"டார்க் பேட்டர்ன்னின்க் அப்படிங்கற வார்த்தையை கேள்விப்பட்டு இருக்கீங்களா ? நான் இங்கே சொல்ல வரக்கூடிய விஷயத்தை புரிஞ்சுக்கவே ரொம்ப கஷ்டமாக இருக்கும் அதனால் நான் இன்னொரு ஸ்டைல்ல சொல்லறேன் ! - ஒரு கதாநாயகன் - வாழ்க்கை என்ற வீடியோகேம்ல ஹீரோ விளையாடிக்கொண்டு இருக்கிறார். இப்போ செட்டிங்ஸ்ல ஈஸி என்ற நிலையை கஷ்டம் என்று மாற்றினால் அந்த கதாநாயகன் வெற்றி அடைவது ரொம்ப ரொம்ப கஷ்டமாக மாறிவிடும் அதேதான் நிஜமான வாழ்க்கையிலும் நடக்குது. எளிமையான விஷயங்களை கடினமாக மாற்றி நம்ம கதாநாயகன் எந்த ஒரு சாதனையும் செய்ய முடியாத மாதிரி அவனை ஒரு சூழ்நிலையின் கட்டுப்படுத்தப்பட்ட துகள்ளாக மாற்றிவிடுவார்கள். ஒரு விஷயத்தை தெரிந்தவர்கள் மட்டும்தான் அவர்களுக்கு சப்போர்ட் பண்ணுவார்கள். அப்படி ஒரு விஷயத்தை தெரியாதவர்கள் - அல்லது - ஒரு குழந்தைக்கு சொல்லி கொடுப்பது போல சொல்லி கொடுத்தாலுமே எனக்கு நீ கீழானவன் என்றும் எனக்கு உன்னையும் உன்னுடைய விஷயங்களும் பிடிக்காது என்றும் வேண்டுமென்றே தெரிந்துகொள்ளாமல் சொல்லிக்கொடுப்பதை கேட்காமல் காதுகளை பொத்திக்கொள்பவர்களை நான் என்னவென்று சொல்ல முடியும் ! இவங்களுக்கு பிரச்சனை என்னவென்றால் இவங்க ஒரு இடத்தை விட்டு நகரவே மாட்டார்கள். தனக்கு தெரிந்த விஷயங்களில் தான் சிறந்தவர்கள் என்று கிரீடம் போட்டுக்கொண்டு தனக்கு சப்போர்ட் பண்ணியவர்கள் எல்லோருமே அவரை காப்பாற்ற ஒரு தடுப்பு சுவராக எதிரிகளின் முன்னால் நின்றுகொண்டு இருக்கும்போது இவர்களே ஒரு பெரிய கடப்பாரையாக எடுத்து காப்பாற்றுபவர்களின் முதுகில் குத்தி அவர்களை காயப்படுத்தி உடைத்துவிடுவார்கள். இவர்களை போன்ற ஆட்கள்தான் டார்க் பேட்டர்ன்களுக்கு சப்போர்ட் பண்ணுபவர்கள். இவர்களை பொறுத்தவரை அறிவு என்ற ஒரு சூரியனை டார்க் பேட்டர்ன் பண்ணி மறையவைக்க வேண்டும் அப்போதுதான் இவர்கள் மற்றவர்களின் அறியாமை என்ற இருள் உலகத்தில் ராஜாவாக வாழ முடியும் ! அப்படியென்றால் இந்த உலகத்தில் எப்படித்தான் ஜெயிக்க முடியும் ? முக்கியமான விஷயம் இந்த உலகத்தில் நிறைய பொருட்களை சேர்த்துக்கொள்ளுங்கள். இங்கே பொருட்கள் மட்டும்தான் உங்களை காப்பாற்றும். நல்ல மனிதர்களை சம்பாதிப்பது ரொம்ப கடினமானது. இன்னும் சொல்லப்போனால் ரொம்பவுமே முடியாத விஷயமும் அதுதான். இந்த உலகத்தில் என்னுடைய லட்சியம் ஒரு தனியார் டெக்னாலஜி நிறுவனத்தை அமைப்பதுதான். இந்த போஸ்ட் பண்ணும் இந்த நொடியில் நான் பூச்சியம். காரணம் என்னவென்றால் பசித்தால் உணவை சாப்பிடாமல் உணவை சாப்பிட பயன்படுத்தும் கைகளை சாப்பிடும் அளவுக்கு முட்டாள்தனமான ஆட்களின் எனக்கு எதிராக செய்யும் செயல்கள்தான். ஒரு மில்லி மீட்டர் கூட என்னை முன்னேற்றத்தின் பாதையில் நகர விடமாட்டேன் என்கிறார்கள். இருந்தாலும் இந்த டார்க் பேட்டர்ன்னின்க் விஷயத்தில் இருந்து வெளியே வருவதற்கு நாம் பண்ணவேண்டிய செயல் அரசியல்தான்.
