Saturday, November 4, 2023

GENERAL TALKS - ஒரு ரேண்டம் கட்டுரை !! - நிஜவாழ்க்கை விமர்சனம் !!

ஒரு நேரடியான மோதல். நம்ம வாழ்க்கையில் எத்தனை பேர் பிரச்சனைகளை கண்டு பயந்து ஓடி இருக்கிறோம். இன்னும் சொல்லப்போனால் இந்த அலைகளே ஓயாத பிரச்சனைகள் கடலின் அலைகளை எப்போதுதான் ஓயும் என்று பார்த்துக்கொண்டு இருக்கிறோம். கடல் என்று தெரிந்தும் மோதுவது எப்படி என்று ஒரு திட்டம் போட்டு இருக்கிறீர்களா ? இந்த மாதிரி திட்டங்களை உருவாக்குங்கள். ஒரு லெமன் ரைஸ் பண்ணவேண்டும் என்பது கான்செப்ட் என்றால் அந்த லெமன் ரைஸ் பண்ண சமையலில் என்னென்ன ஸ்டெப் எடுக்க வேண்டும் என்பதுதான் வொர்க் அவுட் ஆகக்கூடிய வேலை. 

இங்கே கடலில் துணிந்து குதிக்க வேண்டும். உங்களுக்கு தேவையான பொருட்கள் எல்லாம் அலைந்து தேடி எடுத்துக்கொண்டு பின்னால் தேவையான பொருட்களை எல்லாம் ஒரு பேக்கேஜ்ல்  சேகரித்துக்கொண்டு பேக்கேஜ் நிரம்பும் வரைக்கும் பார்க்க வேண்டும். 

இனிமேல் இன்னும் கொஞ்சம் நேரம் செலவு பண்ணி கடலில் இருந்து மேற்கொண்டு பொருட்கள் சேகரித்தாலும் அவைகளை பயன்படுத்த நேரம் இல்லாமல் இருப்பதால் அவைகளால் பிரயோஜனமே இல்லை என்ற நிலைமையில் உங்களால் உங்களுக்கு போதுமான அளவுக்கு எல்லா விஷயங்களுமே கிடைத்துவிட்டது என்ற மன நிறைவு வந்தால் மட்டும்தான் கடலில் அலைந்தது போதும் என்று முடிவு எடுக்கவேண்டும். கடலுக்கு நீங்கள் வந்த வேலையை முடித்துவிட்டதால் அடுத்த வேலையை பார்க்க வேண்டும். 

அதை விட்டுவிட்டு வாழ்நாள் மொத்தமும் கடலில் அலைந்துகொண்டு போராடினால் உங்களால் வேறு என்னதான் பண்ண முடியும் ? ஒரு மோதல் உங்களுக்கு வெற்றியை தரும் என்றாலும் உங்களோடு மோதும் மனிதருக்கு தோல்வியை தரும் என்றால் மட்டும்தான் மோத வேண்டும். நீங்கள் தோல்வி அடையப்போகிறீர்கள் என்றால் அந்த இடத்தில் இருக்க வேண்டாம். காரணம் என்னவென்றால் நீங்கள் தோல்வி அடைந்தால் உங்கள் தோல்விக்கு சந்தோஷப்பட்ட ஆயிரம் பேர் அங்கே இருப்பார்கள். 

ஒரு நாள் ஒரே ஒரு முடிவு எடுக்க பயன்படுவதுதான் மோட்டிவேஷன். ஆனால் உங்கள் வாழ்க்கையில் தினம் தினம் நேரமாக எழுந்து வேலைக்கு போவதில் இருந்து உடல் பயிற்சி , தரமான உணவு , நல்ல கம்யூனிக்கேஷன் என்று வாழ்க்கையில் தினம் தினம் நிறைய விஷயங்களுக்கு முடிவு எடுக்க வேண்டும் என்றால் அவைகளுக்கு எஃபர்ட்தான் வேண்டும். ஒரு நாளுக்கு ஒரே ஒரு முடிவுக்கு பயன்படும் மோட்டிவேஷன் ஒரு 1 டைம் யூஸ்ஸேஜ் பயன்பாடு , ஆனால் நீங்கள் தினம் தினம் பண்ணும் வேலைகள்தான் உங்களுக்கு டெய்லி யூஸ்ஸேஜ் பயன்பாடாக இருக்கும். ஒரு முறை தவறு செய்யலாம் , இரண்டு முறை தவறு செய்யலாம் ஆனால் ஒவ்வொரு முறையும் தவறை மட்டுமே செய்துகொண்டு இருக்க கூடாது அது அடிப்படையில் பிரயோஜனம் இல்லாதது.  நீங்கள் நல்ல விஷயங்களில் கஷ்டப்பட்டு சேகரிக்கும் பொருட்கள் கெட்ட விஷயங்களில் காணாமல் கரைந்து போய்விடும். 

நிஜம் என்ன ? நீங்க ஆசைப்பட்டது என்ன ? உண்மையில் உங்கள் மனசு ஆசைப்படுவது என்ன ? கடைசி வரைக்கும் அடையாமலே போய்விடலாமா ? இறந்துவிடலாமா ? உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் இந்த கேள்வியை கேட்க வேண்டும் ! உங்களுடைய வாழ்க்கையில நீங்கள் ஆசைப்படுவதை அடைய விடாமல் தடுப்பது எது ? இந்த வாழ்க்கையில் நீங்கள் ஆசைப்பட்ட விஷயத்தை அடைந்தே ஆக வேண்டும் ! அதுக்காக நீங்கள் எந்த எல்லைக்கு வேண்டுமென்றாலும் செல்லலாம். ஆசைப்பட்ட விஷயத்தை அடையாமல் சாவது போல கேவலமான விஷயம் எதுவுமே இல்லை.



No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...