ஒரு படத்துடைய முதல் காட்சி நன்றாக இருக்கிறதே என்று படத்தை பார்க்க ஆரம்பித்துவிடுவோம் ஆனால் படம் நாம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை எனும்போது ரொம்பவுமே டிஸப்பாய்ன்ட்மெண்ட்டாக இருக்கும். அந்த வகையில் ஒரு சில படங்களை இப்போது பார்க்கலாம்.
இந்த படத்தின் பெயர் YEAR 2067 - இந்த படத்தின் பெயரை கண்டுபிடிக்கவே கூகிள்லில் இருக்கும் எல்லா வருடங்களையும் போட்டு சர்ச் பட்டன் கொடுக்க வேண்டிய நிலை வந்துவிட்டது. பின்னால் படத்தின் ஹீரோ பெயரை போட்டு படத்தின் ஹிஸ்டரி எடுத்து நான் இந்த கருத்தை பதிவு பண்ணுகிறேன். ஒரு சில படங்கள் எழுதும்போது ரொம்ப சாலிட்டாக இருக்கும் ஆனால் படமாக பார்த்தால் ரொம்பவுமே குழப்பமாக இருக்கும். அப்படிப்பட்ட படம்தான் இந்த YEAR 2067! கோடி ஸ்மித் மேக்பி இந்த படத்தில் ரொம்பவுமே பிரமாதமாக நடித்து கொடுத்து இருப்பார். இந்த படம் நினைவில் நிற்கும் அளவுக்கு படம் இல்லை காரணம் என்னவென்றால் கதை அவ்வளவு குழப்பமாக இருக்கும் ஆனால் ஒரு முறை பார்க்க வேண்டிய படம்.
இந்த படத்துடைய பெயர் SECRETLY , GREATLY , ஒரு சில படங்கள் பார்க்க ரொம்ப இண்டரெஸ்ட்டாக இருக்கும் ஆனால் கிளைமாக்ஸ் வரும்போது மனதுக்கு ரொம்ப பாரமாக முடித்து இருப்பார்கள் , தன்னுடைய நாட்டுக்காக எதிரி நாட்டில் உளவு பார்க்கப்போன அதிகாரிகளுக்கு சொந்த நாடே தற்கொலை பண்ணிக்கொள்ளுங்கள் என்று மெசேஜ் அனுப்பிவிடுகிறது. இங்கே நம்ம ஹீரோ எந்த ஆர்டருமே கிடைக்காமல் மனநலம் பாதிக்கப்பட்ட அப்பாவி முட்டாள் போல நடித்து ஊர் மக்களுக்கு சந்தேகமே வராமல் இருந்து இருப்பார். இன்னொரு நண்பர் பள்ளி மாணவராக , கடை உரிமையாளராக என்று வேறு வேறு வேஷத்தில் இருக்கிறார்கள் , ஆனால் மெசேஜ் கிடைத்ததும் உயிரை விட வேண்டும் என்பது எவ்வளவு கஷ்டமான காரியம் என்று யோசித்து பாருங்களேன் ! இந்த படத்தை கண்டிப்பாக ஒரு முறை பாருங்கள் நன்றாக இருக்கும்.
No comments:
Post a Comment