ஹேர்க்குல் பைரேட் அவருடைய டிடெக்டிவ் வேலையில் இருந்து விடுப்பு எடுத்து வெனிஸ்ஸில் தாங்குகிறார். ஹாலோவீன் திருவிழா கொண்டாட்டங்கள் சென்றுக்கொண்டு இருக்கும்போது ஒரு குறிப்பிடத்தக்க கட்டிடத்தில் மட்டும் ஆவிகள் நடமாட்டம் இருப்பதால் அந்த கட்டிடத்தில் வசித்த பணக்கார பெண்மணியின் மகள் தண்ணீரில் இறந்துவிட்டாள் (வெனிஸ் நகரத்தின் கட்டிடங்கள் தண்ணீரின் மேல் கட்டப்பட்டு இருக்கும்) என்ற மர்மம் இருக்கிறது. ஆவிகள் மேலே நம்பிக்கை இல்லாத நமது ஹேர்க்குல் இந்த இடத்துக்கு ஆவிகளுடன் பேசும் ஒரு மாயாஜால பெண்மணியின் திட்டங்களை தெரிந்துகொள்ளத்தான் வருகிறார் . ஆனால் மழையாக கொட்டிக்கொண்டு இருந்த அந்த ஹாலோவீன் இரவில் அங்கே அமனுஷ்ய சக்திகளால் நிறைய கொலைகள் நடக்கிறது. நடப்பவைகள் ஹேர்க்குல்லால் கூட நம்ப முடியாதவைகளாக இருப்பதால் அவருடைய உயிருக்கு ஆபத்து இருந்தாலும் இந்த மிஸ்டேரி என்னவென்று கண்டுபிடிப்பாரா என்பதுதான் படத்தின் கதைக்களம். இந்த படம் பெரிய கிராண்ட்டான அமைப்புகள் எல்லாம் இல்லாமல் கதையை மட்டுமே ஃபோகஸ் பண்ணி இருக்கிறது. கிளைமாக்ஸ்ஸில் நடந்த விஷயங்களுக்கு எல்லாம் ஹேர்க்குல் பைரேட் கொஞ்சம் கொஞ்சமாக விளக்கம் கொடுக்கும் காட்சி ரொம்பவுமே பிரமாதமானது. கென்னத் மறுபடியும் அவருடைய
ஹேர்க்குல் ரோல்லை ரொம்ப பெஸ்ட்டாக பண்ணிக்கொடுத்து அகாதா கிறிஸ்டியின் இன்னொரு கதையை ஒரு நல்ல ஃபிலிம் பிரசன்டேஷன்னாக கொடுத்து இருக்கிறார். கதாப்பாத்திரங்களுக்கு எக்ஸ்சேல்லண்ட் கேஸ்ட்டிங் சாய்ஸ். ஒரு ஹாரர் படமும் மிஸ்டேரி படமும் கலந்து கொடுக்கபட்ட படம் இது என்பதால் கோஸ்ட்டாக பயமுறுத்தும் காட்சிகள் எல்லாமே உண்மையில் வழக்கமான அகாதாகிறிஸ்டி கதைகளின் ஸ்டைல்லில் இருந்து கொஞ்சம் புதுமையாகவே இருந்தது. ஒரு வோர்த்தான இன்ஸ்டால்மென்ட். டெத் ஆன் நைல் படத்துக்கு பின்னால் இந்த படம் ஒரு நல்ல கன்டினியூவேஷன். இந்த படத்துக்கு காமிரா வொர்க் மற்றும் சினிமாட்டிக் விஷுவல் எஃபக்ட்ஸ் ரொம்ப பெரிய பிளஸ் பாயிண்ட். நைட் விஷன்னில் கூட சின்ன லொகேஷன்னில் கூட காமிரா வொர்க் கொஞ்சமும் குறை வைக்கவில்லை. லொகேஷன்னுக்குள் கொண்டுபோய்விடுகிறது. தியேட்டர்ரில் பார்க்க இந்த படம் ஒன்ஸ் இன் லைஃப்டைம் ஆப்பர்ச்சுனிட்டி. கண்டிப்பாக பாருங்கள்.
எஃபக்ட்ஸ் மற்றும் லொகேஷன்ஸ் மட்டுமே ஃபோகஸ் பண்ணாமல் ஆக்டிங்கை மட்டுமே பிரைமரி கான்செப்ட்டாக கொண்டு ஒரு பிரமாதமான கேஸ்ட் இருக்கும் பிரசன்டேஷன் இந்த படம். கண்டிப்பாக ஒரு முறை பாருங்கள்.
No comments:
Post a Comment