ஒரு மணி நேரம் எழுதி ஒரு நொடியில் அழிந்துவிட்டால் என்ன பண்ணுவது ? நானும் எப்போதுமே ஒரு நாளில் கொஞ்சம் நேரம் இருந்தாலும் சினிமா பேசுவும் வலைப்பூ கருத்துக்களை எழுதவும் நினைக்கிறேன். ஆனால் எப்போதோ ஒரு நாளில் மட்டும்தான் நான் சொன்ன இந்த 'கொஞ்ச நேரம்' கிடைக்கிறது. அது போன்ற நேரத்திலும் ஒரு சில முறை இந்த மாதிரி ஒரு சங்கடமான விஷயம் நடந்துவிடுகிறது. அதாவது நான் ஒரு 10 பேஜ் மொத்தமாகவும் எழுதுகிறேன் ஆனால் SAVE பண்ணாமல் டெக்ஸ்ட் ஆட்டோமேடிக்காக டெலீட் ஆகிவிடுகிறது. இந்த மாதிரியே நடந்தால் வாழ்க்கை எங்கே போவது. இருந்தாலும் இந்த விஷயத்தை நான் கொஞ்சம் ஆழமாக யோசிக்கும்போதுதான் மண்டைக்குள் பல்பு எரிந்துவிட்டது. இரண்டு வருடங்கள் முதல் இருபது வருடங்கள் வரை காற்றை தூய்மைப்படுத்தி வேலை பார்க்கும் மரங்களை வெட்டப்படாமல் எப்படி காப்பாற்ற முடியும் ? மரங்கள் ஒரு நல்ல நிலையில் இருந்து நிரந்தரமாக வளர்ந்து பயன் தரும் அளவுக்கு வரவேண்டும் என்றால் குறைந்தது 10 வருடங்களாவது தேவைப்படும். சமீபத்தில் ஒரு ஆவணப்படத்தில் மரங்களை வெட்டிவிடுவதால் மண்ணுக்குள்ளே கெட்டித்தன்மை இல்லாமல் போய்விடுகிறது. இதனால் மழைக்காலங்களில் நிலச்சரிவு உருவாகும். இப்படி உருவாகும் நிலச்சரிவு மலையின் அடிவாரத்தில் இருக்கும் வீடுகளை நிரந்தரமாக மூடிவிடும் அதுவுமே இல்லாமல் உயிருக்கு கூட ஆபத்து இருக்கிறது. இங்கே பொதுவாக மரங்களை வெட்டுவதால் மழைப்பொழிவு குறைவது மட்டும்தான் பிரச்சனை என்று நினைக்கிறோம். ஆனால் அதுமட்டுமே பிரச்சனை இல்லை. கார்பன் டை ஆக்ஸைட் உள்ளிட்ட பல நிரந்தர வாயுக்கள் நம்ம காற்று மண்டலத்தில் கலந்துவிடுகிறது. இந்த வாயுக்கள் பசுமை இல்ல வாயுக்கள் (கிரீன் ஹவுஸ் கேஸ்ஸஸ் - என்னமோ ரியல் எஸ்டேட் கம்பெனி பெயர் மாதிரி இருக்கு இல்லையா ? கிரீன் ஹவுஸ் அபார்ட்மெண்ட்ஸ் - உங்களுக்கு தேவையான இல்லம் DTCP அப்ரூவலுடன் கிடைக்கும். விற்பனைக்கு அணுகுங்கள்) என்ற வகையறா வாயுக்களை எரிக்கும்போது வெளிப்படுத்தும். போதுமான ஆக்ஸிஜன் இல்லாததால் ஓசோன் வாயுவும் உற்பத்தி ஆகாது. அதே சமயத்தில் பகலில் பூமியால் உறிஞ்சப்பட்ட வெப்பக்கதிர்கள் இரவில் வெளியே வரும்போது இந்த மாதிரி கார்பன் டை ஆக்ஸைட் வாயுக்கள் அந்த கதிர்களை வானத்துக்கு செல்ல விடாமல் மறுபடியும் பூமிக்கே அனுப்பிவிடும். இதனால் பூமி சூடாக மாறும். இப்படி சூடாக மாறிக்கொண்டே இருந்தால் மழை மேகம் குளிர்ந்து மழை பொழியாமல் நம்ம ஊரு கிராமங்களும் நகரங்களும் பின்னால் தண்ணீர் பஞ்சங்களிலும் சாப்பாட்டு பஞ்சங்களிலும் மாட்டிக்கொண்டு சொத்துக்கு அடித்துக்கொண்ட காலம் போய் சோற்றுக்கு சாகும் காலம் வந்துவிடும். மரங்களை அழிப்பது சுலபம் ஆனால் உருவாக்குவது ரொம்ப கஷ்டம். மரங்கள் அடிப்படை , மரங்கள்தான் கெத்து என்று சென்ட்டிமென்ட் பேசவேண்டும் என்பதற்காக இப்படி ஒரு போஸ்ட் போடவில்லை. மரங்கள் என்பதும் ஒரு வகை பொருட்கள்தான் ஆனால் இந்த பொருட்களுடைய தேவை நம்ம பூமியில் அதிகமாக இருக்கிறது. மரங்களால் மற்றும் கடல்வாழ் உயிரினங்களால் மட்டும்தான் சுத்தமான ஆக்ஸிஜன்னை உருவாக்க முடியும். மேலும் கார்பன் டை ஆக்ஸைட்டை குறைக்கவும் முடியும் என்றால் இந்த வகை பொருட்களுக்கு விலை என்னைக்குமே அதிகம் அதனால வேஸ்ட் பண்ணக்கூடாது. இப்போ நம்ம எம். கிப்ரான் அவர்கள் ஒரு மியூசிக் சவுண்ட்டிராக் காம்போஸ் பண்ணுகிறார் என்று வைத்துக்கொள்வோம் ! அது ஒரு நிஜமான பொருள் என்று ஆகுமா ? அது ஒரு இண்டலெக்ச்சுவல் ப்ராப்பர்டியாக கருதப்படும் கற்பனையான பொருள். ஒரு பாட்டு நல்லா இல்லைன்னு விட்டுட்டாலும் இன்னொரு பாட்டு கிடைக்க ஒரு சில நாட்கள் அல்லது ஒரு வாரம் போதுமானது. அதிகபட்சம் போனால் அவருக்கு ஒரு மாதம் தேவைப்படும் ஆனால் நம்ம கடவுளுடைய படைப்பில் மறுபடியும் இன்னொரு மரம் உருவாக வேண்டும் என்றால் 2 வருடம் முதல் 10 வருடம் வரைக்கும் கூட தேவைப்படும். இண்டலெக்ச்சுவல் ப்ராப்பர்டியை எடுத்துக்க முடியாது ஆனால் கணக்கு இல்லாமல் நகல் எடுக்க முடியும். விற்பனை மற்றும் வாங்கல் பார்க்க முடியும் ஆனால் மரங்கள் அப்படிப்பட்டது அல்ல. ஒரு முறை ஒரு மரத்தை வெட்டினால் வெட்டியதுதான். மறுபடியும் அதே மரத்தை கொண்டுவரவே முடியாது. இது பற்றிய என்னுடைய கருத்து என்னவென்றால் அதிகாரத்தில் சரியான ஆட்கள் தலைமையில் இருக்க வேண்டும் அப்படி இல்லாத காரணத்தால்தான் மரங்களை வெட்டுவது பயங்கரமான விஷயம் என்று புரியாமலே இங்கே நான்கு அடி , அங்கே நான்கு அடி , அப்படியே வெட்டி சாய்த்துவிட்டு போய்க்கிட்டே இருக்க வேண்டும். ஒரு இன்ச்ன்னாலும் ஒரு இன்ச் என்று சந்தோஷமாக மரங்களை வெட்டிக்கொண்டு இருக்கிறோம். நான் என்னுடைய எழுத்துக்கள் அழிந்தால் இல்லையென்றால் என்னுடைய ப்ராஜக்ட் அழிந்தால் மறுபடியும் பண்ணிக்கொள்வேன் ஆனால் மரங்கள் வெட்டப்பட்டால் கொண்டுவரத்தான் முடியுமா ? யோசிங்க !! யோசிங்க !!
வெறும் சினிமா மற்றும் பொழுது போக்கு விஷயங்கள் நிறைந்த ஒரு வலைத்தளம் இதுவாகும், இன்னும் எடிட்டிங்கில் தான் உள்ளது. CONTENT குறைபாடுகளுக்கு மன்னிக்கவும். SPELLING MISTAKE களுக்கும் மன்னிக்கவும். TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW
Subscribe to:
Post Comments (Atom)
GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !
ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...
-
ஊதா ஊதா ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன் ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன் ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன் சொல்லடி அவனுக்கு நான் ச...
-
பணமும் நம்பிக்கை துரோகங்களும் - இங்கே மனிதன் கஷ்டப்பட்டு சம்பாதித்து வாங்கிய பொருட்கள் அவனை எப்போழுதுமே கைவிடுவதில்லை. காரணம் என்னவென்றால் அ...
No comments:
Post a Comment