Friday, November 24, 2023

RANDOM TALKS WITH NICE TAMIL BLOG - EPISODE - E001 - TAMIL MAGAZINE

 


இந்த உலகத்தில் நிறைய பேர் ஒரு விஷயத்தை புரிந்துகொள்வதே இல்லை. இங்கே யாருமே யாருக்குமே ஃபேனாக இருக்க கூடாது. இதுக்கு காரணம் என்னவென்றால் இங்கே யாராக இருந்தாலும் பயோலஜி அடிப்படையில் மரணத்தை அடைந்துதான் ஆக வேண்டும். இங்கே எந்த ஒரு உடலும் புனிதமான சக்திகளை கொண்ட உடல் கிடையாது , காய்ச்சல் , சளி என்று வெளிப்புறத்தில் இருந்து தாக்கும் பாக்டீரியா , வைரஸ் , பூஞ்சைகள், இல்லைன்னா கேன்சர் , ட்யூமர்ஸ் , மற்றும் சேராமை (அல்லர்ஜி) வகையிலும் உடல் பாதிக்கப்படுகிறது. உடல்நலத்தை பாதுகாப்பது அவ்வளவு முக்கியமான விஷயம். நம்ம உடல் அவ்வளவு மென்மையானது ஆனால் அதே சமயத்தில் கொடுக்கப்படும் சாப்பாட்டை சக்தியாக மாற்றும் அளவுக்கு ரொம்பவுமே வலிமையான இயந்திரமும் நம்ம உடல்தான். இப்படி ஒரு மரணத்துக்கு நெருக்கமான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு அடிப்படையில் பெரிய சாதனைகளை சாதிக்காமல் ஃபேன்ஸ் என்று இன்னொருவரின் சாதனையையே பாராட்டிக்கொண்டு இருந்தால் நாம் எப்படி சாதிக்க முடியும் ? இப்போ கொரிய இசை வெளியீட்டாளர்கள் மற்றும் நடிகர்களுக்கு நிறைய ஆதரவு கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். வருடக்கணக்கில் கொரிய படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்துக்கொண்டு இருந்தால் அந்த வருடத்துக்கான நம்ம சாதனை என்று என்னவாக இருக்கும் ? நாம் எதுவுமே சாதித்து இருக்க மாட்டோம் இல்லையா ? அடிப்படையில் ஒரு மனிதன் சாதனை பண்ணுகிறார் என்றால் ஒரு ஐந்து நிமிடம் நேரம் கொடுத்து பாராட்டிவிட்டு நம்ம வேலையை பார்க்க வேண்டும். பொழுதுபோக்கு துறையில் சாதனை பண்ணுவது பெரிய விஷயமே கிடையாது. ஒரு ஐமேக்ஸ் காமிரா , பக்காவான லொகேஷன்ஸ் , விஷுவல் எஃபக்ட்ஸ் , ஆடியோ இன்ஜினியரிங் , ஆர்ட் வொர்க்ஸ் , சிறப்பான எழுத்தாளர்கள் என்று ஒரு 50 பேர் கொண்ட குழு அமைத்தால் நிறைய பணம் செலவு பண்ணினால் யார் வேண்டும் என்றாலும் பொழுதுபோக்கு துறையில் சாதனையாளர்களாக மாறலாம். இங்கே மக்கள் என்னிடம் ஒரு கேள்வியை கேட்கிறார்கள் ! பொழுது போக்கு துறையில் ஏழைகள் சாதித்து இருக்கிறார்களே அப்படி இருக்கும்போது நீங்கள் இப்படி ஒரு 'பொழுது போக்கு துறைகளை சாதிப்பது பெரிய விஷயம் இல்லை என்று ஸ்டேட்மெண்ட் கொடுத்தால் அது அவர்களுடைய உழைப்பை அவமானப்படுத்துவதாக இருக்கும் இல்லையா ? இப்படி ஒரு வார்த்தையை சொல்லலாமா ? " என்று நீங்களும் கேட்கலாம் , ஆனால் பொழுது போக்கு துறைகள் சம்மந்தப்பட்ட