Saturday, November 4, 2023

CINEMA TALKS - DETECTIVE CONAN - THE CULPRIT HANZAWA - TAMIL REVIEW - திரை விமர்சனம் !



DETECTIVE CONAN - THE CULPRIT OF HANZAWA  - அனிமேஷன் தொடரை தொடர்ந்து பார்ப்பவர்களுக்கு இந்த அனிமேஷன் தொடர் கண்டிப்பாக பெரிய சர்ப்ரைஸ்தான். தினம் தினம் கொலைகளுக்கும் கொள்ளைகளுக்குமே பஞ்சமே இல்லாத பேக்கர் டவுன். இங்கே கண்டிப்பாக தன்னுடைய எதிரியை காலி பண்ணியே ஆகியவேண்டும் இன்று களத்தில் இறங்குகிறார் HANZAWA . யார் அந்த எதிரி ? எதுக்காக அவரை காலி பண்ண நம்ம ஆளு இவ்வளவு கஷ்டப்படறான் என்பதெல்லாம் பெரிய கிளைமாக்ஸ் ஸஸ்பென்ஸ்ஸில் போட்டுவிட்டு டார்க் காமெடியில் கலகலப்பாக ஷோவை கொண்டு போவதில் மட்டுமே ஃபோகஸ் பண்ணியுள்ளதால் செம்ம எண்டர்டெயின்மெண்ட். இந்த வெப்ஸிரிஸ் நேரடியான டோன் டிஃபரன்ஸ் இருக்கும் ஒரு வெப் சீரிஸ, HANZAWA யாரு. அவனுடைய உருவம் எப்படி இருக்கும் என்பதை எல்லாம் மொத்தமாக பிளாக் ஷேடோ போல டிசைன் பண்ணி மறைத்துவிட்டார்கள். இவர் சீரியஸ்ஸ்ஸாகத்தான் விஷயங்களை பண்ண முயற்சி பண்ணுவாரு. இருந்தாலும் சுற்றி இருக்கும் விஷயங்கள் எல்லாம் அனைத்தையும் காமெடியாக மாற்றிவிடும். 12 சின்ன சின்ன எபிசோட்களாக பிரிக்கப்பட்டு கிளைமாக்ஸ்ஸில் அடுத்த சீசன்க்கு கண்டிப்பாக தேவைப்படும் அளவுக்கு ஒரு OPEN கிளைமாக்ஸ்ஸில் முடித்து இருக்கிறார்கள். HANZAWA எதுக்காக இத்தனை விஷயங்களை பண்ண நினைக்கிறார் என்பதை கிளைமாக்ஸ் வரைக்குமே சொல்லவே இல்லை. அடுத்த சீசன்னில் இருந்து சொல்வார்கள் என்று நம்புகிறேன். நெக்ஸ்ட் சீசன் வருமா ? நெட்ஃப்லிக்ஸ்க்குதான் தெரியும் !! மெயின்ஸ்ட்ரீம்மாக CASE CLOSED நெடுந்தொடர் மற்றும் படங்கள் பார்த்துக்கொண்டு இருப்பவர்களுக்கு இந்த வெப்சீரிஸ் ஒரு தரமான காமெடி எண்டர்டெயின்மெண்ட். 

No comments:

Post a Comment

CINEMA TALKS - MISSION IMPOSSIBLE GHOST PROTOCOL - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

சொந்த நாட்டின் பாதுகாப்புக்காக வெளிநாட்டில் தங்களுடைய உயிரை பணயம் வைத்து மிஷன்னை முடிக்க வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள் கதாநாயகன் ஈதன் மற...