Wednesday, November 8, 2023

CINEMA TALKS - THILLALANGADI - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!

 நான் பள்ளிக்கூடம் போகும்போது இந்த படம் சன் பிக்சர்ஸ் வெளியீட்டில் வெளிவந்ததால் ட்ரெய்லர் அடிக்கடி டிவியில் காட்டுவார்கள். இந்த படத்தின் முன்னோட்டங்கள் பார்க்கும்போதே இந்த படம் கண்டிப்பாக சூப்பர் ஹிட் என்றும் வழக்கமான சினிமா கதைகளை ரொம்ப புது கான்செப்ட் இந்த படத்தில் இருக்கிறது என்றும் அப்போதே எனக்கு தோன்றியது.  கடைசியில் சன் டி வி யில் இந்த படத்தை தீபாவளியில் பார்த்ததாக எனக்கு நினைவில் இருக்கிறது. ஒரே வாரத்தையில் இந்த படத்தை பற்றி சொல்ல வேண்டும் என்றால் வேற லெவல். செம்ம அட்வேன்சர்ரான ஒரு படம். ACP கிருஷ்ன குமார் அவருடைய நிச்சயதார்த்ததில் நிஷாவை சந்திக்கிறார். நிஷா காதலித்த பையனை பற்றி ஒரு பிளாஷ்பாக்கில் சொல்லும்போது கிருஷ்ணாவின் பிளாஷ்பாக் வருகிறது. பணக்கார பையனாக இருக்கும் கிருஷ்ணாவுக்கு வாழ்க்கையில் எப்போதுமே ஸ்வாரஸ்யம், விறுவிறுப்பு , அட்வென்சர் , சாகசமான செயல்கள் இருந்துகொண்டே இருக்க வேண்டும் அதுதான் அவருக்கு ரொம்பவுமே பிடிக்கும் இங்கே நிஷாவை காதலித்தாலும் அவரால் தொடர்ந்து ஒரு ஆபீஸ் வேலைக்கு போக  பிடிக்கவில்லை. வேலைக்கு சென்று சராசரி வாழ்க்கையை வாழ மறுத்ததால் ஒரு பக்கம் நிஷாவுடன் பிரேக் அப் ஆன கதை. இன்னொரு பக்கம் ACP கிருஷ்ண குமாருக்கு இன்னொரு பிளாஷ் பேக், கருப்பு பணத்தை கொள்ளை அடித்துக்கொண்டு யாரிடமும் சிக்காத ஒரு முகமூடி கொள்ளைக்காரன் நேரடியாக சேலஞ்ச் பண்ணினாலும் பிடிக்க முடியாமல் போகிறது.அந்த கொள்ளைக்காரன் யார் என்றால் அதுவுமே நம்ம கிருஷ்ணாதான். இங்கே நடுவில் வடிவேலுவின் ஒரு கியூட்டான ரொமான்டிக் காமெடி சென்றுக்கொண்டு இருக்கும். இந்த படமே ஒரு திருவிழா போல அவ்வளவு என்ஜாய்மெண்ட். கிளைமாக்ஸ்ல ஒரு நல்ல மெசேஜ் இந்த படத்தில் இருக்கும். வெளிவந்த நாட்களில் பாட்டு எல்லாமே ஹிட்தான். இந்த படம் தமிழ் சினிமாவுக்கு ரொம்ப புதிதாக இருந்தது அதே சமயத்தில் மெயின்ஸ்ட்ரீம் மீடியாவில் பாக்ஸ் ஆபீஸ்ஸை தெறிக்க விடும் அளவுக்கு அவ்வளவு என்ஜாய்மெண்ட் மற்றும் என்ட்டர்டேன்மெண்ட் வேல்யூ இந்த கமர்ஷியல் படத்தில் இருக்கும். இந்த படத்தில் உங்கள் அபிமான நட்சத்திரங்கள் என்று போடும் அளவுக்கு அவ்வளவு ஸ்ட்ராங்க்கான சப்போர்ட்டிங் ஆக்டர்ஸ் இருப்பதால் படம் ரொம்பவுமே ரசிக்கும்படியாக இருக்கிறது. 

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...