Monday, November 27, 2023

GENERAL TALKS - மரணத்தை கண்டு பயம் ! - காரணம் என்ன ?

ஒரு மனுஷன் எதுக்காக மரணத்தை பார்த்து பயப்படுகிறான். பொதுவாக நான் இந்த கருத்தை பற்றி நிறைய நாட்கள் ரொம்ப ஆழமாக யோசித்து இருக்கிறேன். இது ஒண்ணும் பெரிய அறிவியல் நிறைந்த சிக்கலான இன்ஜினியரிங் கான்செப்ட் இல்லையே. நம்ம உடல் நல்ல நிலையில் இருக்கும்போது எல்லாம் வாழ்க்கை நன்றாக இருக்கிறது. ஆனால் வயது ஆக ஆக உடலுடைய உள்ளுறுப்பு செயல்பாடுகள் குறைந்து போவதால் உடல் என்ற இயந்திரம் நிரந்தரமான பழுதுகளுக்கு உட்படுகிறது அதனால் கடைசியில் மரணம் ! இப்போ உங்களுக்கு ஒரு கேக் கொடுக்கிறோம் என்றால் அதனை சாப்பிடும் முன்னாலே மறுபடியும் பிடுங்கிக்கொண்டு உங்களுக்கு இந்த கேக் இல்லை என்று சொன்னால் எப்படி இருக்கும் ? அதேதான் நம்ம வாழ்க்கையும் மனிதனுடைய உடம்புக்கு பண்ணுகிறது. மனிதன் அவனுடைய வாழ்க்கையில் நிறைய வசதி வாய்ப்புகளையும் நிறைய சந்தோஷங்களையும் எதிரபார்க்கிறான். ஒரு சில அதிர்ஷ்டம் உள்ள மக்களுக்கு போன தலைமுறை சொத்துக்கள் இருப்பதால் அவர்கள் எதிர்பார்த்த சந்தோஷம் மற்றும் வசதி வாய்ப்புகள் கிடைப்பதால் உணவு , உடை , இருப்பிடம் , பாதுகாப்பு என்ற நான்கு அடிப்படை தேவைகளை பூர்த்தி பண்ணிவிட்டு சந்தோஷமான ஒரு மன நிறைவு உள்ள வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு போகிறார்கள். இன்னொரு பக்கம் காசு இல்லாமல் மற்றவர்களை பார்த்து எனக்கும் அவர்களை போலவே வேண்டும் என்று ஆசைப்படுபவர்களுக்கு எப்போதுமே பணம் கிடைத்து விடுவது இல்லை. அவர்களுடைய ஆசை சொந்தமாக காமிரா வாங்க வேண்டும் என்ற அளவுக்கு இருந்தாலும் அவர்களால் அவர்களுடைய சக்திக்கு வெறும் போட்டோ ஸ்டுடியோவின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோதான் எடுக்க முடியும். இப்படிப்பட்ட ஆட்களுக்கு (என்னையும் சேர்த்துதான்) நிறைய ஆசைகளை கடவுள் நிறைவேற்ற மறுத்ததால் மரணம் என்ற முடிவை ஏற்றுக்கொள்ள தயாராக முடியாது. ஒரு சூப்பர் கதை உள்ள சினிமா படம் - ஒரு மொக்கை கதை உள்ள சினிமா படம். இந்த இரண்டு படங்களில் உங்களுக்கு பிடித்த படம் எது ? ஒரு படம் என்று வந்தால் கூட சிறப்பான சம்பவங்கள் நடந்த வாழ்க்கையை மட்டும்தான் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறோம் , சாதாரணமான சலிப்பு மட்டுமே கொண்ட மொக்கையான சம்பவங்களை கதையில் கூட நாம் பார்க்க தயாராக இல்லை. இப்படி வாழ்க்கை மொத்தத்தையும் வெறுமனே சலிப்பான விஷயங்களை மட்டுமே கொடுத்து இருப்பதால் தீராத ஆசைகளுடன் இறந்து போகும் இவர்களின் ஆன்மா ஆசைகள் நிறைவேறாத ப்ரேதாத்மாவாக மாறிவிட்டு.. (டேய்  டேய் எங்கடா போற ?) , மன்னிக்கவும் நான் கான்செப்ட் மாறிவிட்டேன். மரணத்தை பார்த்தால் ஒரே பயம் , நடுக்கம் வருவது , இது ஒரு நியாயமற்ற செயல் என்று தோன்றுவது வாழ்க்கையில் கஷ்டங்களை சந்தித்தவர்களுக்கு மட்டும்தான் புரியும். கடவுள் எதனால் ஒரு சிலருக்கு நிலம் போல செழிப்பான வாழ்க்கையின் சந்தோஷத்தையும் , இன்னொரு பக்கம் மற்ற அனைவருக்கும் கடல் போன்ற உப்பான வாழ்க்கையின் ஆதரவையும் கொடுக்கிறார் என்று எனக்கு இன்னமும் தெரியவில்லை. ஒரு மனிதனுக்கு கடைசி நாட்கள் எண்ணப்படுகிறது என்றால் அப்போது  இந்த உலகமே மிகவும் வித்தியாசமாக இருக்கும், வாழ்நாளை முடிவுக்கு கொண்டுவரும் நோய்க்காக சிகிச்சை எடுத்துக்கொள்ள பணம் கேட்டு அலையும்போதுதான் இந்த உலகத்தில் எல்லோருமே நல்லவர்கள் இல்லை என்ற உண்மை நன்றாக புரிகிறது, அவனுடைய மனதுக்குள் இனிமேல் என்ன நடந்தால் எனக்கு என்ன என்று வாழ்க்கையில் ஒரு வெறுமை, அந்த வெறுமை கொடுக்கும் அமைதியும் நிம்மதியும் ஒரு புதிய ரகமானது. கடைசி நாட்களில் மட்டுமே இந்த உலகத்தின் காட்சிகளுடனும் மனிதர்களின் பேசும் வார்த்தைகளுடனும் ஒரு புதிய விதமான மொழி அவனுக்கு புரிகிறது, அதுதான் கடைசி நாட்களின் மொழி. இந்த நாட்கள் கொஞ்சம் கடினமானதுதான் ஆனால் கடந்து வந்துதான் ஆக வேண்டும், அகிலன் பயமெல்லாம் எதுவுமே இல்லை என்று சந்தோஷமாகவே இருக்கிறான், அவனுடைய உடல்நிலை சரியாகும் என்று பூரண மனநிலையில் இருக்கிறான், அவனுக்கு ஒரு சிறிய அளவில் லோக்கல் பேக்கரியில் கிடைக்கும் சுவையான கேக் கூட கொஞ்சம் கொஞ்சமாக ரசித்து உண்ணவேண்டும் என்று தோன்றுகிறது, இன்னமும் கார் ஓட்ட கற்றுக்கொள்ளவில்லை ஆனால் பைக்கில் செல்லும்போது செல்லும் இடங்களை எல்லாம் முடிந்த வரையில் நினைவில் வைத்துக்கொள்ள முயற்சிக்கிறான், அவன் இப்போது எல்லாம் எந்த ஒரு இடத்துக்கு சென்றாலும் மறுபடியும் இன்னோரு முறை வருவதற்கு வாழ்நாள் இருக்குமா என்று யோசிக்க தோணுகிறது, பொதுவாக ஏழையாக இருப்பவர்களுக்காக சிகிச்சை பணத்துக்கு கடன்கள் கொடுப்பவர்களை அவர்களுக்குமே தெரியும் ஆனால் அவர்கள் அவ்வளவு பாதுகாப்பான மனிதர்கள் இல்லை, இது ஒரு தொல்லையான விஷயம், பணம் என்று வரும்போது நிறைய பேர் காசு இல்லை என்று சொல்லும்போது ஒரு தர்மசங்கடமான நிலை அங்கே உருவாகிறது, என்னவோ தெரியவில்லை கடைசி நாட்களில் கொஞ்சம் தனிமையை எதிரபார்க்கிறான், இப்படித்தான் ஒரு சில விஷயங்களில் மரணம் ரொம்பவுமே மேலானது என்று முடிவு எடுக்கிறான். வாழ்க்கை என்ற இண்டரெஸ்ட்டிங்கான கதை கொஞ்சம் நாட்களில் ஒரு சலித்துப்போன நரகவேதனையாக மாறுகிறது. இந்த மரண பயம் அதிகமாக இருக்க காரணம் நம்ம மக்கள்தான். 





No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...