புதன், 22 நவம்பர், 2023

CINEMA TALKS - SEVEN - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!


இந்த படம் உங்களை ரொம்பவே யோசிக்க வைத்துவிடும். படத்துடைய தொடக்கத்தில் ஒரு கொலை நடக்கிறது. எந்த ஒரு மோட்டிவ்வும் இல்லாமல் ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவன் பண்ணிய கொலை என்று பார்த்தாலே தெரிந்துவிடும். ஒரு சின்ன தடயம் கூட கிடைக்காத இந்த வழக்கில் மிக மிக அதிகமாக முயற்சி எடுத்து நிறைய விஷயங்களை வெளியே கொண்டு வந்து கொலைகாரனை நெருங்குகிறார்கள். இந்த இரண்டு பேர் யார் என்றால் வில்லியம் மற்றும் டேவிட். இங்கே வில்லியம் பணி நிறைவு அடையப்போகிறார். அவருக்கு பின்னால் பொறுப்பில் அமரப்போகும் ஆபீஸர்தான் இந்த டேவிட். இந்த கொலைகாரன் பைபிள் அடிப்படையில் சொல்லப்பட்ட 7 மன்னிக்க முடியாத பாவங்களான GLUTTONY , LUST , GREED , WRATH , SLOTH , GLORY , PRIDE என்ற பாவங்களை பண்ணுபவர்களை மட்டுமே வரிசையாக தீர்த்துக்கட்டிவிடுகிறான் என்று இன்வெஸ்டிகேஷன்னில் தெரிந்துக்கொண்ட பின்னால் இவனை பிடிப்பதில் உயிரை பணயம் வைத்து வேலை பார்க்கும் இந்த காவல்துறை அதிகாரிகளுக்கு அடுத்து என்ன நடக்கிறது என்று விறுவிறுப்பான திருப்பங்கள் நிறைந்த படமாக வெளிவந்த இந்த படம் 1995 ல் வெளிவந்து உள்ளது. இன்னைக்கும் கூட க்ரைம் படங்களின் பட்டியலில் குறிப்பிடத்தக்க மதிப்பு இந்த செவன் படத்துக்கு உள்ளது என்பதை மறுக்க முடியாது !

கருத்துகள் இல்லை:

♡ଘ(੭ˊᵕˋ)੭=❤︎ପ(๑•ᴗ•๑)ଓ

நம்ம வாழ்க்கை ஒரு அப்டேட் அடைய வேண்டும், இன்று போல எப்போதுமே எல்லாமே சிறப்பானதாக இருக்காது. வாழ்க்கையின் நாட்கள் கடந்து செல்ல கடந்து செல்ல உ...