Wednesday, November 8, 2023

CINEMA TALKS - KADHALA KADHALA - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

 நான் நிறைய நாட்களாக பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்ட ஒரு படம் காதலா காதலா. இந்த படத்தில் கமல் ஹாசன் மற்றும் பிரபு தேவாவின் ஆன் ஸ்க்ரீன் பிரசன்டேஷன் ரொம்ப ரொம்ப பெஸ்ட்டாக இருக்கும். ஒரு ஃபேமிலியாக பார்க்கும் அளவுக்கு மொத்தமாக எடுக்கப்பட்ட பொழுதுபோக்கு கமர்ஷியல் படம். இந்த படம் வெளிவந்த 1998 இல் ரொம்பவுமே ரசிக்கும்படியான ரசனைமிக்க கிளாஸ்ஸிக்காக இந்த படம் இருந்தது ரொம்ப ஆச்சரியமான விஷயம். இந்த படம் பொதிகை தொலைகாட்சியில் எப்போது பார்க்கலாம் என்று காத்துக்கொண்டு இருந்த காலம் எல்லாம் இருக்கிறது. ஒரு சில காட்சிகள் ரொம்பவுமே நல்லா இருக்கும். உதாரணத்துக்கு அந்த போர்ட்ரைட் பெயிண்டிங் விற்கும் காட்சிகள் , பிரபு தேவா ஏதாவது சொல்ல வரும்போது தடுக்கும் காட்சிகள் , கனவில் வரும் பிளாஷ்பேக் காட்சிகள் எல்லாமே ரொம்பவே கிரேயடிவ்வாக இருந்தது. காசு மேல காசு வந்து பாடலில் சின்ன வயதில் இருந்தே நட்பாக இருந்தது போல அந்த டான்சிங் ஸ்டெப்ஸ்ல இருந்த அக்யூரசி ரொம்ப ரொம்ப புரஃபஷனல். ஒரு பொய்யை மறைக்க ஆயிரம் பொய்கள் என்ற ஒரு லைன் லாஜீக்குக்கு இந்த படம் ஒரு செம்ம கமர்ஷியல் எண்டர்டெயின்மெண்ட். ஒரு சினிமா படம் என்ற பாயிண்ட் ஆஃப் வியூல கமர்ஷியல் ஆடியன்ஸ்ஸை கண்டிப்பாக இந்த படம் இம்ப்ரஸ் பண்ணும். க்ரேஸீ மோகனின் அந்த ரெட்ரோ காலத்து நாடகங்களின் ஃபேன்ஸ்க்கு இந்த படம் கண்டிப்பாக ரொம்ப ஸ்பெஷல்லான ஒரு படம். கார்த்திக் ராஜாவின் பாடல்களும் பிளஸ் பாயிண்ட்.  ஒரு சில இடங்களில் ஸ்டேஜ் டிராமா எஃபக்ட் இந்த படத்தில் இருக்கும் - மேலும் ரொம்ப புரஃபஷனல் ஆக்டிங் ஸ்கில்ஸ்களை இந்த படத்தில் வொர்க் பண்ணின அனைவருமே கொடுத்து இருப்பார்கள். கமல் , பிரபு தேவா , எம். எஸ். வி , சௌந்தர்யா , ரம்பா , டெல்லி கணேஷ் , ஸ்ரீ வித்யா , கொச்சின் ஹனீபா , நாகேஷ் , சோ , கோவை சரளா , வடிவேலு என்று ஒரு நட்சத்திர பட்டளமே இந்த படத்தில் இருப்பதால் ரொம்பவுமே ரசிக்கும் படியான திரைப்படம். பின்னாட்களில் வெளிவந்த பல திரைப்படங்களுக்கு ரொம்ப இன்ஸ்பிரேஷன்னாக இருந்த படம் இந்த படம். 

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...