இங்கே நாம் செய்யக்கூடிய வேலையில் ஒரு புரஃபஷனல் அப்ரோச் இருக்க வேண்டும். இந்த வாழ்க்கையே மிகப்பெரிய ஒரு வியபரம்தான். BUYING மற்றும் SELLING என்பது அவ்வளவு எளிமையான விஷயம் அல்ல. நீங்க BUY பண்ணக்கூடிய ஒவ்வொரு பொருளையும் அதனுடைய வேல்யூவுக்கு மேலே விற்பனை பண்ணினால்தான் உங்களால் PROFIT பார்க்க முடியும். ஒரு சில படங்களில் வருவது போல கிளைமாக்ஸ் வரைக்கும் சென்றுவிட்டு வாழ்நாள் முழுக்க TRAINING எடுததுக்கொண்ட வில்லனை ஒரு நாளில் தோற்கடித்துவிட்டு "நான் ஒண்ணும் புரஃபஷனல் ரன்னர் இல்லைங்க !! . நான் ஒண்ணும் புரஃபஷனல் பாக்ஸர் இல்லைங்க !!" என்று கிளைமாக்ஸ்ல சொல்வது எல்லாமே இந்த மாதிரி உண்மையான வாழ்க்கையில் நடக்காது. நீங்கள் "முகவரி" என்ற படத்தை பார்த்து இருக்கலாம். இந்த படத்தில் ஹீரோ கிளைமாக்ஸ் வரைக்கும் சினிமா மியூசிக் இண்டஸ்ட்ரியில் மிகப்பெரிய இசையமைப்பாளர் ஆகவேண்டும் என்று கஷ்டப்படுவார். ஒவ்வொரு முறையும் அவருக்கான சான்ஸ் அவருக்கு கிடைக்காமல் போகும்போது ரொம்பவுமே வருத்தப்படுவார். இந்த படம் பார்த்தவர்களுக்கு நான் ஒரு விஷயம் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். நீங்கள் முகவரி படம் போல நிஜத்தில் இசையமைப்பாளர் ஆகவேண்டும் என்று போராடினால் நீங்கல் இதுபோல 1000x மடங்கு கஷ்டப்பட வேண்டியது இருக்கும் . இங்கே ஒரு விஷயத்தில் தொழில் முறையாக பண்ணுவது என்பது அவ்வளவு முக்கியமானதா ? என்று ஒரு மட்டமான நீங்கள் கேட்கலாம் , இந்த கேள்விக்கு பதில் என்னவென்றால் "யெஸ்.. ரொம்ப ரொம்ப கடினம் !" - இங்கே அதிகாரத்தில் இருக்கும் சிஸ்டம் எல்லாம் பெரிய கம்பெனிகளை நஷ்டத்தில் இருந்து காப்பாற்றிவிடுகிறது. இது என்னப்பா ? கம்பெனியை காப்பாற்றுவது நல்ல விஷயம்தானே என்று கேட்கலாம் ! ஆனால் பெட்ரோல் , சாப்பாடு , அத்தியாவசிய பொருட்கள் என்று எல்லாவற்றிலும் பேலன்ஸ் பண்ண வேண்டும் என்ற காரணத்தால் இவர்கள் பண்ணும் வேலைகளால் அவைகளின் விலை தாறுமாறாக ஏறிவிடும். ஆனால் நம்முடைய வருமானம் தாறுமாறாக குறைந்துவிடும். இதனால்தான் ஒரு விஷயத்தை பண்ணினாலும் மிகவும் கவனமாகவும் மிகவும் அறிவுப்பூர்வமாகவும் பண்ணுவது ரொம்பவே முக்கியமானது. பெரிய கம்பெனிகள் கூட உங்களை ஏமாற்றிதான் சம்பாதிப்பார்கள். காரணம் என்னவென்றால் அவர்களுக்கு உங்களுடைய பணம் தொடர்ந்தது கிடைக்க கிடைக்க அவர்களின் பலம் அதிகமாக மாறும் , உங்களுடைய பலம் குறைந்தே காணப்படும். ஒரு கன்ஸ்யூமராக உங்களுடைய வேல்யூ உயர உங்களுக்கு பணம் தேவை ஆனால் ஒரு நிறுவனத்துக்கு நீங்கள் பணத்தை அள்ளி அள்ளி கொடுத்தால் உங்களின் சக்தியை இழந்து அந்த குறிப்பிட்ட நிறுவனத்தின் சக்தியைத்தான் அதிகப்படுத்திக்கொண்டே இருக்கிறீர்கள் என்று அர்த்தம். கவனம் தேவை மக்களே ! உங்களுக்கு தவறு என்று தெரிந்தால் கண்டிப்பாக செய்ய வேண்டிய செயல்களை செய்துவிடுங்கள் , இப்போது நான் சொல்லும் செயல் என்பது தண்டனையாக இருந்தாலும் இல்லையென்றால் தவறுகளை சரி செய்ய நீங்கள் பண்ணவேண்டிய செயல்களாக இருந்தாலும் கண்டிப்பாக பண்ணிவிடுங்கள்! அதனால் இப்போதே கஷ்டப்பட தொடங்குங்கள்.
