Thursday, November 30, 2023

CINEMA TALKS - KANNA LADDU THINNA AASAIYA - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

 



ஒரு கதாநாயகி , மூன்று பேர் கதாநாயகர்களாக இருக்கும் ஒரு முக்கோண காதல் கதை, இவர்களில் யாருக்கு காதல் சக்ஸஸ் ஆகும் என்று ஒரு கலகலப்பான பின்னணியுடன் இன்று போய் நாளை வா படத்தை மொத்தமாக இன்ஸ்பிரேஷன் பண்ணி எடுக்கப்பட்ட ஒரு படம் இந்த கண்ணா லட்டு தின்ன ஆசையா ? , இந்த படத்தில் சேது ராமன் , சந்தானம் ,மற்றும் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாஸ் என்று மூன்று பேரும் கியூட்டாக ரொமான்ஸ்க்காக அலைந்து கதாநாயகியின் வீட்டில் இருப்பவர்களை இம்ப்ரேஸ் பண்ண செய்யும் எக்கச்சக்கமான செயல்கள் எல்லாமே படத்துக்கு நிறைய கலகலப்பான காட்சிகளை கொடுக்கிறது. பாக்யராஜ் அவர்களின் இன்று போய் நாளை வா படத்தின் நிறைய காட்சிகளை அப்படியே எடுத்து இருக்கும்போது போன படக்குழுவிடம் எந்த விஷயமும் கலந்து ஆலோசனை பண்ணாமல் எடுத்த படம் என்பதால் படம் பின்னால் பெரிய பிரச்சனைகளை சந்தித்தாலும் ரிலீஸ் ஆன பாயிண்ட் ஆஃப் வியூவில் ரொம்ப பெரிய இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்து சந்தானம் பின்னாட்களில் ஹீரோவாக நடிக்க நிறைய ஆப்ஷன்ஸ்களை கொடுத்து வைத்து இருந்தது இந்த படம்தான். இந்த படத்தில் நடித்த எல்லோருக்குமே அவர்களுடைய கரியரில் இந்த படம் ரொம்ப முக்கியமான படமாக இருந்து இருக்கும். சாங்க்ஸ் எல்லாமே வாலி அவர்களின் பாடல் வரிகளில் எஸ். தமன் ஒரு சூப்பர் ஹிட் சவுண்ட் டிராக் ஆல்பம் அந்த வெளியீடு நாட்களின் பாயிண்ட் ஆஃப் வியூவில் கொடுத்துவிட்டதால் போட்டியே இல்லாமல் ஜெயித்துவிட்டது. மொத்ததில் இந்த படமும் ஒரு பெஸ்ட் காமெடி என்டர்டைன்மெண்ட்தான். ஒரு நல்ல கதைக்கு பெர்ஃபேக்ட்டாக மூன்று காதநாயகர்கள் செலெகட் பண்ணினாலும் நடிப்பு என்ற விஷயத்தில் எல்லோருமே அவர்களுடய பெஸ்ட்டை கொடுத்து இருப்பதால் சின்ன சின்ன சொதப்பல்கள் இருந்தாலும் படம் ரொம்ப நன்றாகவே இருக்கிறது. இந்த படம் , இந்த படத்துக்கு பின்னால் வாலிப ராஜா படம் என்று சேதுராமன் அவர்களை நம்ம தமிழ் சினிமா ரொம்பவே மிஸ் பண்ணுகிறது. விண்ணைத்தாண்டி வருவாயா கணேஷ் அவர்கள் இந்த படத்தில் பிரமாதமான நகைச்சுவை திறன் கொடுத்துள்ளதால் இங்கே அவர் நடிக்கும் ஒவ்வொரு காட்சிகளும் ரொம்பவுமே ரசிக்கும்படியாக இருக்கிறது. சந்தானம் சாதனை செல்வராக வெற்றி அடைகிறார். பவர்ஸ்டார் மிகவும் கியூட்டான பேர்ஃபார்மன்ஸ் கொடுத்து இருக்கிறார். மொத்ததில் நல்ல படம். 

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...