Monday, November 27, 2023

RANDOM TALKS WITH NICE TAMIL BLOG - EPISODE - 008 - TAMIL MAGAZINE

 இந்த உலகத்தில் இருக்கும் எல்லா நிபந்தனைகளையும் கட்டுப்பாட்டையும் எடுத்துவிட்டால்தான் என்ன ? அடிப்படையில் இது அவ்வளவாக வேலை செய்யாத யோசனை என்று சொல்லப்படுகிறது. காரணம் என்னவென்றால் நிபந்தனைகள் இல்லாத விளையாட்டு கடைசியில் புஜபல பராக்கிரமத்தை காட்டும் சண்டையாக மட்டும்தான் மாறிப்போகும். காலத்துக்கு என்று ஒரு அட்வாண்டேஜ் இருக்கிறது, அது ஒரு அதிர்ஷ்டம் போன்றது. எல்லா நேரங்களிலும் அந்த அதிர்ஷ்டம் உங்களுக்கு சப்போர்ட் பண்ணாது. நம்ம வாழ்க்கையில் வெற்றியும் அடையனும். தோல்வியும் அடையனும் ஆனால் இந்த இரண்டு விஷயங்களும் தலைக்கு உள்ளே போகக்கூடாது. ஒரு சில குறிப்பிட்ட சம்பவங்கள் நடக்கும்போது உயிரை கொடுத்து போராடினாலும் வெற்றி அடைய முடியாது ஆனால் போதுமான சயின்ஸ் அண்ட் டெக்னோலஜி இருந்தால் கண்டிப்பாக வெற்றியை அடைந்துவிடலாம். இதனால்தான் பொருள் சேர்க்காமல் வெறும் அன்பு மட்டுமே சேர்த்து வாழ்வது பயன் இல்லாதது. நான் நிறைய நேரங்களில் ஒரு நிறுவனத்தை தொடங்க நிறைய வேலைகளை செய்து பணம் சம்பாதிக்க முயற்சி பண்ணி காலத்தால் தோற்கடிக்கப்பட்டு இருக்கிறேன். நான் முன்னதாக சொன்னது போல காலத்தின் அட்வாண்டேஜ் எனக்கு உதவி பண்ணவில்லை. காலத்தின் அட்வாண்டேஜ் என்பது ஒரு சில நேரங்களில் கடவுள் செயலாகவோ இல்லையென்றால் விதியின் செயலாகவோ ஒரு அட்வாண்டேஜ் நமக்கு கிடைக்கும். அந்த காலத்தில் மட்டும் நாம் செய்யும் வேலைகள் எல்லாமே ஒரு இனம் புரியாத அதிர்ஷ்டமாக ரொம்ப வெற்றிகரமாக முடியும். இங்கே என்னுடைய இலட்சியம் மற்றும் கனவுகள் ரொம்பவுமே பெரியது. ஆயிரக்கணக்காக பக்கங்களில் எழுதிவைத்த என்னுடைய கான்செப்ட்களை ஒரு புத்தகமாக பப்ளிஷ் பண்ண நிறைய நாட்கள் முயற்சி பண்ணி இருக்கிறேன் ஆனால் கடைசியில் வலைப்பூவில் பதிவு பண்ணவேண்டிய நிலையில் இருக்கிறேன். இப்படியே பேச்சு மாற வேண்டாம் நாம் கான்செப்ட்க்குள் சென்றுவிடுவோம். காலத்தின் அட்வாண்டேஜ் / ஒரு தனியார் நிறுவனம் - ஒரு நிறுவனம் என்பது அந்த நிறுவனத்தின் லேபர்களின் கடைசி கட்ட உழைப்பு வரைக்கும் கொடுத்தால்தான் வெற்றியை அடைய முடியும் என்ற அவசியம் இல்லை. ஆனால் லேபர்கள் என்று வரும்போது டேடிகேஷன் அதாவது அர்ப்பணிப்பு இருக்க வேண்டும். இங்கே எல்லோருமே வொர்க்கை சரியாக பண்ண வேண்டும் மேலும் எடுக்கக்கூடிய ஒரு ஒரு முடிவும் ரொம்ப அறிவுப்பூர்வமாக இருக்க வேண்டும். போதுமான அறிவுப்பூர்வமான