எந்த ஒரு ஏழை சாதனை பண்ணினாலும் அதுக்கு பணம் அப்போது தேவைப்பட்டு இருக்கும் அடுத்தவர் கொடுத்த பணம் , அடுத்தவர் கொடுத்த உழைப்பு , அடுத்தவர் கொடுக்கும் அறிவுத்திறன் இது எல்லாமேதான் தரமான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை கொடுக்கிறது ஆனால் உலகத்தில் நிறைய பிரச்சனைகள் சென்றுக்கொண்டு இருக்கும்போது பொழுதுபோக்கு விஷயங்களாக இருக்கும் தொலைக்காட்சி , தொடர்கள் , இசை வீடியோக்களை மாதக்கணக்கில் மற்றும் வருடக்கணக்கில் பார்த்துக்கொண்டு இருக்க கூடாது. அது உண்மையில் தவறான விஷயம் என்று சொல்ல முடியாது ஆனால் பணமே இல்லாத ஒரு நிலைமையில் பணம் சம்பாதிப்பதை விட்டு விட்டு பொழுதுபோக்கு உலகத்தின் மோகத்தில் இடம்பெற கூடாது. ஒரு ஒரு மனுஷனுக்குமே கடவுள் நல்ல அறிவுத்திறனை கொடுத்து இருப்பது நிறைய பேரிடம் பேசி பழகி வேலை பார்த்து அறிவை வளர்த்துக்கொள்வதற்காகவும் பின்னாட்களில் நிறைய செயல்களை நாமே எடுத்து செய்வதற்காகவும் மட்டும்தான் ஆனால் இந்த பொழுதுபோக்கு உண்மையில் உங்கள் நேரத்தை அதிகமாக எடுத்துக்கொண்டு உங்களுடைய தோல்வியைத்தான் அதிகப்படுத்துகிறது. கடந்த இருபது ஆயிரம் ஆண்டுகளாக மனிதன் முன்னேற்றத்துக்காக சண்டை போட்டுக்கொண்டு இருக்கிறான். இந்த போட்டிகளின் அடிப்படையிலான சண்டையை இன்று ஆர்ட்டிஃபிஷியல் இன்டெல்லீஜென்ஸ் கைகளில் எடுத்துக்கொண்டு உள்ளது. இன்ஸ்டாகிராம் இணையதளத்தில் உயிரே இல்லாத ஒரு உருவம் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெல்லீஜென்ஸ் புரோகிராம் மூலமாக மனிதர்களிடம் பேசி வீடியோ வீடியோவாக போட்டு 10000 டாலர்கள் (84,000 ரூபாய் பணம்) முதல் மாத சம்பளமாக பெற்று உள்ளது !! இந்த மாதிரி விஷயங்கள் எல்லாமே வந்துகொண்டே இருந்தால் மனிதனுடைய அடிப்படை மனிததன்மையே போய்விடும். ஒருவரை ஒருவர் கொன்று சாப்பிடும் நிலைக்கு இந்த கம்ப்யூட்டர்கள் கொண்டுபோய்விடும் என்று நான் நினைக்கிறேன். என்னுடய கணிப்பு சரியாக இருக்கும் என்றால் இன்னும் கொஞ்சம் வருடங்களில் இந்த உலகம் அழிந்துவிடும். இந்த உலகத்தில் மனிதர்களை எல்லாம் மெஷின்கள் கொன்று போட்டுவிடும். இதுதான் என்னுடைய கணிப்பு. இந்த கணிப்பு நிறைவேற கூடாது என்று கடவுள்களை வேண்டிக்கொள்கிறேன். 

No comments:

Post a Comment

CINEMA TALKS - MISSION IMPOSSIBLE GHOST PROTOCOL - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

சொந்த நாட்டின் பாதுகாப்புக்காக வெளிநாட்டில் தங்களுடைய உயிரை பணயம் வைத்து மிஷன்னை முடிக்க வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள் கதாநாயகன் ஈதன் மற...