இப்போது இந்த டார்க் பேட்டர்ன் பற்றி இன்னுமே பேசலாம். இங்கே ஒரு செயலை செய்து முடிக்க அதிகமான கால அவகாசம் மற்றும் தேவையான அனைத்து விஷயங்களும் நமக்கு தேவை. உதாரணத்துக்கு சமையல் பொருட்களையே எடுத்துக்கொள்ளுங்களேன். சமையலுக்கு தேவையான எல்லா பொருட்கள் இருந்தாலும் சிறப்பான செய்முறை மற்றும் நேர்த்தியான கால அவகாசம் இருந்தால்தான் நல்ல சாப்பாடு சாப்பிட முடியும் ஆனால் இங்கே டார்க் பேட்டர்ன்னிங் என்ன பண்ணுகிறது என்றால் இந்த குறிப்பிட்ட ஸ்பேஸ் டைம்க்குள் தேவைப்படும் செயலை செய்து முடிக்க முடியாமல் பண்ணிவிடுகிறது. இப்படி நடக்கும்போது நாம் என்ன MATRIX ல இருக்கிறோமா என்று நமக்குள்ளேயே ஒரு PARANOID கேள்வி வந்துவிடும். மனுஷங்களுக்குள் நிறைய பிரிவினைகள் இருக்கிறது ஆனால் இந்த பேட்டர்ன் பொறுத்த வரைக்கும் இரண்டே இரண்டு பிரிவினைகள்தான். முதல் விஷயம் இந்த பேட்டர்ன்னை சப்போர்ட் பண்ணுபவர்கள் , இரண்டாவது விஷயம் இந்த பேட்டர்ன்னை ரேசிஸ்ட் பண்ணுபவர்கள். என்னுடய நெருக்கமான நண்பர் ஒருவர் இந்த கருத்தை சொன்னார் "ஒரு கப்பலை கடைசி வரைக்கும் தரையிலேயே வைத்துக்கொண்டு இருக்கலாம். ஒரு ஆபத்துக்கள் இல்லாத வாழ்க்கை அந்த கப்பலுக்கு கிடைக்கும். ஆனால் அந்த கப்பலுடைய வாழ்க்கை கடலில் இறங்கினால்தான் கிடைக்கும்." - இந்த உலகத்தில் உயிரோடு இருக்கக்கூடிய நூறு வருஷமும் ஒரு தனிமையான இருள் தீவுக்குள் சுற்றி நடக்கும் எந்த ஒரு விஷயத்தை பற்றியும் கண்டுகொள்ளாமல் வாழ்ந்து கழித்துவிட வேண்டும் என்ற அறியாமை வாதம் சப்போர்ட் பண்ணுபவர்களிடம் இருக்கும் ஆனால் இன்னொரு பக்கம் இருப்பது ஒரு வாழ்க்கை கடலில் இறங்கிதான் பார்த்துவிடலாமே என்ற அறிவு நிறைந்த வாதம் இருக்கும். அறிவு நிறைந்தவர்கள் ஜெய்ப்பார்கள் அல்லது தோற்பார்கள் ஆனால் அறியாமையில் இருப்பவர்கள் எதுவுமே பண்ணாமல் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு இறந்துபோவார்கள். இது எல்லாமே ரொம்ப பெரிய கருத்துரு. இந்த ஒரு கட்டுரை கண்டிப்பாக போதாது.
No comments:
Post a Comment