காலத்தின் அட்வாண்டேஜ் - நம்ம செய்ய வேண்டிய செயல்களுக்கான சரியான காலகட்டம் வரும்போது போதுமான பணம் இருப்பவர்களால் மட்டும்தான் அட்வாண்டேஜ்ஜை பயன்படுத்த முடியும், உங்களுக்கு தமிழ் வலைப்பூக்களின் பொற்காலம் பற்றி தெரியுமா ? பொதுவாக இன்டர்நெட் எல்லாம் ஃபோன்களில் பயன்படுத்த முடியும் என்ற வசதிகள் உலகம் முழுக்க இருக்கும் ஃபோன்களில் வந்த காலம் 2007 ம் வருடத்தில் இருந்துதான். 2007 முதல் 2014 வரைக்கும் இன்டர்நெட் காலத்தின் பொற்காலம். அப்போது எல்லாம் பிளாக்ல என்ன போட்டாலும் நிறைய வியூக்கள் கிடைக்கும். காரணம் என்னவென்றால நிறைய பேர் இன்ஃபர்மேஷன் வேண்டும் என்ற காரணத்துக்காக இன்டேர்நெட்டின் கடலுக்குள் குதிக்கும்போது அவர்களுக்கு தேவையான விஷயம் வலைப்பூக்கள்லில் இருந்தது. பிளாக் கம்யூனிட்டி அப்போது டாப் ரேங்க்கிங்கில் இருந்த காலம். அப்போது விளம்பரங்களை கொடுத்து பணம் சம்பாதித்தவர்கள் கொஞ்சம் மாதங்களில் கோடீஸ்வரர்கள் ஆகிவிட்டார்கள். அப்போது கம்ப்யூட்டர் , காமிரா , கன்டன்ட் இருப்பவர்களை எல்லாம் போட்டியே இல்லாத அந்த காலகட்டம் ரொம்ப பெரிய அட்வாண்டேஜ் இருப்பவர்களாக மாற்றி இருந்தது. அதுவுமே ஒரு பிளஸ் பாயிண்ட்தான். 14 கிலோ பைட் பெர் செகண்ட் (14 KBPS) என்பது ரொம்ப மட்டமான ஸ்பீட்தான் ஆனால் அந்த ஸ்பீட்டில் கருத்துக்களை வலைப்பூவில் போட்டவர்கள் வெள்ளி தட்டில் வெள்ளி ஸ்பூன்னில் சாப்பிடும் அளவுக்கு பணக்காரர்களாக மாறிவிட்டார்கள். அப்போது போதுமான பணம் இல்லாமல் இப்படி ஒரு அருமையான வாய்ப்பை மிஸ் பண்ணியவர்கள் ஒரு சில பேர் இப்போது அன்னாடும் காய்ச்சிகளாக இருக்கிறார்கள் (என்னைத்தான் சொல்கிறேன்). அதனால்தான் மக்களே வாய்ப்புக்காக காத்திருங்கள். பணத்தை வேஸ்ட் பண்ண வேண்டாம். உங்களுக்கு சரியான நேரம் இதுதான் என்று தெரிந்தால் இன்வெஸ்ட் பண்ணுங்கள். உங்களுடைய இன்வெஸ்ட்மேன்ட் உங்களை வெற்றி அடைய வைக்கும். இங்கே 5 பர்சென்டேஜ் மக்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற காரணத்துக்காக 95 சதவீத நக்கல் சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் நிலைமையில் இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது. இந்த மட்டமான பிரச்சனை இயற்கையின் நியதி கிடையாது. ஒரு பெரிய விஷயத்துடைய அபரிமிதமான வளர்ச்சியானது எப்படி நடக்கிறது என்றால் சின்ன சின்ன விஷயங்களில் இருந்து சக்திகளை உறிஞ்சிக்கொள்வதால்தான் என்ற கான்செப்ட் இருக்கிறதோ அதுதான் இங்கே நடக்கிறது.
No comments:
Post a Comment