Tuesday, November 7, 2023

CINEMA TALKS - POKKIRI - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!

 இந்த படம் வெளிவந்த காலத்தில இந்த படம் ரொம்பவுமே அதிகமாக பேசப்பட்டது. இந்த படத்துடைய கிளைமாக்ஸ்ல ஒரு டிரெண்ட் ஸேட் பண்ணிருப்பாங்களே !! இந்த படத்துடைய ஹீரோ ஒரு அன்டர்கவர் போலீஸ் ஆபீஸர், வில்லனுங்க நெட்வொர்க்ல வேலையில் சேர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக யாருக்குமே தெரியாம இன்வெஸ்டிகேஷன் பண்ணி இன்ஃபர்மேஷன் கலெக்ஷன் பண்ணி கொஞ்சம் கொஞ்சமா நெட்வொர்க்ல இருக்கும் எல்லோரையும் டார்கேட் பண்ணி தூக்குவது எல்லாமே வேற லெவல்லில் இருக்கும். இங்கே இன்னைக்கு காலத்துல விமர்சனம் பண்ணுகிறோம் பணம் சம்பாதிக்கிறோம் கார் வாங்கிவிட்டோம் என்று சுற்றிக்கொண்டு இருக்கும் விமர்சன ஹேயனாக்களுக்கு எல்லாமே கமர்ஷியல் படம் ஹிட் அடித்தால் வயிறு பற்றிக்கொண்டு எரிந்துவிடும். இவர்களை பொறுத்தவரைக்கும் வெளிநாட்டில் வெள்ளை சலவை போட்டு காமிரா கலர்ஸ் குறைத்து பிராண்ட் போட்டு வெளிவந்த படம்தான் படம் என்பார்கள். கமர்ஷியல் படங்களை நெகட்டிவ்வாகத்தான் விமர்சனம் பண்ணுவார்கள். இந்த போக்கிரி படத்தை மட்டுமே விமர்சனம் பண்ணவேண்டும் என்றால் எனக்கு ஒரு பேஜ் போதாது. நிறைய மெமரிஸ் இந்த படத்தில் இருக்கிறது. அப்போது எல்லாம் பாட்டு வரிகள் மட்டுமே பிரிண்ட் பண்ணி பப்ளிஷ் பண்ணும் பேப்பர்கள் இருந்தது. ஒரு படத்தின் 5 பாடல்கள் இருக்கும் சின்ன பேப்பர் 2 ரூபாய். நானும் நண்பர்களும் அந்த பாட்டு வரிகளை மனப்பாடம் பண்ணவே அவைகளை காசு போட்டு வாங்கிக்கொண்டோம்.  பிரபு தேவா டைரக்ஷன்ல வெளிவந்த இந்த படத்தில் படத்தின் டோன் ரொம்ப இண்டென்ஸ்ஸ்ஸாக போனாலும் வடிவேலு அவர்களின் காமெடி வேற லெவல்லில் இருக்கும். குங்பூவே தெரியாமல் மாஸ்டர் என்று சொல்லிக்கொண்டு உள்ளூரில் அவர் பண்ணும் அலப்பறைகள் வேற லெவல். இந்த படத்தில் விஜய் மற்றும் அஸின் ரொமான்ஸ் என்று பாடல்களும் சண்டைகளும் ரொமான்ஸ் காட்சிகளுமே மாறி மாறி சென்றுக்கொண்டு இருக்க இன்டர்வல்க்கு பின்னால் அலிபாய் என்ற கதாப்பத்திரத்தில் பிரகாஷ் ராஜ் களம் இறங்க ஆக்ஷன் வேற லெவல்லில் இருக்கும். இந்த படம் ஒரு மகேஷ் பாபு நடித்த தெலுங்கு படத்தின் ரீமேக் என்பதால் நம்ம ஆடியன்ஸ்க்கு பொருந்துவது