக்கா குறைந்த பட்சமாக 7000 ரூபாய் மற்றும் அதுக்கும் மேலே அதிகமாக 20000 வரைக்கும் பணம் கொடுத்தோம் என்று பின்னாட்களில் யோசிக்க வைத்துவிடும் அந்த அளவுக்கு தரமற்ற பர்சேஸ். இந்த ஃபோன் பிராசசர்கள் எல்லாம் 3 வருஷம் முன்னாடி வெளிவந்ததாக இருக்கும். இவர்களை சொல்லி குற்றம் இல்லை ! பெரிய கம்பனிகள் ஹை எண்டு பிரிமியம் ஃபோன்கள் எப்போதுமே ஆன்லைன்னில்தான் ஆர்டர் பண்ணி வாங்கிக்கொண்டு இருக்கிறார்கள் என்று கண்டுபிடித்து உள்ளனர். ஆஃப்லைன்னில் வாங்கும் மக்களுக்கு இந்த மாதிரி ஃபோன் பிராசசர் மற்றும் காமிரா சென்ஸார்களை பற்றி என்ன தெரிய போகிறது. இவர்களுக்கு ஆயிரம் யூ-ட்யூப் வந்தாலும் புரியவைக்க முடியாது என்று மொத்த கடையையும் குளோஸ் பண்ணிவிட்டு ஆன்லைன் கடையை ஓபன் பண்ணிவிடுகிறார்கள். நம்ம ஆன்லைன் கம்பெனிகளும் கொழுத்த இலாபம் பார்ப்பதால் எப்படியோ டை-அப் பண்ணிக்கொண்டு பெரிய பிரிமியம் ஃபோன்கள் மற்றும் மீடியம் ரேஞ்ச் ஃபோன்களை 'ஆன்லைன் மட்டும்' என்று ஸ்டிக்கர் ஒட்டி விற்றுவிடுகிறார்கள். இங்கே ஆஃப்லைன்னில் இருக்கும் கஸ்ட்டமர்களுக்கு கொஞ்சம் கூட நல்ல மாடல் ஃபோன்கள் இல்லவே இல்லை. இங்கே ஆஃப்லைன் கடையில் வாங்கும் மக்களுக்கு ரொம்ப மட்டமான குடிசை தொழில் வகையறா ஃபோன்கள் மட்டும்தான் கிடைக்கிறது. அதனால் ஃபோன் வாங்குவது நான் கண்டிப்பாக ஆன்லைன் ரெகமண்ட் பண்ணுகிறேன் என்று சொல்ல முடியாது. அந்த அந்த பிராண்ட்களில் எக்ஸ்க்லுஸிவ் ஷோ ரூம்களில் நல்ல ஃபோன்கள் அவைகளின் ஆன்லைன் மாடல் மற்றும் அந்த மாடல்களுக்கு நிகரான தரமான மாடல்கள் உங்களுக்கு கிடைக்கலாம், இந்த மாதிரி கடை ஃபோன்கள் இ-எம்-ஐ கட்டி வாங்கவும் உள்ளூரில் வாங்கவும் மட்டுமே நன்றாக இருக்கிறது. உங்களை நான் கெஞ்சி கேட்கும் விஷயம் என்னவென்றால் OPPO , VIVO , REDMI , SAMSUNG போன்ற பிராண்ட் ஃபோன்களை மட்டுமே வாங்குங்கள். மட்டமான ஃபோன்களில் சும்மா எஃப் எம் ரேடியோ போர்ட் வேலை பார்த்தது போல ஃபோன்னை டிசைன் பண்ணி இருப்பார்கள் இந்த ஃபோன்களை சும்மா கொடுத்தால் கூட வாங்க வேண்டாம். இவைகளில் போனுக்கும் பேட்டரிக்கும் வெறும் குட்டி WIRE வைத்து பற்றவைத்து இருப்பார்கள். (SOLDER பண்ணி இருப்பார்கள்) இந்த மாடல்கள் வெறும் குடிசை தொழில் ஃபோன்கள் இவைகளில் உள்ள பிராசசர்கள் எஃப் எம் ரேடியோ ஐ. ஸி. க்களுக்கு சமமானது. உங்கள் காசு வீணாக போய்விடும். கம்பெனி ஃபோன்கள் என்றால் தரம் நன்றாக இருக்கும். இந்த லவ் டுடே படத்தில் ஃபோன் அஸம்ப்லிங்க் பண்ணும் காட்சியில் இருப்பது போல இயந்திரங்கள் வைத்து அஸம்பில் பண்ணி இருப்பார்கள் . இதுவே ஆன்லைன்னில் ஃபோன் வாங்கலாமா என்று கேட்டால் அங்கேயும் நிறைய ஏமாற்று வேலைகள் இருக்கிறது. இல்லாத ஒரு ஃபோன்னை இருப்பதாக கணக்கு காட்டி புக்கிங் அட்வான்ஸ் வாங்கிக்கொண்டு டெலிவெரியை லேட் பண்ணியது போல காட்டிவிடுவார்கள். மேலும் ஒரு ஒரு சின்ன சின்ன ஃபால்ட்க்கும் நீங்கள் பார்சல் பண்ணி கம்பெனிகளுக்கு அனுப்ப வேண்டியது இருக்கும். ஒரு ஃபோன் மாடல் வந்ததும் உடனடியாக ஆர்டர் போட்டுவிட வேண்டும் என்பது மட்டமான யோசனை. ஒரு மாதம் இரண்டு மாதம் காத்திருந்து யூ-ட்யூப் சேனல்களில் வாங்கியவர்கள் கொடுக்கும் விமர்சனங்களை எல்லாமே பார்த்து பின்னால் அந்த ஃபோன் வோர்த்தா ? இல்லையா ? என்று யோசித்து முடிவு பண்ணி வாங்க வேண்டும். இப்படி நிறைய விஷயங்கள் ஃபோன் வாங்குவதில் இருக்கிறது.   

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...