Monday, November 20, 2023

CINEMA TALKS - BLACKKKLANSMAN - TAMIL REVIEW - திரை விமர்சனம் !




இங்கே பிரிட்டன் ஆதிக்க காலத்தில் இருந்தே வெள்ளை மக்களுக்கு நிற வெறி ரொம்ப ரொம்ப அதிகமாக இருக்கிறது. இப்போது நிலைமை ஒரு அளவுக்கு நன்றாக இருந்தது என்றாலும் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தில் நிறவெறி மனிதர்களை எப்படி ரொம்ப மோசமான கசப்பான வெறுப்பாளர்களாக மாற்றும் என்று இந்த படத்தில் சொல்லி இருப்பார்கள். 1972 இல் காவல் துறையில் கஷ்டப்பட்டு சேரும் ரான் கறுப்பு இனம் என்பதால் ரெகார்ட்ஸ் அறையில் மட்டுமே வேலை கொடுத்து அனுமதிக்கப்படுகிறார். இப்போது அண்டர்கவர் ஆப்ரேஷனாக KKK என்ற இனவெறி வெள்ளையர் அமைப்பில் உள்ளவர்களை தொலைபேசி மூலமாக பேசி அவர்கள் அசம்பாவிதங்களை நிகழ்த்த முயற்சிப்பதை கண்டறிகிறார். அவர்களோடு நேரில் பேசமுடியாது என்பதால் பிலிப் டிரைவர் என்ற இன்னொரு ஆபிசர்ரை இந்த KKK அமைப்பில் இருப்பவர்களிடம் மெம்பர்ராக சேர அனுப்புகிறார். அடுத்தடுத்த சம்பவங்களில் இவரும் இவருடைய குழுவும் எப்படி உயிரை பணயம் வைத்து களம் இறங்கி நடக்கப்போகும் குண்டுவெடிப்பு சம்பவங்களை தடுக்கிறார்கள் என்று ஒரு ஸ்வரஸ்யமான படமாக ஒரு உண்மையான காவல் துறை அதிகாரியின் வாழ்க்கையில் நடந்த விஷயங்களை படமாக எடுத்து இருக்கிறார்கள். இந்த படம் நிறைய ஆஸ்கார் அவார்ட்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட காரணம் என்ன என்பது இந்த படத்தை பாருங்கள் உங்களுக்கு புரியும். ஒரு விறுவிறுப்பான இண்டரெஸ்ட்டிங் பயோகிராபி படம் கண்டிப்பாக மிஸ் பண்ணாமல் பாருங்கள் !

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...