Friday, November 17, 2023

CINEMA TALKS - JAWAN - TAMIL REVIEW - திரை விமர்சனம்

ஒரு ரொம்ப பெரிய ஆக்ஷன் படத்தில் நம்ம கமர்ஷியல் ஆடியன்ஸ் எதிர்பார்க்கும் எல்லா விஷயங்களும் இந்த படத்தில் கிடைக்கும் ஆனால் என்ன பிரச்சனை என்றால் நீங்கள் எதிர்பார்ப்பதை விட அதிகமாகவே இந்த படத்தில் கிடைக்கிறது. பொதுவாக நான் மார்ட்டின் ஸ்கார்ஸிஸ் எடுப்பதுதான் சினிமா என்ற முட்டாள்தனமான ஐடியாலஜிக்கு சப்போர்ட் பண்ணுவது கிடையாது. சினிமா என்றால் எல்லா வகையான ஃபிக்ஷன்னல் வொர்க்ஸ்களும் காமிராவுக்கு கொண்டுவரபட்டு ஆடியன்ஸ்ஸை ஒரு எண்டர்டெயின்மெண்ட் வேர்ல்ட்க்குள் கொண்டுவருவதுதான் அந்த வகையில் ஜவான் வெற்றி அடைகிறது. குறிப்பாக பொது அரசியல்லில் நிறைய கரேப்ஷன் இருப்பதால் விவசாயம் , மருத்துவம் , தொழில் துறை , பாதுகாப்பு , சுற்றுச்சூழல் என்று எல்லா துறையிலும் நிறைய பாதிப்புகள் இருக்கிறது ஆனால் அந்த பாதிப்புகளை தடுக்க ஒருவர் நேருக்கு நேராக ஒரு சிறிய தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவுடன் இணைந்து போராடுகிறார். குறிப்பாக அந்நியன் படத்துக்கு பின்னால் ஒரு மனிதர் வேர்சஸ் மொத்த கரப்டெட் உலகம் என்ற கான்செப்ட் மற்ற படங்களில் அதிகமாக வெற்றி அடையவில்லை. ஆனால் இந்த படத்தில் நன்றாகவே வொர்க் அவுட் ஆகியுள்ளது. ஒரு சில இடங்களில் பெரிய பட்ஜெட் படம் என்பதால் எக்ஸ்டேன்டட் ஸாங்க்ஸ் மற்றும் ஸீன்கள் என்று 2:50 என்ற பெரிய படம் கிடைத்துள்ளது. ஆனால் மொத்த கதையும் 2 மணி நேரத்தில் சொல்லி முடித்துவிடலாம் என்றாலும் கிடைத்த பட்ஜெட்டை பெஸ்ட் யூஸ் பண்ணி இருக்கும் படத்தின் மேக்கிங் பாராட்டலாம். ஷாரூக்கான் அவருடைய பெஸ்ட் கொடுத்துள்ளார். நயன்தாரா மறுபடியும் இன்னொரு பெஸ்ட் பெர்ஃபார்மன்ஸ். விஜய் சேதுபதி வில்லன்னாக பேசிக்கான லெவல்லில் இருந்து வேறு ஒரு டாப் லெவல்க்கு ஒரு பயமுறுத்தும் கேரக்டர் டிசைன் கொடுத்துள்ளார். ப்ரொடக்ஷன் வேல்யூவுக்கு ஏற்ற காமிரா வொர்க்ஸ் காஸ்ட்யூம்ஸ்,  டிசைன்ஸ் மற்றும் ரொம்ப நல்ல விஷுவல் எஃபக்ட்ஸ் , ரொம்ப கிராண்ட்டான ஸ்டோரி என்று நிறைய விஷயங்களை சொல்லி கிளைமாக்ஸ்ல மக்களுக்கு நிறைய மெசேஜ் சொல்லி இந்த படம் முடித்து இருப்பதால் கண்டிப்பாக நீங்கள் பார்க்க வேண்டிய படம். பெரிய ரன்னிங் டைம் இருப்பதை கருத்தில் கொள்ளாமல் ஒரு மேஜிக் என்று பார்த்தால் ஒரு நல்ல சினிமா பிரசன்டேஷன். இந்த படத்தை தமிழில் பார்த்தேன். டயலாக்ஸ் வேற லெவல். டப்பிங் ஃபென்டாஸ்டிக்காக இருக்கிறது இதுவும் ஒரு பிளஸ் பாயிண்ட். 

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...