Saturday, November 4, 2023

CINEMA TALKS - TT : GO TO THE MOVIES - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

 


கிடைக்கும் ஒரு ஒரு சின்ன சின்ன கேப்லயும் DC படங்களை ரசித்து ரசித்து கலாய்த்து எடுத்து இருக்கிறார்கள் ! "அவனுங்க சேலஞ்சர்ஸ் ஆஃப் தி அன்னோன் , அவனுங்களுக்கு எல்லாம் பர்மிஷன் இருக்கும் , ஆனா நாங்க டீன் டைட்டன்ஸ்ப்பா ? எங்களுக்கே இடம் இல்லையா" என்று பேட்மேன் படம் பரீமியர் ஷோ பார்த்தே ஆகவேண்டும் என்று ஒரு காட்சியில் தியேட்டர் வாசலில் சண்டைபோட்டுக்கொண்டு இருக்கிறார்கள் ராபின் மற்றும் அவருடைய டைட்டன்ஸ் மெம்பர்ஸ். டி. ஸி. தன்னைதானே நன்றாக கலாய்த்துவிட்டது இந்த அனிமேஷன் இன்ஸ்டால்மெண்ட் படத்தில் எண்டர்டெயின்மெண்ட் வேற லெவல்லில் இருக்கும். முன்னதாக TEEN TITANS GO என்ற கார்ட்டூன் நெட்வொர்க் ஷோ பார்த்தவர்களுக்கு இந்த படம் இண்டரெஸ்ட்டிங் சாய்ஸ்ஸ்ஸாக இருக்கலாம் ஆனால் போதுமான ஐடியா இல்லாமல் இந்த படம் பார்த்தால் ஒரு அளவுக்குதான் நம்மால் கனெக்ட் பண்ணிக்கொள்ள முடியும். ஒரு பக்கம் சூப்பர் வில்லன் ஸ்லேட் வில்ஸனை கஷ்டப்பட்டு பிடிக்கிறார்கள். காரணம் என்னவென்றால் நம்ம டைட்டன்ஸ்ஸின் தலைவனாக இருக்கும் ராபின்க்கு சொந்தமாக ஒரு சூப்பர் ஹீரோ படம் வேண்டும் என்பதால்தான். ஆனால் ஸ்லேட் வில்ஸன் இவர்களுக்கும் மேலே ஒரு பிளான் போட்டு ஜஸ்டிஸ் லீக் உட்பட மொத்த சூப்பர் ஹீரோக்களையும் தூக்குகிறான். இப்போது நம்ம டைட்டன்ஸ் மட்டும்தான் சூப்பர் வில்லன் ஸ்லேட் வில்ஸனை தடுக்க வேண்டும் என்ற கட்டாயம் வரும்போது எப்படி கிளைமாக்ஸ்ஸில் வெற்றி அடைகிறார்கள் என்பதுதான் கிளைமாக்ஸ். இந்த படத்தில் கணக்கு இல்லாமல் காமெடி இருக்கிறது. செல்ஃப் ஆவார் ஹியூமர் இந்த படத்தில் நன்றாக வொர்க் அவுட் ஆகியுள்ளது. இந்த ஷோ மற்றும் பென் டென் புது எடிஷன் இந்த இரண்டு ஷோவையும் எப்போதுதான் குளோஸ் பண்ணுவார்கள் என்று கார்ட்டூன் நெட்வொர்க் ரசிகர்கள் பல வருடங்களாக எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் ஆனால் அடுத்த ஜெனரேஷன்க்காக கார்ட்டூன் நெட்வொர்க் எடுத்த டிசிஷன் இதுதான் போல. மொத்ததில் இந்த படம் ஒரு படாமாக பார்த்தால் கண்டிப்பாக நன்றாக இருக்கிறது. டிஸி ஃபேன்ஸ்க்கு ரொம்ப நல்ல என்டர்டேய்ன்மெண்ட்.

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...