Monday, November 20, 2023

CINEMA TALKS - ANEGAN - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

 நம்ம தமிழ் ஆடியன்ஸ்க்கு அயன் , கோ , படங்களுக்கு பின்னால் கே. வி. ஆனந்த் அடுத்து என்ன சர்ப்ரைஸ் கொடுக்கப்போகிறார் என்று நிறைய நாட்கள் காத்திருப்பு இருந்தது. அந்த வகையில் டிஸப்பாயிண்ட்மெண்ட் பண்ணாமல் ஒரு மூன்று ஜென்ம காதல் கதையை இந்த காலத்து ஆடியன்ஸ்க்கு ஏற்றது போல படத்தில் ரொம்ப சிறப்பாக கொண்டுவந்து இருப்பார் இயக்குனர் கேவி ஆனந்த், இந்த படம் வெளிவந்த நாட்களில் நான் நிறைய முறை ரசித்து பார்த்த படம் காரணம் என்னவென்றால் இந்த படமே ரொம்ப புதிதாக இருந்தது. தனுஷ் ஒரு முன்னணி நடிகராக இந்த படத்துக்கு ரொம்பவுமே கவனம் கொடுத்து அவருடைய அந்த 3 ஜென்ம கதாப்பத்திரங்களுக்கும் தனித்தனியாக ரொம்பவுமே மாறுபட்ட கதை அமைப்புகள் இருப்பதால் நன்றாகவே கவனம் கொடுத்து கதாப்பாத்திரங்களை பண்ணி கொடுத்து இருப்பார். இந்த படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆகும் அமீரா சொல்லப்போனால் ரொம்பவுமே பிரமாதமான நடிப்புத்திறனை வெளிப்படுத்தி இருக்கிறார். இந்த படம் இவர்கள் இல்லை என்றால் கண்டிப்பாக இல்லை என்று சொல்லிவிடலாம். இந்த படத்துடய கதை என்னவென்றால் வீடியோ கேம் டிசைனர்ராக கிரண்னின் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் மதுமிதா இப்போது ரொம்ப அன்யூஸ்வல் கனவுகள் மூலமாக அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் அஸ்வின்தான் போன ஜென்மங்களின் அவருடைய காதலன் என்று சொல்கிறார். ஆரம்பத்தில் மறுக்கும் அஸ்வின் பின்னாட்களில் சொல்ல வந்த விஷயங்களின் உண்மையை புரிந்துகொண்டு மதுமிதாவுக்கு பின்னால் நடக்கும் சதிகளை முறியடிப்பதே இந்த படத்தின் கதை. இந்த படம் கார்த்திக் முதல் முறையாக வில்லனாக நடித்து இருப்பதால் பெர்ஃபார்மன்ஸ்ஸில் வேற லெவல்லில் நடித்துள்ள படம் எனலாம். ஸாங்க்ஸ் எல்லாமே வெளிவந்தபோதே ஹிட் மேலும் பேக்ரவுண்ட் ஸ்கோர் ரொம்பவுமே பெஸ்ட் என்ற பெருமை எல்லாமே நம்ம ஹாரிஸ் ஜெயராஜ் அவர்களையே சாரும். கேவி ஆனந்த் அவர்களிடம் இருந்து ரொம்பவுமே பெஸ்ட்டாக ஒரு ஃபேண்டஸி ஃபிக்ஷன். படம் ரொம்பவே நன்றாக இருந்தது. மறு ஜென்மம் போன்ற ஒரு கான்செப்ட்டை எடுத்து மாடர்ன் அப்ரோச்ல கொடுத்த இந்த படம் வெளிவந்த நாட்களில் தமிழ் சினிமாவுக்கு ரொம்ப புதிதாக இருந்தது. காஸ்ட்யூம்ஸ் மற்றும் லொகேஷன்ஸ் எல்லாமே டிசைன் பண்ணியதில் குறிப்பாக ஆர்ட் டிபார்ட்மெண்ட் ரோம்பவுமே பிரமாதமாக இந்த படத்தில் செயல்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...