போல நிறைய காட்சிகள் படத்தில் கொடுத்து நிறைய என்டர்டைன்மென்ட் வேல்யூவுடன் இந்த கதையை ப்ரெசெண்ட் பண்ணி இருப்பார். இந்த படத்தில் எல்லா பாட்டுமே ஹிட்டான பாட்டு , வசந்த முல்லை, செல்ல பேர் ஆப்பிள் , ஆடுங்கடா என்னை சுத்தி, டோல்லு டோல்லு , இந்த பாட்டு எல்லாமே காஸேட்ல டிவிடில மற்றும் மியூசிக் சேனல்களில் ரொம்பவுமே ரீச்சாக இருந்தது. ஸ்கூல் நாட்களில் ஆண்டு விழாவில் இந்த பாட்டுக்கு கஷ்டப்பட்டு ரெகர்ஸல் பண்ணி டான்ஸ் ஆடிய நாட்கள் எல்லாம் வேற லெவல். எங்க பள்ளிக்கூடத்தில் எங்களோடு படிக்கும் பொண்ணு மார்கழி திங்கள் அல்லவா என்று பாரதநாட்டியம் எல்லாம் கஷ்டப்பட்டு கற்றுக்கொண்டு பெர்ஃபார்மன்ஸ் பண்ணினாலும் நம்ம பசங்க நம்ம ஆடுங்கடா என்ன சுத்தி பாடலுக்கு விஜய் போலவே உள்ளே டிஷர்ட் அல்லது பனியன் போட்டுக்கொண்டு வெளியே பட்டன் போடாமல் சட்டை போட்டுக்கொண்டு ஸ்டேஜ்ல நடந்து வந்து டான்ஸ் ஆட ஆரம்பித்த செகண்ட் முதல் கடைசி செகண்ட் வரைக்கும் கைதட்டல்கள் விசில்கள் விழுந்துகொண்டே இருக்கும். அப்போது ரஜினி , கமல் , விஜய் , அஜித் என்று கமர்ஷியல் ஹீரோக்களுக்கு ரொம்ப ரொம்ப பெஸ்ட்டான கமர்ஷியல் படங்கள் இருந்ததால் ஸாங்க்ஸ் எல்லாமே சென்சார்க்கு கூட கட்டுப்படாத அளவுக்கு அவ்வளவு பயங்கரமான பாடல் வரிகளாக இருக்கும். ஐபோன் நீதான் சார்ஜர் நான்தான் என்று லூசுத்தனமான பாடல் வரிகள் எல்லாம் இப்போது இருக்கிறது. இந்த படத்துடைய பாட்டு எல்லாம் எப்போதுதான் தொலைக்காட்சியிலும் எஃப் எம் ரேடியோவிலும் போடுவார்கள் என்று காத்துக்கொண்டு இருந்து பாடலை ஒரு முறை கேட்டாவது மனப்பாடம் பண்ணிக்கொண்ட காலங்கள் எல்லாம் வேற லெவல். கில்லி படத்துக்கு பின்னால் படத்துடைய HYPE ஐ அப்படியே பயன்படுத்தி வெளிவந்த வருடத்தில் பாக்ஸ் ஆபீஸ்ஸை மின்னல் வெட்டியது போல வெட்டிய படம் இந்த படம். இந்த படத்துக்கு மணி ஷர்மா தெலுங்கு பாடல்களில் நிறைய பாடல்களின் ட்யூன்னை அப்போதே RETAIN பண்ணியிருப்பார் , அதுவுமே இந்த படத்தின் வெற்றிக்கான பிளஸ் பாயிண்ட்டாக அமைந்துவிட்டது. இந்த படத்தைப் பற்றி இன்னும் நிறைய பேசிக்கொண்டே இருக்கலாம். இன்னொரு போஸ்ட்டில் இந்த மாதிரி நிறைய கமர்ஷியல் படங்களின் அனுபவங்களை நான் பதிவு பண்ணுகிறேன். 

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...