பீட்டர் மற்றும் எல்லி அமெரிக்காவில் வாழ்ந்துகொண்டு இருக்கும் நடுத்தர வயதுள்ள கணவன் மனைவி - இவர்களுக்குள் மோதல் எதுவுமே இல்லாமல் குடும்ப வாழ்க்கை நன்றாக சென்றாலும் நிறைய வருடங்களாக குழந்தைகள் இல்லை. இதனால் ஆதரவற்ற இல்லத்தில் இருந்து ஒரு குழந்தையை தத்து எடுக்க செல்கிறார்கள். ஆதரவற்றொர் இல்லத்தில் தேடலுக்கு பின்னால் லிஸ்ஸி என்ற குட்டி பெண்ணையும் அவளின் இளைய சகோதரன் ஜுவான் மற்றும் குட்டி சகோதரி லீட்டா என்று 3 பேரையும் மகன் / மகள்களாக தத்து எடுத்துக்கொண்டு வளர்க்கிறார்கள் ஆரம்பத்தில் இவர்களை வெறுக்கும் லிஸ்ஸி பின்னாட்களில் இவர்கள் ஒரு அப்பா அம்மாவாக பொறுப்பு நிறைந்த வளர்ப்பாளர்களாக இருப்பதை புரிந்துகொண்டு சப்போர்ட் பண்ணுகிறாள். இருந்தாலும் அவளுடைய வாழ்க்கையை இவர்களுக்கு நம்பி கொடுக்கும் அளவுக்கு நம்பிக்கை வரவே இல்லை. அப்பாவாகவும் அம்மாவாகவும் இந்த ஈழம் தம்பதியினர் குழந்தைகளின் நம்பிக்கையை பெறுவார்களா ? தற்காலிகமாக அமைந்த இந்த பெற்றோர் மற்றும் குழந்தைகளின் குடும்பம் நிரந்தரமாக சேர்ந்துவிடுமா என்று ஒரு அமெரிக்கன் ஃபேமிலி டிராமாவாக இந்த படம் மனதை கவருகிறது. மார்க் மற்றும் ரோஸ் ஒரு நடுத்தர பெற்றோராக ரொம்பவுமே பிரமாதமான நடிப்பை கொடுத்து இருக்கிறார்கள். ஜூனியர்ஸ்களின் நடிப்புமே நன்றாகவே இருந்தது, ஒரு சில அமெரிக்க கலாச்சார குறைகள் இருப்பதை தவிர்த்து இன்டெர்னேஷனல் ஆடியன்ஸ்க்கு ஒரு மேச்சுரிட்டியான ஃபேமிலி படம் பார்க்க வேண்டும் என்றால் இந்த இன்ஸ்டண்ட் ஃபேமிலி ரொம்ப பெஸ்ட்டாக இருக்கும் படம். குழந்தைகளை விட குழந்தைகளை பெற்றவர்கள் பார்க்க வேண்டிய ஒரு படம்.
நிறைய சினிமா மற்றும் பொழுதுபோக்கு விஷயங்கள் நிறைந்த கருத்துப்பகிர்வு தமிழ் வலைத்தளம் ! - TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW #TAMILBLOG #TAMILWEBSITE #TAMILMOTIVATION #TAMILPOSTS #TAMILSTORIES #வலைப்பூ #தமிழ்வலை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கதைகள் பேசலாம் வாங்க - 10
ஆங்கில பாடகர் அகான் 2000-களின் நடுப்பகுதியில் ரிங்டோன் விற்பனையில் மிகவும் வெற்றி கண்டார் இந்த விற்பனையில் ஒரு சின்ன நுணுக்கத்தை கவனித்தத...
-
இங்கே நிறைய பேருடைய மோசமான வாழ்க்கைக்கு அவர்களுடைய இயலாமை மட்டும் தான் காரணம். உடலும் மனதும் அவர்களுக்கெல்லாம் சரியாகத்தான் இருக்கிறது ஆனால்...
-
ஒரு கிராமத்தில் குடிநீருக்காக ஒரே ஒரு கிணறு இருந்தது. ஒரு நாள் நாய் ஒன்று கிணற்றில் விழுந்து இறந்தது. தண்ணீர் அசுத்தமாகவும், குடிக்க முடியாத...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக