Wednesday, November 8, 2023

GENERAL TALKS - TAMIL BLOG IN 2023 - தமிழ் வலைப்பூக்கள் - என்னுடைய கருத்து !!

 


ஒரு காலத்தில் வெப் பிரவுஸ்ஸிங் என்பது ரொம்ப சர்ப்ரைஸ்ஸான டெக்னாலஜியாக இருந்தது. சுஜாதா அவர்களின் புத்தகங்கள் மற்றும் இன்டர்வியூக்களில் பார்த்து இருக்கலாம். நம்ம 90 ஸ் கிட்ஸ்க்கு வெப் பிரவுஸ் பண்ணுவதில் ரொம்பவுமே அதிகமான எக்ஸ்பீரியன்ஸ் இருக்கலாம். வெறும் 10 எம். பி. ஸ்டோரேஜ் இருக்கும் ஃபோன்களை எல்லாம் வைத்துக்கொண்டு முடிந்தால் அந்த போனுக்கும் 256 எம். பி. மெமரி கார்ட் போட்டு வால்பேப்பர்கள், ரிங்டொன்கள், J2ME ல S40 , S60 வீடியோகேம்கள் மற்றும் ஆப்ஸ்கள் எல்லாம் பயன்படுத்திய காலத்தில் 25 எம். பி. க்கு எல்லாம் நெட் கார்ட் போட்ட காலங்கள் இருந்தது. இது எல்லாமே நம்ப முடியாவில்லை என்றால் லின்க் நான் டெஸ்க்ரிப்ஷனில் கொடுக்கிறேன். இப்போது வெப்ஸைட்க்கு விஸிட் பண்ணும் ஆடியன்ஸ் எல்லாம் குறைந்துவிட்டார்கள். 2010 - 2014 தான் நான் பிளாக்ஸ்பாட்ல கடைசியாக எல்லோருமே அப்டேட் பண்ணுண காலம். YT ல 10 நிமிஷம் வீடியோவை EDGE ல 22 KBPS ல டவுன்லோட் பண்ணி பார்க்கவே ரொம்ப கஷ்டமாக இருந்த நாட்களில் 3G HSPA என்று ஒரு டெக்னாலஜி களத்தில் இறங்கியது. 140KBPS ரோம்ப நல்ல ஸ்பீட் ரேட்தானே !!  எல்லோருமே யூடயூப் பக்கம் சென்றுவிட்டார்கள். சினிமா படங்கள் தாறு மாறாக சூப்பர் ஹிட் ஆன காலம் அதுதான். உலகம் DVD ல இருந்து PENDRIVE க்கு அப்டேட் ஆனது. இங்கே பெரிய இலாபம் பார்த்த தலைவர் திமிங்கலம் யூட்யூப்தான். இந்த காலம்தான் சேனல்கள் ஆரம்பித்த இணையவாசிகளுக்கு சொர்க்கமான காலம். சின்ன சின்ன கிளிப்ஸ்கள் கூட நல்ல வியூக்களை பெற்றது. ஒரு காலத்தில வெப்ஸைட்ஸ் அவசியம் இல்லை என்று ஆகிவிட்டது. இப்போ விக்கிப்பீடியாவும் , ஃபேன்டம் வெப்ஸைட்டுமே சேரந்து ஃபிக்ஷன் மற்றும் நான் ஃபிக்ஷன்க்கான விஷயங்களை எழுதும் வேலையை பார்ப்பதர்க்கு ஒரு கம்யூனிட்டியை உருவாக்கிவிட்டார்கள். இதுக்கு அப்புறம் பிளாக்ல எழுதும் எழுத்தாளர்களுக்கு வியூக்கள் கிடைக்கவே இல்லை. அப்புறம் எதுக்காக எழுத வேண்டும் என்று ஒரு கேள்வியே வந்துவிட்டது. இது எல்லாம் எப்படியோ போகட்டும் பிளாக்ல சாதிக்கலாம் என்று நானும் கொஞ்சம் வேலை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.இந்த குறிப்பிட்ட காலங்களை மறக்கவே முடியாது. ஒரு நாள் அன்லிமிட்டட் நெட் பேக் போட்டுவிட்டு அதிகப்பட்சமாகவே 11 எம். பி. வரைக்கும்தான் டவுன்லோட் கணக்கு எழுதிக்கொண்டு இருந்தோம். அதுக்கு மேல பண்ண முடியல , பண்ண தெரியாது எங்களுக்கு , இந்த PHONEKY மாதிரி வெப்ஸைட்கள் எல்லாம் உங்களுக்கு தெரியுமா ? பட்டன் ஃபோன்களுக்காவே அர்ப்பணம் பண்ணப்பட்ட வெப்ஸைட் இந்த வெப்ஸைட், 240 x 320 என்று ஒரு குட்டி ரெஸால்யூஷனில் 80 KB க்கு எல்லாம் WALLPAPER கள் பதிவிறக்கம் பண்ணினோம். கண்டிப்பாக WWW.ANNIYAN.COM வெப்ஸைட்டை விஸிட் பண்ணாமல் இருந்ததே இல்லை. குட்டி மூவிஸ் , இசைமினி இந்த மாதிரி வெப்சைட்ஸ்தான் அப்போது மோஸ்ட் விஸிட்டட் என்று இருந்தது. டெக்னாலஜியின் வளர்ச்சியை பொறுத்த வரைக்கும் சூர்யா அவர்களின் அயன் என்ற படத்தின் காட்சிகளில் எந்த அளவுக்கு இருந்ததோ அந்த அளவுக்குதான் இருந்தது. 4G தான் கதையயே மாற்றியது. எனக்கு தெரிந்த வரைக்கும் 4G ல நிறைய சேல்ஸ் கொடுத்தது நம்ம JIO தான். இந்த LYF ஃபோன்களில் 4G வரும்போது மொத்த கிளாஸ்ல இருக்கும் எல்லோருமே ஒரே ஒரு தனி ஃபோன்னின் ஹாட்ஸ்பாட் பயன்படுத்தி டவுன்லோட்கள் மற்றும் வீடியோ கேம்கள் பயன்படுத்திக்கொண்டு இருந்தோம். குறிப்பாக கிளாஸ் ஆஃப் க்லான்ஸ் என்ற வீடியோகேம்தான் இந்த 4G காலத்தில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இன்னைக்கு உலகத்தில் இருக்கும் எல்லா டெக்னாலஜிக்குமே ரொம்ப பெரிய LEAP ஆக இந்த 4G இன் அறிமுகம் இருந்தது. இருந்தாலும் மோசமான அதிர்ஷ்டம் (பேட் லக்) என்னவென்றால் இங்கே மாட்டிக்கொண்டது நம்ம BLOG கள்தான். யாருக்குமே BLOGS படிக்க வேண்டிய அவசியமே இல்லாமல் போய்விட்டது . இங்கே எந்த விசப்ளையாபாரமாக இருந்தாலும் DEMAND இல்லை என்றால் SUPPLY யுமே இல்லை. BLOG லயும் அதுதான். போதுமான DEMAND இல்லாமல் போனதால் SUPPLY யாக யாருக்குமே POST பண்ண வேண்டிய அவசியமும் இல்லாமல் போய்விட்டது. இன்னும் குறிப்பாக சொல்லப்போனால் யாருமே இல்லாத கடையாக இந்த பிளாக் மற்றும் வெப்ஸைட்கள் மாறிப்போனதால் இந்த கடையில் யாருக்குமே டீ , காப்பி மற்றும் பட்டர் பிஸ்கட் கொடுக்க வேண்டிய அவசியமே இல்லாமல் போய்விட்டது. இந்த RISE அண்ட் FALL ஒரு பெரிய TOPIC நான் போதுமான BACKGROUND RESEARCH பண்ணிவிட்டு இன்னுமே நிறைய தகவல்களோடு இன்னொரு போஸ்ட் பண்ணுகிறேன்.இந்த கட்டுரையை ரொம்ப சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் இன்றைக்கு தேதிக்கு மக்களுக்கு கிடைக்க வேண்டிய எல்லா விஷயங்களுமே வீடியோ ஃபார்மட்டில் கிடைத்துவிடுகிறது. இ- புத்தகங்களின் மார்க்கெட்டையும் பாட்கேஸ்ட்கள் எடுத்துக்கொண்டுவிட்டது. இனிமேல் டெக்ஸ்ட்ல இருந்து ஒரு விஷயத்தை தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் மக்களுக்கு இல்லை. இன்னொரு முக்கியமான காரணம் வலைப்பூக்களை தொழில் முறையில் நடத்தினால் காசு பணம் நிறைய செலவு ஆகும். இங்கே செலவு ஆக ஆக பர்ஸ்க்கு பணமும் நிறையவே தேவைப்படும். போதுமான பணம் கிடைச்சாதான் 2.0 மற்றும் 3.0 என்று அப்டேட் பண்ண முடியும். இல்லைன்னா சொந்த காசை போட்டு சொந்த நேரத்தை போடவேண்டியது இருக்கும். என்ன போட்டாலும் கன்டன்ட் என்று யூட்யூப் மாடல் போல எல்லாம் வலைப்பூக்கள் வொர்க் அவுட் ஆகாது. வலைப்பூக்களில் கவனமாக எழுதவேண்டியுள்ளது. இன்னைக்கு காலத்தில் உலகம் எப்படி மாறிவிட்டது என்றால் நீங்கள் வெற்றி அடைய வேண்டும் என்றால் உங்களுக்கு எதிராக இருப்பவர்கள் தோற்றாக வேண்டும். இங்கே இந்த மாதிரி வலைப்பூக்களை தொழில் முறையில் பண்ணும்பொது தொழில் போட்டி அவ்வளவு பலன் கொடுப்பது இல்லை. இங்கே ஆங்கில வலைப்பூக்கள் வியூக்களுக்கு தள்ளாடுகிறது என்றபோது தமிழ் வலைப்பூக்கள் சுத்தம் சுகாதாரம்தான். இங்க்லிஷ் காரன் ஹாரி பாட்டர் மாதிரி பெரிய லெவல்ல யோசிக்கிறான் ஆனால் தமிழ்ல இன்னைக்கு தேதிக்கு ஹீரோக்கள் எழுத்துத்துறையில ரொம்ப கொஞ்சம். கணேஷ் - வசந்த் , நரேந்திரன் , பொன்னியின் செல்வன் , இந்த மாதிரி லேஜெண்ட்டரி ஃபிக்ஷன்னல் ஹீரோஸ் (மனசு அண்ணாச்சி பக்கம் போகுதே !!) மாதிரி சமீப காலங்களில் புத்தக துறையில் ஹீரோக்கள் ரொம்பவுமே குறைந்துவிட்டார்கள். பிரைவேட் பள்ளிக்கூடங்களில் படிக்கும் பசங்களுக்கு தமிழ் அதிகமாக புரிவதே இல்லை. அவர்களுக்குமே உலகமே இங்கிலீஷ்ல போகும்போது நம்ம தமிழில் எழுதப்படும் எழுத்துக்களில் அதிக ஈடுபாடு இருப்பது போல எனக்கு தோன்றவில்லை. இன்னும் சில ஆசிரியர்கள் கரோனாவுக்கு பின்னால் கிளாஸ்க்கு வந்தால் சப்ஜெக்ட் சொல்லிக்கொடுப்பதை விட்டுவிட்டு ஃபோன்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பதே ரொம்ப தர்ம சங்கடமாக இருக்கிறது. இதனால் என்னுடைய கருத்து என்னவென்றால் தமிழ் வலைப்பூக்கள் ஒரு அவுட் டேட்டட் விஷயமாக மாறிவிட்டது. போதுமான பணம் இல்லை. இது மட்டும்தான் காரணம் !!

No comments:

Post a Comment

CINEMA TALKS - MISSION IMPOSSIBLE GHOST PROTOCOL - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

சொந்த நாட்டின் பாதுகாப்புக்காக வெளிநாட்டில் தங்களுடைய உயிரை பணயம் வைத்து மிஷன்னை முடிக்க வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள் கதாநாயகன் ஈதன் மற...