கான்செப்ட்கள் இல்லை என்றால் நாம் காப்பாத்த வேண்டும் என்று ஒரு விஷயத்தை நினைத்தாலும் காப்பாற்ற முடியாது. இந்த உலகம் எப்படிப்பட்டது என்றால் உங்களை உண்மையாகவும் ஆசைகள் இல்லாதவராகவும் இருக்க வைக்கும் ஆனால் அப்படி இருந்தால் உங்களுக்கு கடைசி வரைக்குமே எதுவுமே கிடைக்காது. உங்களுடைய வாழ்க்கையில் உங்களுக்கு என்று சக்திகளை உள்ள விஷயங்களை நீங்கள் இழந்துவிட்டால் மறுபடியும் அந்த சக்திகளை பெறுவது உங்களால் முடியாதது என்பதால் பயிற்சிகளை பண்ணி உங்களுக்கு தேவையான பொருட்களை சம்பாதித்துக்கொள்ளும் அளவுக்கு உங்களை தயார்படுத்திக்கொள்ளுங்கள். பணம் விஷயத்தில் யாரையுமே நீங்கள் நம்ப வேண்டாம். பார்ட்யூன் ஃபேவர்ஸ் ஃபூல்ஸ் என்று ஒரு வாக்கியம் இருக்கிறது. பணம் என்னைக்குமே அந்த பணத்துக்கு தகுதி இல்லாதவர்களிடம்தான் அதிகமாக கொட்டிக்கிடக்கும். பொதுவாக பணம் விஷயத்தில் யாரையும் நம்பவே கூடாது. இங்கே நியாயமாக இன்வெஸ்ட்மேன்ட்டை கைகளுக்குள் போட்டுக்கொண்டு நான் பணத்தை எதிர்பார்த்த இடத்தில் முட்டாள்தனமாக முடிவு எடுப்பதை என்னால் நம்ப முடியவில்லை. இந்த பணம் நியாயமாக என்னுடைய வங்கிக்கணக்கில் சேர்ந்து இருக்க வேண்டிய பணம் ஆனால் நான் இந்த பணத்தை பற்றி எத்தனை முறை படித்து படித்து குழந்தைக்கு சொன்னது போல சொல்லி புரியவைத்தாலும் கடைசியில் ரொம்பவுமே சுயநலமாக அவர்களே வைத்துக்கொள்ள வேண்டும் என்று முட்டாள் அதிகாரத்தை பயன்படுத்தி பணத்தை மொத்தமாக அள்ளிவிட்டார்கள். அதாவது ஒரு புத்திசாலித்தனமான முதலீட்டுக்கு அவர்களால் அந்த பணத்தை பயன்படுத்த முடியாது ஆனால் உடல்நலத்தையும் மனநலத்தையும் கெடுத்துக்கொண்டு பின்னாட்களில் நிறைய முட்டாள்தனமான செலவுகளுக்கு வந்து அந்த பணத்தை பயன்படுத்தலாம். இதுதான் இங்கே இவர்களுடைய திட்டம். இத்தனை விஷயங்களையும் கேட்கப்போனால் பணத்தின்  சக்தியை வைத்து தொழில் தொடங்கி வீடு வாசல் என்று நன்றாக இருக்க அவர்களுக்கு ஆசை இல்லை. பணம் வெறும் பயன்படுத்தப்படாத சமையல் பொருட்கள் போல காலாவதி ஆகவேண்டும் என்றாலும் பரவாயில்லை ஆனால் இன்னொருவருக்கு பிரயோஜனமாக இருக்க கூடாது என்று ஒரு மனநிலையில் இவர்கள் இருக்கிறார்கள். இப்படி வாழ்ந்துகொண்டு இருந்தால் கடவுள்தான் இவர்களுக்கு சொல்ல வரும் விஷயத்தை புரிய வைக்க வேண்டும். நம்பிக்கை இருப்பவன் கோடலியை வைத்து மரங்களை நடுகிறான். நம்பிக்கை இல்லாதவன் அதே கோடாலியை வைத்து அவனுக்கான சவக்குழியை தோண்டிக்கொள்கிறான். 

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...