இந்த பிரச்சனையை ஆட்சிகளிலும் பொறுப்புகளிலும் இருப்பவர்கள் கவனித்தே ஆக வேண்டும். இந்த வருடத்தில் எல்லாம் சூதாட்ட கும்பல்கள் , பண மோசடி கும்பல்கள், கழுத்தை நெறிக்கும் கடன்கார கும்பல்களை ஆட்சியில் இருப்பவர்கள் ரொம்பவே சப்போர்ட் பண்ணுகிறார்கள். இன்னொரு பக்கம் நல்ல திறமையான இளைஞர்கள் போது நிறுவனங்களிலும் தனியார் நிறுவனங்களிலும் அரசாங்க அமைப்புகளிலும் வேலைக்கு போனால் பெரிய சாதியில் பிறந்தவர்கள் வேலைக்கே சேர்ப்பது இல்லை. பெரும்பாலான இடங்களில் தலைமை முட்டாள்தனமாக இருக்கிறது. புத்திசாலித்தனமான முடிவுகளை ஒரு அறிவு நிறைந்த இளைஞர் கொடுத்தால் அந்த இளைஞர் உயர்வான வகையில் பிறக்காதவர் என்றும் அவர் சொல்லி நான் கேட்க மாட்டேன் என்றும் தூக்கி எறிந்துவிட்டு அவர் சொன்ன விஷயங்களுக்கு ஆப்போஸிட்டாக பண்ணி தோற்றுப்போவோம் என்று தெரிந்தும் தோற்றுப்போகிறார்கள், சக்தியை குறைத்துக்கொள்கிறார்கள். இது உங்களுக்கு தேவையா ? ஒரு விஷயம் நஷ்டத்தில் செல்கிறது என்றால் இலாபம் கொடுக்கும் முடிவுகளை எடுத்தால் அந்த முடிவுகளைத்தான் நீங்கள் மனதுக்குள் போட்டுக்கொள்ள வேண்டுமே தவிர முடிவு எடுத்தவனின் பிறப்பு என்ன ? தகுதி என்ன ? தராதரம் என்ன ? என்று எல்லாம் யோசிக்க கூடாது !! யாருக்கு வேண்டும் இந்த பாவ புண்ணியங்கள் , நீங்கள் பல தலைமுறைகளாக படிப்பறிவு இல்லாதவர்களாக இவர்கள் இருக்க வேண்டும் என்று சதிகளை பண்ணி இருக்கிறீர்கள். நீங்கள் கட்டிய கம்பி வேலிக்குள் ஆடுகளை போல இருக்க வேண்டும் என்று போதுமான மனித உரிமைகளை கொடுக்காமல் நடத்திக்கொண்டு இருந்தீர்கள் ஆனால் ஸ்மார்ட்ஃபோன்கள் வந்ததும் எல்லோருக்கும் எல்லா விஷயமும் புரிந்துவிட்டது. இனிமேல் உங்கள் மேல் பிறப்பு இருப்பவர்கள் மட்டுமே சிங்கங்கள் , மற்ற இடங்களில் பிறந்தவர்கள் புழு பூச்சிகள் என்று நசுக்க முடியாது. மக்களே , நீங்கள் இந்த பிரச்சனைகளை பாருங்களேன் , நான் பார்த்த மனிதர்களில் எல்லா மேல் பிறப்பு மனிதர்களுமே கெட்டவர்கள் இல்லை. பெரும்பாலான பெரிய குடும்பத்தில் பிறந்தவர்கள நல்ல மனது உள்ள தங்கமான மனிதர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்கு மரியாதை கொடுக்கலாம் ஆனால் அரசாங்கம் மற்றும் தனியார் துறைகளில் மேல் பிறப்பில் பிறந்தவர்கள் ரொம்ப ரொம்ப கவனமாக அடிமட்ட பிறப்பில் இருப்பவர்கள் மேலே வரவே கூடாது சம்பளம் பெறவே கூடாது என்றும் அவர்கள் குடும்பத்தில் யார் இருந்தாலும் அடுத்த தலைமுறையில் அவர்களுக்கு பிறக்கும் குழத்தைகள் கூட வறுமையில் மட்டுமே இருக்க வேண்டும் என்றும் நாசூக்கான வேலைகளை பார்க்கிறார்கள். இதனால் அதிகமான பேர்ஸன்டேஜ் இருந்தும் அவர்களுடைய தகுதிக்கு உண்டான வேலை உள்ளூரில் கிடைக்காமல் வெளியூரில் சென்று வேலை பார்க்கிறார்கள் , வெளிநாட்டில் சென்று வேலை பார்க்கிறார்கள், இது எல்லாம் என்னவென்று சொல்ல. இந்த மாதிரி விஷயம் எல்லாம் பாதிப்பை கொடுத்தவர்களுக்கு பெரிய விஷயமாக இருக்காதப்பா ? ஆனால் பாதிப்பு அடைந்து மனசு உடைந்து போனவர்களுக்கு வாழ்க்கையே கசப்பாக மாறிவிடுகிறது. அவர்களை ஜெயிக்கவே விடமாட்டார்கள் என்று மனது உடைந்து போகிறது ! இத்தனை வருடங்கள் போனாலும் சேர்ந்து ஒரே அன்பான குடும்பமாக வாழாமல் பிறப்பால் பிரிந்து இருக்க வேண்டும் என்று இருப்பது நன்றாக இல்லை. இப்போது அடிப்படை பிரச்சனைக்கு வருவோம். இந்த மாதிரி ஆப்ஸ் எல்லாம் ஃபோன்னில் இணைக்கப்பட்டு இருக்கும் வங்கிக்கணக்கில் ஒரு இணைப்பை உருவாக்கிக்கொண்டு பணத்தை இரத்தம் உறிஞ்சுவது போல உறிஞ்சுகிறது. கடன் கொடுக்கும் ஆப்ஸ்கள் ஒரு படி மேல் சென்று ஒரு வருடத்தில் 10 லட்சம் தொகை கடனாக பெற்றால் 120 சதவீதத்துக்கும் அதிகமாக வட்டிகளையும் அபாராதங்களையும் தலையில் கட்டிவிட்டு 22 லட்சம் கொடுக்க வேண்டும் என்று ரௌடிகளையும் கொலைக்காரர்களையும் வைத்து மிரட்டுகிறது. இன்னொரு பக்கம் வங்கியில் இருந்து பேரும் கடனிலும் ஆப்புகள் வைத்து அப்பாவி மக்களை கொத்தடிமைகளாக எழுதி வாங்க பார்க்கிறார்கள். இது எல்லாமே ரொம்ப தப்பான விஷயம், ஆட்சியில் இருப்பவர்கள் இரும்புக்கரம் கொண்டு இந்த பிரச்சனையை அடக்க வேண்டும்.
No comments:
Post a Comment